செமையா சம்பாதிப்போம்... ஆனா பசங்களா, உங்களுக்கு ஒரு பைசா கூட கிடையாது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: சுயமாக உழைத்து கோடீஸ்வரர்களான உலகக் கோடீஸ்வரர்களில் சிலர், அந்தக் கடின உழைப்பின் மதிப்பினை தாங்கள் உணர்ந்ததுடன், தங்களுடைய வாரிசுகளும் உணர வேண்டும் என்று நினைத்துள்ளார்கள்.

 

இதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த வழிமுறை, தங்களுடைய சொத்துக்களை வாரிசுகளுக்குத் தாரை வார்க்காமல், சமூகப் பணிகளுக்காக அளித்து விடுவது தான். இத்தகைய உயர்ந்த எண்ணம் கொண்ட 6 பில்லியனர்களைத் தான் நாம் இங்குப் பார்க்கபோகிறோம்.

6 பில்லியனர்கள்

6 பில்லியனர்கள்

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள 6 பில்லியனர்களும் இந்த வகையில் தங்களுடைய வாரிசுகளுக்குச் சொத்துக்களைத் தாரை வார்க்காமல், உழைப்பின் அருமையை உணரச் செய்ய முயற்சி செய்துள்ளார்கள்.

வாரன் பஃபெட்

வாரன் பஃபெட்

வாரன் பஃபெட், பெர்க்சையர் ஹத்தாவே - தலைமை செயல் அதிகாரி - 3 குழந்தைகள்

இவருடைய சொத்துக்களில் பெரும்பான்மையைப் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அமைப்பிற்குக் கொடுக்க ஏற்கனவே உறுதி அளிக்கப்பட்டு விட்டது.

தன்னுடைய கொடை வழங்கும் எண்ணத்தை வெளிப்படையாக அறிவிக்கும் வகையிலும் மற்றும் தங்களுடைய சொத்தில் குறைந்த பட்சம் பாதியளவையாவது தானமாகக் கொடுக்க வேண்டும் என்று பிறரையும் தூண்டும் வகையிலும் 2010-ல் இவர் 'கிவ்விங் பிளட்ஜ் (Giving Pledge)'-ற்கு ஆதரவு தெரிவித்தார்.

மைக்கேல் ப்ளூம்பெர்க்
 

மைக்கேல் ப்ளூம்பெர்க்

நியூயார்க் நகரின் முன்னாள் மேயர் மைக்கேல் ப்ளூம்பெர்க், 2 குழந்தைகள்

ஊடக நிறுவனங்களின் முடிசூடா மன்னனாக விளங்கும் மைக்கேல் ப்ளூம்பெர்க் தன்னுடைய சொத்துக்களில் பெரும்பகுதியை தானமாகக் கொடுக்க உறுதி பூண்டுள்ளார்.

மேலும், ஏற்கனவே தன்னுடைய உறுதிமொழிக்காக 1 பில்லியன் டாலர்களை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்திற்கு வழங்கிவிட்டார்.

இவருடைய ப்ளூம்பெர்க் ஃபிலான்த்ரஃபீஸ் பௌன்டேஷன் நிறுவனத்தின் வழியாகத் தன்னுடைய பணத்தைச் சுகாதாரம் தொடர்பான சில நிறுவனங்களுக்குக் கொடையாக வழங்கியுள்ளார்.

இதில் உலகச் சுகாதார நிறுவனம், புகையிலை இல்லா குழந்தைகளுக்கான பிரச்சாரம் மற்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் போன்றவை அடங்கும்.

 ஜீன் சிம்மன்ஸ்

ஜீன் சிம்மன்ஸ்

ராக் ஸ்டார் ஜீனீ சிம்மன்ஸ், 2 குழந்தைகள்

இந்தப் புகழ்பெற்ற கிடார் இசைக் கலைஞரை தனியொரு ஆளாக வளர்த்தெடுத்தவர் அவருடைய தயார் மட்டுமே. தன்னுடைய சொத்துக்களைத் தன் வாரிசுகள் பெற மாட்டார்கள் என்று ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் இவர் குறிப்பிட்டுள்ளார்.

சைல்ட் ஃபன்ட் (ChildFund) என்ற குழந்தைகள் நிதி அமைப்பின் வழியாக 140 ஆப்ரிக்கக் குழந்தைகளை இவர் இப்பொழுது ஆதரித்து வருகிறார்.

பில்கேட்ஸ்

பில்கேட்ஸ்

பில்கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர், 3 குழந்தைகள்

வாரன் பஃப்பெட் உடன் சேர்ந்து கிவ்விங் ப்ளட்ஜ் அமைப்பை நிறுவிய பில்கேட்ஸ், 2010-ம் ஆண்டுக் கொடுத்த ஒரு பேட்டியின் போது தன்னுடைய சொத்துக்கள் தன்னுடைய வாரிசுகளுக்குப் பலன் தரப்போவதில்லை என்று குறிப்பிட்டார்.

ஆனால், சமுதாய நலனுக்காக அது செலவிடப்படும் என்றும் குறிப்பிட்டார். 1994-ம் ஆண்டுப் பில்கேட்ஸ்-ம், அவருடைய மனைவியும் சேர்ந்து பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் பௌன்டேஷன் என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளனர்.

பியரி ஒமிடியர்

பியரி ஒமிடியர்

பியரி ஒமிடியர், ஈ-பே (eBay) நிறுவனர் - 3 குழந்தைகள்

1998-ம் ஆண்டு வெளியிட்ட IPO-வின் மூலமாக 31 வயதிலேயே பெரும் பணக்காரராக மாறிவிட்டார் இ-பே நிறுவனர் பியரி ஒமிடியர். இவர் தன்னுடைய ஒமிடியர் நெட்வொர்க் என்ற கொடை முதலீட்டு நிறுவனத்திற்கு இ-பே நிறுவனத்தின் பங்குகளைத் தானமாகக் கொடுத்துள்ளார்.

ஒமிடியரும், அவருடைய மனைவி பாம்-மும் சமூக மாற்றம் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளுக்காகவும் பாடுபட உறுதி கொண்டுள்ளனர்.

ஜாக்கிசான்

ஜாக்கிசான்

ஜாக்கிசான், நடிகர் - 2 குழந்தைகள்

குங்பூ கலையாலும், நகைச்சுவை மிக்க நடிப்பினாலும் உலகெங்கும் இரசிகர்களைப் பெற்றுள்ள ஜாக்கிசான் தன்னுடைய சொத்தில் பாதியை தனக்குச் சொந்தமாக உள்ள ஒரு பௌன்டேஷனுக்குக் கொடுக்க உறுதி செய்துள்ளார்.

ஒரு பேட்டியின் போது, 'என்னுடைய மகன் சொந்தாமாகப் பணம் சம்பாதித்துக் கொள்வான்' என்று குறிப்பிட்டுள்ளார்.

1988-ம் ஆண்டு ஹாங்காங்கில் உள்ள மக்களின் துயர் துடைக்கும் வகையில் ஜாக்கிசான் சாரிட்டபிள் பௌன்டேஷன் என்ற அமைப்பை அவர் தொடங்கினார்.

சிறந்த எண்ணம்

சிறந்த எண்ணம்

இந்தப் பில்லியனர்கள் பலரும் தங்களுடைய சொத்துக்களைச் சமுதாய வளர்ச்சிப் பணிகளுக்காகக் கொடையாகக் கொடுத்து, தங்களுடைய பிள்ளைகளுக்கு வாழ்க்கையின் அர்த்தத்தைக் கண்டறிய முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைக் கொடுக்க முயன்றுள்ளார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

6 rich people who won't leave a fortune to their kids

Self-made millionaires know the value of hard work, and they want their kids to know it, too. The eight fabulously rich magnates featured here are not leaving their wealth to their kids.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X