'யாஹூ'.. முடிவுக்கு வந்த சகாப்தம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு காலத்தில் இணைய உலகைப் புரட்டி போட்ட யாஹூவின் சகாப்தம் 2016ஆம் ஆண்டில் முழுமையாக முடிவிற்க வந்தது. தொடர் வர்த்தகச் சரிவு, வாடிக்கையாளர் மத்தியில் சலிப்பு, நிறுவனத்தில் தொடர் பணிநீக்கம், புதிய முதலீட்டிலும் நஷ்டம் என மரிசா மேயர் தலைமையிலான யாஹூ நிறுவனம் மிகப்பெரிய சிக்கலில் சிக்கி வந்தது.

 

சில வருடங்களுக்கு முன்பு 20 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புடைய யாஹூ நிறுவனத்தை வெறும் 4.83 பில்லியன் டாலருக்குக் கைப்பற்றியுள்ளது அமெரிக்கத் தொலைத்தொடர்பு நிறுவனமான வெரிசோன். இதன் மூலம் 'யாஹூ' என்கிற மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜியம் 2016ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது.

இது வர்த்தக உலகில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு.!

அடிமாட்டு விலை

அடிமாட்டு விலை

அமெரிக்கத் தொலைத்தொடர்பு நிறுவனமான வெரிசோன், யாஹூ நிறுவனத்தை அடிமாட்டு விலையான 4.83 பில்லியன் டாலருக்குக் கொடுத்து முழுமையாகக் கைப்பற்றியுள்ளது.

இணையத்தில் மிகப்பெரிய மாற்றத்தைச் செய்த யாஹூ தற்போது இரண்டாம் இன்னிங்ஸை வெரிசோனுடன் துவங்கியுள்ளது.

2017ஆம் ஆண்டில் முடிவு

2017ஆம் ஆண்டில் முடிவு

இரு நிறுவனங்கள் மத்தியிலான கைப்பற்றல் 2017ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் முழுமை அடையும்.

பணிநீக்கம்

பணிநீக்கம்

2016ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தில் மட்டும் சுமார் 700 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது இண்டர்நெட் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான அதிர்வுகளை ஏற்படுத்தியது.

1 பில்லியன் கணக்குகள்
 

1 பில்லியன் கணக்குகள்

யாஹூ நிறுவனத்தில் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடுகள் மூலம் 2014ஆம் ஆண்டில் 500 மில்லயின் பயனாளர்கள் கணக்கு, 2013ஆம் ஆண்டில் மற்றொரு பாதுகாப்பு பரிச்சனையின் மூலம் மொத்த 1 பில்லியன் வாடிக்கையாளர்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

துவக்கம்

துவக்கம்

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்ற ஜெரி யங், டேவிட் ஃபிலோ என்ற இரு மின் பொறியியல் பட்டதாரிகளால் 1994 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் யாஹூ நிறுவனம் துவங்கப்பட்டது.

வளர்ச்சி

வளர்ச்சி

2000ஆம் ஆண்டுக்குப் பின் பல துறைகளில் யாஹூ நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியைச் சந்தித்தது. அதில் முக்கியமாகச் சீனா, ஜப்பான் சந்தையில்.

இ-காமர்ஸ் நிறுவனப் பங்கு

இ-காமர்ஸ் நிறுவனப் பங்கு

2005 ஆம் வருடம் சீனாவின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவில் ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்து தற்போது அலிபாபா நிறுவனத்தின் 32 பில்லியன் மதிப்புதக்க 15 சதவீத பங்குகளைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

யாஹூ ஜப்பான்

யாஹூ ஜப்பான்

மேலும் சாப்ட்பேங் நிறுவனத்துடன் இணைந்து கூகிள் பார்மூலாவை யாஹூ நிறுவனத்தில் அமைந்ததன் மூலம் ஜப்பான் நாட்டில் இன்றும் தேடுதல் தளத்தில் யாஹூ முதல் இடத்தில் உள்ளது.

அலிபாபா மற்றும் யாஹூ ஜப்பான் ஆகியவை யாஹூ நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீடாக இன்றும் உள்ளது.

பாதிப்பு

பாதிப்பு

தற்போது யாஹூ நிறுவனத்தை வெரிசோன் கைப்பற்றுவதால் அலிபாபா மற்றும் யாஹூ ஜப்பான் முதலீட்டில் முதலீட்டாளர்களுக்கு எவ்விதமான பாதிப்பும் இருக்காது எனத் தெரிவித்துள்ளது யாஹூ தலைமை நிர்வாகம்.

2010க்குப் பின் சரிவு..

2010க்குப் பின் சரிவு..

2010ஆம் ஆண்டுக்குப் பின் பல்வேறு காரணிகள் மூலம் யாஹூவின் வர்த்தகம் சரிய துவங்கியது. இதன் காரணமாக 2012ஆம் ஆண்டில் யாஹூ நிறுவனத்திற்குப் புதிய சீஇஓ நியமிக்கப்படாது.

இதன் மூலமாகவே மரிசா மேயர் கூகிள் நிறுவனத்தில் இருந்து யாஹூ நிறுவனத்திற்கு வந்தார்.

53 நிறுவனங்கள்

53 நிறுவனங்கள்

2012 ஆம் வருடம் மரிசா மேயர் சிஈஓ பெருப்பேற்ற உடன் நான்கு ஆண்டுகளில் 53 நிறுவனங்களை யாஹூ கையகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வழங்கிய ஆஃபர்

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வழங்கிய ஆஃபர்

2008 ஆம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் யாஹூ நிறுவனத்தை வாங்க 45 பில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்க முன்வந்தது. ஆனால் அதை யாஹூ நிராகரித்தது, பின்னர்க் கூடுதலாக 5 பில்லியன் டாலர் அளிப்பதாகக் கூறியும் யாகூ ஏற்றுக்கொள்ளவில்லை.

கூகுள் நிறுவனத்தை வாங்க முயற்சி

கூகுள் நிறுவனத்தை வாங்க முயற்சி

கூகுள் நிறுவனத்தைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் முன்பே ஒரு பில்லியன் டாலர் கொடுத்து வாங்க முயற்சி செய்த யாஹூ நிறுவனம் கூகிள் இணை நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரினிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.

எங்களுக்கு விற்கும் எண்ணம் இல்லை என்று கூறிவிட்டது யாஹூ.

கோவிந்தா கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா

ஆனால் தற்போது யாஹூ நிறுவனம் மொத்தமும் வெறும் 4.83 பில்லியன் டாலருக்கு வெரிசோன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

யாகூவின் விலையுயர்ந்த கையகப்படுத்தல்

யாகூவின் விலையுயர்ந்த கையகப்படுத்தல்

5.7 பில்லியன் டாலர் கொடுத்து Broadcast.com என்ற நிறுவனத்தை யாஹூ வாங்கியதை டெக்னாலஜி நிறுவனங்களின் மோசமான கையகப்படுத்தல் என்று ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

2016 is Bad days for Yahoo

2016 is Bad days for Yahoo - Tamil Goodreturns
Story first published: Friday, December 16, 2016, 17:09 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X