33 லட்சம் பேர் வேலையிழப்பு..அரசிடம் வேலையின்மை நலனுக்காக விண்ணப்பம்.. வல்லரசு நாட்டிலேயே இப்படியா!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பல நாடுகளில் பரவி வரும் நிலையில், தற்போது சீனாவினையும் மிஞ்சியுள்ளது அமெரிக்கா.

தற்போது வரையில் உலகம் முழுக்க சுமார் 199 நாடுகளில் பரவியுள்ள நிலையில் அதிலும் அமெரிக்கா தான் டாப் நிலையில் உள்ளது. இது கிட்டதட்ட 5,31,955 பேருக்கு இதன் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 24,081 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதனால் வல்லரசு நாடான அமெரிக்காவே நிலை குலைந்து போயுள்ளது. அமெரிக்காவில் மட்டும் இதுவரையில் சுமார் 85,594 பேருக்கு இதன் தொற்று இருக்கும் நிலையில், 1,300 பேர் பலியாகியுள்ளனர்.

பல சவால்கள்
 

பல சவால்கள்

உலகின் முதன்மை பொருளாதார நாடான அமெரிக்காவே பொருளாதார ரீதியாக பல சவால்களை எதிர்கொண்டுள்ளது எனலாம். ஏனெனில் அங்கு பரவலை குறைக்க அமெரிக்கா அரசு மிக போராடி வருகிறது. அங்கும் அத்தியாவசியம் தவிர மற்ற நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

வேலையின்மை & வேலையிழப்பு

வேலையின்மை & வேலையிழப்பு

உணவகங்கள், முடி திருத்தும் நிலையங்கள், ஜிம்கள் என பலவற்றை அந்த நாட்டு அரசு மூடியுள்ளது. இதனால் பல ஆயிரம் ஊழியர்கள், சிறு தொழிலாளர்கள் என பலரும் வேலையிழந்துள்ளனர். இந்த நிலையில் இவ்வாறு வேலையிழந்தவர்களுக்கும், தங்களது வேலையினை இழந்து வீடுகளில் முடங்கி கிடக்கும் அமெரிக்கா மக்களுக்கும் உதவித் தொகை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

வேலையிழக்கலாம்

வேலையிழக்கலாம்

இந்த நிலையில் அமெரிக்காவின் வேலையின்மை குறித்தான அறிக்கையில் வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் கடந்த 1982ம் ஆண்டில் 6,95,000 பேர் வேலையின்மை பதிவு செய்திருந்தாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் மாதத்திற்குள் 40 மில்லியனுக்கும் அதிகமான பேர் வேலையிழக்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது.

வேலையின்மை விகிதம்
 

வேலையின்மை விகிதம்

இவ்வாறு அமெரிக்காவில் வேலையிழந்தவர்கள் விகிதம் பிப்ரவரியில் 3.5% ஆக இருந்தது. இது அரை நூற்றாண்டில் மிக குறைவு என்றும் கூறப்பட்டது. எனினும் இது தற்போது 5.5% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த 2015-லிருந்து அமெரிக்கா, இந்த அளவிலான மோசமான நிலையை காணவில்லை எனவும் ஒர் அறிக்கையில் கூறப்படுகிறது.

மக்களுக்கு உதவி தொகை

மக்களுக்கு உதவி தொகை

இந்த நிலையில் தான் அமெரிக்காவில் வேலையினை இழந்த தொழிலாளர்கள், ஊழியர்கள் மற்றும் வணிகங்கள், மருத்துவமனை ஊழியர்கள் என அனைத்து தரப்பினருக்கும் உதவி தொகை அளிக்கும் மசோதாவை கடந்த புதன் கிழமையன்று வெற்றிகரமாக நிறைவேற்றியது. இந்த திட்டத்தின் மூலம் அமெரிக்காவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் 1200 டாலர்கள் வரை உதவித் தொகையாக கொடுக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது.

ஜனாதிபதி வலியுறுத்தல்

ஜனாதிபதி வலியுறுத்தல்

அமெரிக்காவில் ஒரே நேரத்தில் 10-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடக் கூடாது என்று ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். அவர் அவ்வாறு உத்தரவினைத் தொடர்ந்து பணி நீக்கங்கள் அதிகரித்தன. மேலும் இந்த அறிவிப்பு உணவகங்கள் மற்றும் பல பொதுமக்கள் கூடும் இடங்களையும் மூட வலியுறுத்தியது. மேலும் வல்லுனர்களும் வைரஸ் பரவுவதை மெதுவாக்கவும், மக்கள் இறப்பதைக் தடுக்கவும் வீட்டிலேயே இருப்பது அவசியம் என்று கூறுகிறார்கள். இதனால் பல லட்சம் பேர் வேலையினை இழந்து தவித்து வருகின்றனர்.

இவர்கள் எல்லாம் தகுதியற்றவர்கள்

இவர்கள் எல்லாம் தகுதியற்றவர்கள்

வேலையின்மை சலுக்கைக்கு விண்ணப்பிக்க நிறைய தொழிலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதாவது கொரோனா காரணமாக இதுவரை பணி நீக்கங்களின் உண்மையான எண்ணிக்கை 3.3 மில்லியணை விட அதிகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் சுயதொழில் செய்பவர்கள், கிக் தொழிலாளர்கள், ஆவணமற்ற தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் கடந்த ஆண்டு ஆறு மாதங்களுக்கும் குறைவாக வேலை செய்தவர்கள் பொதுவாக வேலையின்மைக் காப்பீட்டுக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் எனவும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

3.3 million Americans filed for unemployment benefits as coronavirus slams economy

A record-high number of people applied for unemployment benefits last week as layoffs engulfed the US in the face of a near-total economic shutdown caused by the coronavirus pandemic.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more