12,000 பேர் பணிநீக்கம்: இன்டெல் நிறுவனத்தின் திடீர் முடிவு.. அதிர்ந்துபோன ஊழியர்கள்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹூஸ்டன்: உலகின் மிகப்பெரிய சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல், சர்வதேச அளவில் மிகப்பெரிய வர்த்தகத்தைச் செய்து வருகிறது.

கடந்த 50 ஆண்டுகளில் இன்டெல் நிறுவனத்துடன் சரிசமமாகப் போட்டிபோட யாரும் இல்லை என்பதே இந்நிறுவனத்தின் மிகப்பெரிய வெற்றி தான். இன்டெல் நிறுவனம் சிப் தயாரிப்பு மட்டும் அல்லாமல் வன்பொருள் மற்றும் பர்சனல் கம்பியூட்டர் தயாரிப்பிலும் உள்ளது.

இந்நிலையில் இன்டெல் நிறுவனம் தற்போது 12,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

பர்சனல் கம்பியூட்டர் (பிசி)

பர்சனல் கம்பியூட்டர் (பிசி)

இன்டெல் நிறுவனத்தின் பர்சனல் கம்பியூட்டர் பிரிவின் வர்த்தகம் கடந்த சில காலமாகத் தொடர்ந்து குறைந்து வருவதால் நிர்வாகத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கையின் பெயரில் இப்பிரிவில் பணியாற்றும் சுமார் 12,000 ஊழியர்களைக் கொத்தாக வெளியேற்ற உள்ளதாக அறிவித்துள்ளது.

1 லட்சம் ஊழியர்கள்

1 லட்சம் ஊழியர்கள்

டிசம்பர் மாத இறுதியில் நிலவரத்தின் படி இன்டெல் நிறுவனத்தில் சுமார் 1,07,300 பேர் பணியாற்றி வருகின்றனர். தற்போது அறிவித்துள்ளது படி சுமார் 11 சதவீத ஊழியர்களை நிறுவனத்தை வெளியேற்ற உள்ளதாகத் தெரிகிறது.

12,000 ஊழியர்கள்

12,000 ஊழியர்கள்

உலக நாடுகளில் உள்ள இன்டெல் நிறுவன கிளைகளில் வெளியேற்றப்படும் 12,000 ஊழியர்கள் 60 நாள் முன் அறிவிப்புடன் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர். இப்பணிகள் அனைத்தும் வருகிற 2017 ஆண்டு ஜூன் மாதத்திற்குள் முழுமையாக முடிக்க இன்டெல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பிசி வர்த்தகம்

பிசி வர்த்தகம்

2014ஆம் ஆண்டில் நிலையான வர்த்தகத்தைப் பெற்று வந்த பிசி பிரிவு, 2015ஆம் நிதியாண்டில் சந்தையில் பிசி விற்பனையை விட மொபைல் வர்த்தகம் சிறப்பாக இருந்த காரணத்தால் இன்டெல் கடுமையான வர்த்தகப் பாதிப்பை சந்தித்தது.

மைக்ரோபிராசஸர் மற்றும் சிப்

மைக்ரோபிராசஸர் மற்றும் சிப்

இன்டெல் நிறுவனத்தின் 60 சதவீத வருமான மைக்ரோபிராசஸர் மற்றும் சிப் விற்பனையின் மூலம் கிடைக்கப்பெறுபவை. இந்நிலையில், சந்தையில் மொபைல் விற்பனை அதிகரித்துப் பிசி விற்பனை குறைந்தால், இன்டெல் நிறுவனத்தின் மைக்ரோபிராசஸர் மற்றும் சிப் வர்த்தகமும் பாதிக்கும்.

இதன் காரணமாகத் தான் இன்டெல் நிறுவனத்தின் நிதிநிலையைச் சரிசெய்யப் பிசி வர்த்தகப் பிரிவில் உள்ள 12,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

 

1.4 பில்லியன் டாலர் சேமிப்பு

1.4 பில்லியன் டாலர் சேமிப்பு

இந்த 12,000 ஊழியர்கள் பணிநீக்கத்தின் மூலம் இன்டெல் நிறுவனம் 2016ஆம் ஆண்டில் 750 மில்லியன் டாலரும், 2017ஆம் ஜூன் மாதம் வரையில் 1.4 பில்லியன் டாலர் வரையிலான தொகையைச் சேமிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது.

புதிய வர்த்தகம்

புதிய வர்த்தகம்

இந்நிலையில் 2016ஆம் ஆண்டில் இன்டெல் நிறுவனம் லேப்டாப்-டேப்லெட் சாதனங்கள், மற்றும் கேமிங் பிரிவுகளில் அதிகளவிலான கவனத்தைச் செலுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

சக போட்டி நிறுவனங்கள்

சக போட்டி நிறுவனங்கள்

இன்றைய நிலையில் இன்டெல் நிறுவனத்திற்குச் சந்தையில் கடுமையாகப் போட்டி அளிப்பது AMD, Nvidia, Qualcomm, ARM மற்றும் ஐபிஎம் நிறுவனங்கள் தான்.

இன்று சந்தையில் குவிந்திருக்கும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் Qualcomm சிப்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில வருடமாக இந்நிறுவனத்தின் வர்த்தகம் 80 முதல் 120 சதவீதம் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

பணிநீக்கம்

பணிநீக்கம்

இந்திய மற்றும் உலக நாடுகளின் முக்கிய நிறுவனங்களின் பணிநீக்கம் குறித்த செய்திகளின் முழுமையான தொகுப்பு.

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

 

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

12,000 employees layoff: Is Intel trying to close PC division..?

Intel, the world’s largest microprocessor maker, will shed up to 12,000 jobs worldwide in a massive restructuring effort to reduce its dependence on the personal computer market which is witnessing sluggish growth.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X