குழந்தைகளைத் தொழிலாளர் பிரச்சனை மிக மோசமாக இருக்கும் 5 நாடுகள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகள் என்பது கடவுள் நமக்கு அளித்த ஒரு அற்புதமான பரிசு. ஆனால் அந்த விலைமதிப்பற்ற கடவுளின் பரிசை நாம் என்ன செய்கின்றோம்? அவர்களைச் சரியாகக் கவனித்துக் கொள்கின்றோமா? அவர்களின் உலகைச் சிதைக்காமல் பேணிக் காக்கின்றோமா?

 

இந்த உலகில் உள்ள பல நாடுகள் குழந்தைகளைக் குழந்தைகளாக நடத்தாமல், அவர்களை ஒரு தொழிலாளர்களாக நடத்துகின்றன. அவர்களின் பிஞ்சுக் கைகளில் விளையாட்டுப் பொருட்கள் மற்றும் புத்தகங்களுக்குப் பதில், பல்வேறு தொழில்கருவிகள் திணிக்கப்படுகின்றன. இது குழந்தைகளின் உலகைச் சிதைத்து அவர்களை மிகுந்த மன வேதனைக்கு உள்ளாக்குகின்றது. உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நான் நினைக்கின்றேன். உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் குழந்தைத் தொழிலாளர்களைத் தடை செய்துள்ளன. எனினும் இன்னும் இந்தக் கொடிய பழக்கம் பல்வேறு நாடுகளில் நடைமுறையில் உள்ளது.

இங்கே, நாங்கள் குழந்தை தொழிலார்கள் மோசமான நிலையில் உள்ள முதல் ஐந்து நாடுகளைப் பட்டியலிட்டுள்ளோம்.

 #1 எரிட்ரியா

#1 எரிட்ரியா

எரித்ரியாவில், அறிமுகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்களின் படி, 9-11 ஆம் வகுப்புகளில் உள்ள குழந்தைகள் கட்டாய உடல் உழைப்பு வேலை செய்ய வேண்டியிருக்கும். இது உங்களைக் கண்டிப்பாக அதிர்ச்சிக்கு உள்ளாக்கும். இது மட்டுமல்ல, அவர்கள் அடிக்கடி இராணுவ பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

#2 சோமாலியா

#2 சோமாலியா

விஜயகாந்த் பாணியில் கூறுவதானால், இங்கு 5 முதல் 14 வயதிற்கு உட்பட்ட சுமார் 10,12,863 குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர். இது இந்த நாட்டில் உள்ள மொத்த குழந்தைகளின் எண்ணிக்கையில் 39.8% ஆகும். இங்குச் சாலைகளில் பிச்சை எடுப்பதில் இருந்து, மனித கடத்தல் தொழில் அல்லது அரசாங்க விரோத நடவடிக்கைகள், மற்றும் சுரங்கத் தொழில் என நீங்கள் எங்குச் சென்றாலும் உங்களைக் கட்டாயம் ஒரு குழந்தைத் தொழிலாளராவது பின்தொடர்வார். சோமாலியாவில் முறையான கல்வி முறை இன்னும் உருவாக்கப்படவில்லை.

#3 கொங்கோ ஜனநாயக குடியரசு
 

#3 கொங்கோ ஜனநாயக குடியரசு

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் சுமார் 33,27,806 குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை. அவர்கள் அனைவரும் தங்கம் மற்றும் பிற ஆபத்தான சுரங்கங்களில் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதோடு அவர்களின் துயரம் முடிவதில்லை. உலக அட்லஸ் கூற்றுப்படி, சோமாலியாக் குழந்தைகள் பல்வேறு தேசிய புரட்சி ஆயுத குழுக்களால் அடிமைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

#4 மியான்மார்

#4 மியான்மார்

குழந்தை தொழிலார்களைப் பின்தொடரும் பொழுது அவர்கள் வாழும் மிக மோசமான நாடுகளில் ஒன்றாக மியான்மர் கருதப்படுகின்றது. மியான்மாரில் சுமார் 10 மில்லியன் குழந்தைகள் (10-17 வயதுக்கும் இடையே) குழந்தை தொழிலாளர்களாக உள்ளனர். இந்த நாட்டில் நிலவும் வறுமையே இங்குள்ள பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை உடல் உழைப்பில் ஈடுபடுத்துவதற்கு மிக முக்கியமான காரணமாகக் கருதப்படுகின்றது.

#5 சூடான்

#5 சூடான்

10-14 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் சுமார் 45.6% குழந்தைகள் இங்குக் குழந்தைத் தொழிலாளர்களாக உள்ளனர். அதோடு 6 முதல் 14 வயதிற்குட்பட்ட 31.5% குழந்தைள் மட்டுமே இங்குப் பள்ளிக்குச் செல்கின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 Countries with Worst Child Labour Problems

5 Countries with Worst Child Labour Problems
Story first published: Wednesday, June 27, 2018, 12:12 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X