அம்மாடியோவ் எவ்வளவு சொத்து.. துபாய் நகரத்தின் டாப் 10 பணக்காரர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகிலேயே மிகவும் முன்னேற்றமான மற்றும் வேகமாக வளர்ந்து வரும் நகரமாக துபாய் திகழ்கிறது. இந்த நகரம் அதன் உயர்ந்த தனிநபர் வருமானம், சிறந்த சுற்றுலாத்தளம் மற்றும் திறந்த பொருளாதாரம் ஆகியவற்றிற்காக உலகின் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

துபாய் அனைத்து நட்டவர்களுக்கும் ஒரு பரந்த திறந்த சந்தை மற்றும் உலகம் முழுவதும் இருந்து தொழிலதிபர்கள் மற்றும் தொழில்கள் பலவற்றை ஈர்த்து அங்கு வணிக உலகின் ஒரு பகுதியாக இருக்கும்படி செய்கிறது.

இந்த காரணத்தினாலேயே இந்நகரம் ஒவ்வொரு ஆண்டும் மில்லியனர்களையும் மற்றும் பில்லியனர்களையும் தொடர்ந்து உருவாக்கி வருகிறது. துபாயில் வசிக்கும் டாப் 10 பணக்காரர்களை பற்றியே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

 10. சைஃப் அல் குர்ரர்
 

10. சைஃப் அல் குர்ரர்

சைஃப் அஹ்மத் அல் குர்ரர், அல் குர்ரர் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இயக்குநராக உள்ளார். இக்குழுமம் யுஏஇயில் வீட்டுமனை மற்றும் உற்பத்தி துறைகளில் செயல்படுகிறது. இக்குழுமம் எஃகு, அலுமினியம் போன்ற பல உற்பத்தித் தொழில்களிலும், அடேகா அல் குர்ரர் அடிட்டிவ்ஸ் மற்றும் தாக்லிஃப் இண்டஸ்ட்ரீஸ் என்ற பாறையெண்ணெய் வேதிப்பொருட்கள் தயாரிக்கும் துணை நிறுவனங்களையும் கொண்டுள்ளது.

அவர் எமிரேட்ஸில் முன்னணியில் இருக்கும் மாஷ்ரேக் வங்கியின் முன்னணி பங்குதாரர்களில் ஒருவராக திகழ்கிறார். சைஃப் அல் குர்ரரின் நிகர சொத்து மதிப்பு $2.1 பில்லியன் ஆகும். இந்த சொத்து மதிப்பானது அவரை துபாயில் வசிக்கும் பெரும் செல்வந்தராக காட்டுகிறது.

9. சன்னி வர்கி

9. சன்னி வர்கி

சன்னி வர்கி துபாய் சார்ந்த இந்திய கல்வி நிறுவன தொழிலதிபர். இவர் ஜெம்ஸ் எடுகேஷன் என்ற கல்வி நிறுவனத்தை 10 க்கும் மேற்பட்ட நாடுகளில் 130 க்கும் அதிகமான பள்ளிகளில் உலகெங்கும் உள்ள தனியார் k-12 பள்ளிகளின் மிகப்பெரிய நடத்துனர் ஆவார்.

1959 ஆம் ஆண்டில், சன்னி வர்கி கேரள கல்வியாளர்கள் மற்றும் கிறிஸ்தவர்களான அவரது பெற்றோருடன் துபாய் சென்றார். அவர்கள் பின்னர் துபாயில் உள்ள உள்ளூர் மக்களுக்கு ஆங்கிலம் கற்பித்தனர். 1977 ஆம் ஆண்டில் அவர் தனது பெற்றோர்களின் பள்ளிக்கூடத்தின் பொறுப்பேற்றார். பள்ளியை விரிவுபடுத்தினார். மேலும் புதிய பள்ளிகளையும் சேர்த்துக் கொண்டார்.

பின்னர் 2000 ஆம் ஆண்டில் வர்கி குளோபல் எஜுகேஷன் மேனேஜ்மென்ட் சிஸ்டம்ஸ் (ஜி.இ.எம்.எஸ்) என்ற ஆலோசனை மற்றும் கல்வி நிர்வாக நிறுவனத்தை நிறுவியதோடு, இப்பகுதியில் மிகவும் வெற்றிகரமான கல்வி கழகமாக மாற்றினார். அவருடைய நிகர சொத்து மதிப்பு $2.5 பில்லியன் ஆகும். மேலும் அவர் துபாயில் வசிக்கின்ற செல்வந்தர்களுள் ஒருவராக திகழ்கிறார்.

8. பி. ஆர். ஷெட்டி
 

8. பி. ஆர். ஷெட்டி

பி.ஆர். ஷெட்டி 1972 ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு குடிபெயர்ந்த கேரள தொழிலதிபர் ஆவார். இவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள மிகப் பெரிய மருத்துவமனை சங்கிலியான என்எம்சி ஹெல்த்தின் நிறுவனர் ஆவார்.

மேலும் அவர் மருந்தியல் நிறுவனமான 'நியோபார்மா' நிறுவனத்தின் நிறுவனர், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண் இயக்குனர் ஆவார். அவரது பிஆர்எஸ் வென்ச்சர்ஸ் கெய்ரோவில் ஒரு மருத்துவமனையையும், அலெக்ஸாண்டிரியாவிலுள்ள ஒரு மருத்துவமனையையும், நேபாளத்தில் இரண்டு மருத்துவமனைகளையும் சொந்தமாகக் கொண்டது.

மேலும் 400-படுக்கைகள் கொண்ட மிகச்சிறப்பு வாய்ந்த மருத்துவமனையையும் கர்நாடகா, இந்தியாவில் உருவாக்குகிறது. ஷெட்டி ஒருகாலத்தில் இந்தியாவில் மருந்து விற்பனையாளராக இருந்தார், ஆனால் தற்போது துபாயில் வசிக்கும் 3.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள பணக்காரர்களில் ஒருவர் இவர்.

7. ஹூசைன் சஜ்வானி

7. ஹூசைன் சஜ்வானி

"துபாயின் டொனால்ட்" என்று அழைக்கப்படும் ஹூசைன் சஜ்வானி, துபாய் சார்ந்த பில்லியனராகவும், குடியிருப்பு வீட்டுமனை கட்டுமான நிறுவனமான டாமாக் பிராபர்ட்டிஸ் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார். 2002 ஆம் ஆண்டில், அவர் டாமாக் பிராபர்ட்டிஸ் நிறுவனத்தை நிறுவினார். இது மத்திய கிழக்கில் மிகப் பெரிய குடியிருப்பு வீட்டுமனை கட்டுமான நிறுவனமாக வளர்ந்துள்ளது.

துபாயின் சொத்து சந்தை விரிவாக்கத்தின் முன்னோடிகளில் ஒருவராக சஜ்வானி இருந்தார். இன்று அவர் துபாயில் 200க்கும் மேற்பட்ட திட்டங்களை நிர்வகிக்கும் மிக முக்கியமான நபர்களில் ஒருவர். துபாயில் டொனால்ட் டிரம்ப்பின் வர்த்தக கூட்டாளியாகவும், 2013 ஆம் ஆண்டு முதல் துபாய் நகரில் இரண்டு டிரம்ப் சர்வதேச கோல்ஃப் கிளப்பை உருவாக்கியுள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு $3.4 பில்லியன் ஆகும்.

 6. ரவி பிள்ளை

6. ரவி பிள்ளை

துபாயில் தற்போது வசித்து வரும் முதன்மையான 10 பணக்காரர்களின் வரிசையில் மற்றுமொரு இந்தியர் ரவி பிள்ளை ஆவார். இவர் வியாபாரத்தில் 70,000 க்கும் மேற்பட்ட பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி இருக்கும் ஆர்பி குழுமத்தின் நிறுவுனர் ஆவார். ரவி பிள்ளைக்கு பல்வேறு இதர தொழிற்துறைகளான கட்டுமானம், ஸ்டீல், சிமெண்ட், விருந்தோம்பல், எண்ணை மற்றும் எரிவாயு துறைகளிலும் ஆர்வம் இருக்கிறது.

மேலும் கேரளாவில் அவருக்கு சொந்தமாக ஒரு வணிகவளாகம் மற்றும் கொல்லம் நகரத்தில் ஆர்பி வணிகவளாகம் இருக்கின்றன. ரவி தனது வியாபாரத்தை அரேபிய எமீரகம், கத்தார், பஹ்ரைன் உள்ளிட்ட இதர நாடுகளிலும் விரிவுபடுத்தியுள்ளார் மேலும் இவர் மத்திய கிழக்கு நாடுகளில் மிகப்பெருமளவு எண்ணிக்கையில் இந்தியர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களில் ஒருவராவார். இவர் துபாயிலுள்ள மிகப்பெரிய செல்வந்தர்களுள் ஒருவராவார் மேலும் இவருடைய சொத்து கிட்டத்தட்ட அமெரிக்க டாலரில் 3.6 பில்லியன் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

5. அப்துல்லா அல் ஃபத்திம்

5. அப்துல்லா அல் ஃபத்திம்

அப்துல்லா அல் ஃபத்திம் அல் ஃபத்திம் குழுமத்தை சொந்தமாகக் கொண்டிருக்கும் அதை நிர்வகிக்கும் தொழிலதிபரும் மற்றும் முதலீட்டாளரும் ஆவார். இது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மிகப்பெரிய பல்வேறு குழுமங்களின் ஒருங்கிணைந்த நிறுவனமும் மற்றும் ஹோண்டா மற்றும் டொயோட்டா வாகனங்களின் ஒரே விநியோகஸ்தரும் ஆவார்.

மேலும் அப்துல்லா அல் ஃபத்திம் பல்வேறு வித்தியாசமான தொழிற்துறைகளான காப்பீடு, சில்லறை வர்த்தகம், மின்னணு உற்பத்தி பொருட்கள், பொறியியல், சேவைகள், ரியல் எஸ்டேட் மற்றும் சொத்து மேம்பாடு போன்றவற்றை கையாளும் நிறுவனத்தை சொந்தமாகக் கொண்டிருக்கிறார். இதன் அனைத்துப் பிரிவுகளும் ஐக்கிய அரபு அமீரகத்திலும் அதன் சுற்றுப்புற பிரதேசங்களிலும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றது.

இவருடைய குழுமம் 44,000 க்கும் மேற்பட்ட நபர்களை வேலையில் அமர்த்திக் கொண்டுள்ளது. இவருடைய சொத்துக்க்ளின் நிகர மதிப்பு அமெரிக்க டாலரில் 4.1 பில்லியன் ஆகும். இவர் துபாயில் வாழும் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராவார்.

4. மிக்கி ஜக்தியானி

4. மிக்கி ஜக்தியானி

மிக்கி ஜக்தியானி ஒரு காலத்தில் லண்டனில் டாக்சி ஓட்டுனராகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர். தற்போது துபாயை அடிப்படையாகக் கொண்ட இந்தியத் தொழிலதிபராக ‘லேண்ட்மார்க் க்ரூப்' என்றழைக்கப்படும் துபாயை அடிப்படையாகக் கொண்ட சில்லறை விற்பனை கடைகளுக்கு சொந்தக்காரர்.

இவருடைய லேண்ட் மார்க் க்ரூப் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் அமெரிக்க டாலரில் 6 பில்லியன் மதிப்புடையதாக மதிப்பிடப்பட்டுள்ளது. லேண்ட்மார்க் நிறுவனம் ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளில் 1,000 க்கும் மேற்பட்ட கடைகளைக் கொண்டிருக்கிறது. பல வருடங்களாக அவர் தனது நிறுவனத்தை ஃபேஷன், மின் சாதனங்கள், மரச்சாமான்கள் மற்றும் பட்ஜெட் உணவகங்கள் என்று மத்திய கிழக்கு நாடுகளிலும் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலும் விரிவுபடுத்தியுள்ளார்.

ஏப்ரல் 2017 நிலவரப்படி, மிக்கி ஜக்தியானி அமெரிக்க டாலரில் 4.5 பில்லியன் நிகர மதிப்புடைய சொத்துக்களைக் கொண்டிருக்கிறார். இவர் துபாயிலுள்ள மிகப்பெரிய பணக்காரர்களில் நான்காவது இடத்திலும் மற்றும் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராகவும் இருக்கிறார்.

3. யூசுஃப் அலி எம்.ஏ

3. யூசுஃப் அலி எம்.ஏ

யூசுஃப் அலி எம்.ஏ இநதியாவில் பிறந்த துபாயை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொழிலதிபராவார். இவர் 1973 இல் அமீரகத்திற்கு இடம்பெயர்ந்தார். இவர் மத்திய கிழக்கு நாடுகளில் லூலூ உயர்சந்தை சங்கிலித்தொடர்களை சொந்தமாகக் கொண்டிருக்கும் லூலூ சர்வதேச குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ஆவார்.

உலக அளவில் இந்த லூலூ சர்வதேச குழுமம் அமெரிக்க டாலர் மதிப்பில் 7.4 பில்லியன் ஆண்டு விற்பனை அளவை கொண்டுள்ளது மேலும் இந்தியாவிற்கு வெளிப்புறத்திலிருந்து மிக அதிக அளவு எண்ணிக்கையில் இந்தியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் யூசுஃப் அலி சில்லறை விற்பனையின் அரசனாக அறியப்படுகிறார். இவருக்கு இந்தோனேஷியா, எகிப்து, இந்தியா, மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளில் 133 கடைகள் இருக்கின்றன.

அமெரிக்க டாலர் மதிப்பில் 5.2 பில்லியன் தனிப்பட்ட சொத்துக்களுடன் தற்போது துபாயில் வசிக்கும் முதன்மையான 10 பணக்காரர்களின் எங்கள் பட்டியலில் யூசுஃப் அலி தற்போது மூன்றாவது இடத்தில் நிற்கிறார். யூசுஃப் அலி பல்வேறு சமூக நடவடிக்கைகளில் மிக நெருக்கமாக ஈடுபட்டுள்ளார். இவருடைய நிறுவனம் காஜாவிலும் நேபாளத்திலும் உள்ள துபாய் பராமரிப்பு மற்றும் தத்து பள்ளிகளுடன் கைகோர்த்துள்ளது.

2. அப்துல்லா அல் குரைர்

2. அப்துல்லா அல் குரைர்

அப்துல்லா அல் குரைர் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள முன்னணி வங்கிகளில் ஒன்றான மாஷ்ரெக் வங்கியின் தலைவரும் நிறுவுனரும் ஆவார். இவர் 1954 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறந்தார். அல் குரைரின் குடும்ப செல்வம் பிற நிறுவனப் பங்குகளையும் கொண்ட நிறுவனமான அல் குரைர் குழுமம் என்றழைக்கப்படும் நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது.

இந்த குழுமம் உணவு, சில்லறை விற்பனை மற்றும் கட்டுமானத் தொழிற்துறைகளை கையாள்கிறது. அப்துல்லா அல் குரைர் மாஷ்ரெக் வங்கி தொடங்கப்பட்டது முதற்கொண்டு அதன் அதிபராகவும் தலைவராகவும் இருக்கிறார். இவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக முக்கியமான தொழிலதிபர்களில் ஒருவராவார்.

2015 ஆம் ஆண்டு ஜுன் மாதம் அவர் தனது சொத்துக்களில் தோராயமாக மூன்றில் ஒரு பகுதியை அமீரகத்திலும் மற்றும் இதர அரோபிய நாடுகளிலுமுள்ள கல்வித் திட்டங்களுக்கு நன்கொடையாக அளிப்பதாக அறிவித்தார். இதன் குறிக்கோள் 15,000 அமீரக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதாகும். அமெரிக்க டாலர் மதிப்பில் 7 பில்லியன் நிகர சொத்து மதிப்புடன் அப்துல்லா அல் குரைர் துபாயிலுள்ள மிகப் பெரிய பணக்காரர்களில் இரண்டாவது இடத்தைப் பிடிக்கிறார்.

1. மஜித் அல் ஃபத்தைம்

1. மஜித் அல் ஃபத்தைம்

துபாய் நகரில் வசிக்கும் செல்வந்தர்களின் பட்டியலில் முதலிடம் பிடிப்பவர் மஜித் அல் ஃபத்தைம். 10.6 பில்லியன் மதிப்புள்ள நிகர சொத்து மதிப்பைக் கொண்டு, அவர் துபாய் நகரத்தின் பணக்காரராகவும் தொழிலதிபராகவும் உள்ளார். அவர் தனது சகோதரருடன் அல் ஃபத்தைம் சாம்ராஜ்யத்தை பிளவுபடுத்திய பின்னர், 1992 இல் மஜித் அல் ஃபத்தைம் குழுவை நிறுவினார்.

அவர் வைத்துள்ள நிறுவனமானது மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் வணிக வளாகங்கள், சில்லறை விற்பனை மற்றும் பல்பொருள் அங்காடி நிறுவனங்களை 15 சர்வதேச சந்தைகளில் செயல்படுத்தி, 33,000 க்கும் மேற்பட்ட மக்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. மஜித் அல் ஃபத்தைம் நிறுவனம் துபாயில் உள்ள முதல் ஐந்து வணிக வளாகங்களில் ஒன்றான எமிரேட்ஸின் வணிக வளாகத்தை நடத்துகிறது. மஜித் அல் ஃபத்தைம் துபாயின் மிகப்பெரிய பணக்காரர் மற்றும் மத்திய கிழக்கில் இரண்டாவது பணக்காரர் ஆவார்.

பங்கு சந்தை

பங்கு சந்தை

ஸ்மால் கேப் பங்குகளில் வெளிநாட்டு ஊழியர்கள் முதலீடு செய்ய நேரடியாக அனுமதி: சவுதி அரேபியா

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

10 Richest People Living in Dubai Right Now

10 Richest People Living in Dubai Right Now
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more