வெள்ளை மாளிகை மீது தாக்குதலா..? 29 பில்லியன் டாலருடன் America அதிபர் ராஜினாமா..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் பாதுகாவலன் போல வேடம் போட்டு ஊரை ஏமாற்றிய வரலாறு கொண்ட நாடு America..! அந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக ஒரே ஒரு அதிபர் மட்டும் ராஜினாமா செய்தார் ஏன்..? வெள்ளை மாளிகை யாரால், எப்போது தாக்கப்பட்டது..? ஜார்ஜ் வாசிங்டன் அமெரிக்காவில் எட்டாவது அதிபரா..? மேற்கொண்டு படியுங்களேன்.

 

முதல் அதிபர்

முதல் அதிபர்

அமெரிக்காவின் முதல் அதிபர் யார்...? ஜார்ஜ் வாசிங்டன்  என்றால் தப்பு தப்பு தல கீழ நொப்பு. John Hanson என்பது தான் சரியான விடை. ஆனால் அமெரிக்க அரசியலின் உச்சமான வெள்ளை மாளிகை நடத்தும் வலைதளத்தில் கூட இந்த உண்மை இருக்காது..? அமெரிக்கா சுதந்திரம் பெற்றது 1776. பிரிட்டன் உடனான போர் முடிவுக்கு வந்தது வெர்ஸைல்ஸ் ஒப்பந்தமான 1783-ல். ஆனால் முதல் அதிபராக வாசிங்டன் டிசி பதவி ஏற்றுக் கொண்டது 1789-ல். இப்போது கணக்கு இடிக்கிறதா...? மேலே சொன்ன பெயரை வலைதளத்தில் போட்டுத் தேடுங்கள் இன்னும் பல சுவாரஸ்யமான விஷயங்கள் கிடைக்கும்.

அப்ப இவரு

அப்ப இவரு

புரிகிறது... நாம் சரித்திரப் புத்தகங்களில் படித்த வாசிங்டன், முறையாகப் பார்த்தால் அமெரிக்காவின் எட்டாவது ஜனாதிபதி தான். இவர் தான் அமெரிக்க அரசியலில் நான்கு ஆண்டு காலம் அதிபராக பதவியில் இருந்து முதல் நபர். அதுவரை அமெரிக்காவில் ஒரு அதிபருக்கு ஒரு ஆண்டு தானாம். இவர் பார்த்து தேர்ந்தெடுத்த இடத்தில் தான் இன்று வெள்ளை மாளிகை உட்பட நாட்டின் தலை நகர் வரை எல்லாமே இருக்கின்றன. ஆனால் அந்த தலைநகரிலோ அல்லது வெள்ளை மாளிகையிலோ ஒரு நாள் கூட இந்த மனிதர் இருந்ததில்லை.

12 ஆண்டுகளா..?
 

12 ஆண்டுகளா..?

The Great depression என பொருளாதார மேதைகளால் சொல்லப்பட்ட 1929 பொருளாதார பிரச்னைக்குப் பிறகு அமெரிக்காவை முன்னேற்றப் பாதைக்கு எதார்த்தமாக அழைத்து வந்தவர் Franklin D. Roosevelt. அமெரிக்காவில் ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபராக பதவி வகிக்க முடியும். ஆனால் Franklin D. Roosevelt-ன் திறமைக்காக மேலும் இரண்டு முறை வழங்கப்பட்டது. அதாவது நான்கு முறை அதிபராக பதவியில் அமர்த்தப்பட்டார். காரணம் இரண்டாம் உலகப் போர். ஆனால் மனிதரால் தாக்கு பிடிக்க முடியவில்லை போல நான்காவது முறை அதிபராக இருந்த போதே மாரடைப்பில் இரண்டாம் உலகப் போருக்கு மத்தியிலேயே இறந்துவிட்டார். 12 ஆண்டு, 2 மாதம், 23 நாட்கள் ஆட்சி செய்த ஒரே அதிபர்.

முதல் ராஜினாமா

முதல் ராஜினாமா

ugust 09, 1974, I hereby resign the office of president of the unites sttes. Sincerely, Richard M Nixon 11.35 AM என அசால்டாக பதவி விலகியவர் நம் நிக்ஸன் துறை தான். மனிதர் நம் காங்கிரஸ் பாஜக போல ஒரு பெரிய ஊழலில் ஈடுபட்டார். அந்த ஊழலில் பெயர் வாட்டர் கேட் உழல் (Watergate Scandal). இந்த பதவி விலகலுக்குப் பிறகு தான் அமெரிக்க அதிபர் பதவி விலக வேண்டுமானால் உள் துறை அமைச்சரிடம் கொடுத்துவிட்டு விலகலாம் என அமெரிக்காவே தெரிந்து கொண்டது.

ப்ளேபாய் அதிபர்

ப்ளேபாய் அதிபர்

ச்சே... ச்சே.. இப்படி எல்லாம் அமெரிக்க அதிபர் இருப்பாங்களா என்ன..? அசிங்கமா பேசாதயா என்று என் மீது கோவப் படுபவர்கள் நம் பில் க்ளிண்டனின் வாழ்கையைப் புரட்டிப் பாருங்கள். ஜான் கென்னடிக்கு எத்தனை பெண்களுடன் காதும் காதும் வைத்தாற் போல உறவு இருந்ததோ அதை விட சில பல மடங்கு அதிகமாக வரும் போகும் பெண்களோடு எல்லாம் உறவு கொண்டார் நம் பிள் க்ளிண்டன். இவர் பொறுப்பில் ஒழுங்காக ஆட்சி செய்தது இவர் மனைவி ஹிலாரி க்ளிண்டன் தான். இத்தனைக்கும் ஹிலாரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பில் க்ளிண்டன். உலகப் புகழ் மோனிகா லெவின்ஸ்கி பிரச்னைக்கு காரணகர்த்தாவும் நம் பில் க்ளிண்டன் தான். மீடியா முழுவதும் பொம்பல பொறுக்கி என எள்ளி நகையாடப்பட்டார் பில் க்ளிண்டன்.

இலங்கைக் கடற்படை அட்டுழியம்.. 20 தமிழக மீனவர்கள் கைது

இலங்கைக் கடற்படை அட்டுழியம்.. 20 தமிழக மீனவர்கள் கைது

இப்படி1800-ம் ஆண்டு கால கட்டங்களில், அமெரிக்க வணிகர்கள், வியாபாரிகள், கடலோடிகளை இங்கிலாந்தும், பிரான்சும் கைது செய்து வைக்கும். அப்போது பல கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்தி அமெரிக்கா தன் நாட்டு மக்களை மீட்கும். அந்த காலத்தில் அமெரிக்காவுக்கு அத்தனை வலு கிடையாது. பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின், டச்சுக்காரர்கள் தான் பெரிய தவுளத்துக்கள். அதான் பேச்சு வார்த்தை எல்லாம்.

Olympus has fallen

Olympus has fallen

அந்த படத்தில் அமெரிக்க வெள்ளை மாளிகையை தீவிரவாத கும்பல் கைப்பற்றுவது போல் கதை இருக்கும். அப்படி உண்மையாகவே கைப்பற்ற முடியுமா..? கைப்பற்றி இருக்கிறார்களா எனக் கேட்டால் ஆம் தான் விடை. 1812-ல் ஒரு சில்லறைப் போரில் பிரிட்டீஷ் ராணுவத்தை துவைத்து எடுத்தது அமெரிக்கா. அந்த போரின் தொடர்ச்சியாக தலைநகர் வாசிங்டன்னை நோக்கி படை எடுத்து கிட்ட தட்ட அமெரிக்காவை அழித்தே விட்டார்கள் பிரிட்டீஷ்காரர்கள். 1815-ல் வெள்ளை மாளிகையைத் தாக்கும் போது அதிபர் ஜேம்ஸ் மேடிசன் உட்பட அனைவரும் வெள்ளை மாளிகை விட்டு மறைந்திருந்து பொரை நடத்தினார்கள். அதிபர் மனைவி டாலி மேடிசன் மட்டும் கொஞ்சம் தம் கட்டி முதல் (எட்டாவது) அதிபர் படத்தை (கையால் ஓவியம் வரைந்த படத்தை) மட்டும் எடுத்து வந்துவிட்டார். அப்படி இல்லை என்றால் இன்று வாசிங்டன் யார் என்றே உலகுக்கு தெரிந்திருக்காது.

Indian Removal Act

Indian Removal Act

அமெரிக்க செவ்விந்தியர்களால் ஒரு போதும் நவீன அமெரிக்கர்களோடு வாழ முடியாத தரித்திரங்கள். இவர்கள் நாட்டுக்குள் இருந்தால் வேலைக்கு ஆகாது. எனவே 1825-களில் இவர்கள் தங்கி இருந்து மிசசிப்பி, அலபாமா, கெண்டகி, டென்னஸி போன்ற மையப் பகுதிகளில் இருந்து, ஒக்ளஹோமா போன்ற ஒதுக்குப் புற பகுதிக ளுக்கு வலுக் கட்டாயமாக இடம் பெயர்க்கப்பட்டார்கள் அல்லது பெயர்த்து எடுத்தார்கள் என்பது உண்மை. aப்படி பெயர்த்து எடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60,000 - 1,00,000 வரை டிருக்கலாம் என பல்வேறு கணிப்புகள் இருக்கின்றன. இதனைக் கொண்டு வந்த மகான் 1930-களில் அமெரிக்க அதிபர் Andrew Jackson. ஆக தனக்கு பிடிக்காத மக்களை ஒரு சட்டம் இயற்ற ஜனநாயக முறையில் தூக்கி எறியலாம் என்பதை உலகுக்கு சொல்லிக் கொடுத்த நல்ல அதிபர்.

First lady யாருய்யா..?

First lady யாருய்யா..?

அமெரிக்காவில் அதிபரின் மனைவிகள், First lady என அழைக்கப்படுவார்கள். ஆனால் ஒரு அதிபருக்கு மட்டும் யாரை First lady-ஆக அழைப்பது என தெரியவில்லை காரணம் கல்யாணம் செய்து கொள்ளவில்லை. அவர் பெயர் James Buchanan. 1857 - 1861 வரை அமெரிக்க அதிபராக பதவி வகித்தவர். மனைவி இல்லாததால் இவரின் தங்கையை First lady-ஆக அறிவித்தார்கள். அந்த தங்கைக்கு திருமணம் ஆக அடுத்த தங்கையை First lady-ஆக அறிவித்தார்கள். அந்த வகையில் ஒரே கால கட்டத்தில் இரண்டு First lady-ஆக கண்ட அதிபரும் இவர் தான். அப்படிப் பட்ட சட்ட சிக்கலை அமெரிக்கா எதிர் கொண்டது அதுவே முதல் மற்றும் கடைசி முறை.

29 பில்லியன் டாலருக்கு சொந்தக்காரர்

29 பில்லியன் டாலருக்கு சொந்தக்காரர்

அமெரிக்காவின் முதல் (எட்டாவது) அதிபர் வாசிங்டன் தான் பெரும் பணக்கார அதிபர்களில் நம்பர் ஒன். பின்ன அந்த காலத்துப் பெரிய ஜமீன் தாருக்கு இத்தனை செல்வங்கள் இருக்காதா என்ன..? அதுவும் அமெரிக்க மண்ணின் மைந்தர்களான செவ்விந்தியர்களையும், ஆப்பிரிக்கர்களையும் அடிமைகளாக வைத்து கசக்கிப் பிழிந்து கொள்ளும் போது. இவருக்கு 1799 காலத்தில் அவர் இறந்த போது 580 மில்லியன் டாலர் சொத்து இருந்ததாக பல்வேறு தகவல்கள் சொல்கின்றன. அதை 120 ஆண்டுகளுக்கு ஏற்பட்ட பணவீக்கத்தோடு கணக்கிட்டால் 29 பில்லியன் டாலருக்கு வருமாம். ஆக இன்றைய அதிபர் டொனால்ட் டிரம்பை விட குறைந்த பட்சம் 10 மடங்கு பெரிய பணக்காரர் நம் வாசிங்டன்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: america usa
English summary

10 trivia about the nation called america

10 trivia about the nation called america
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X