6 வயதில் 55 கோடி சொத்து.. அசத்தும் தென் கொரியா சிறுமி.. ஆச்சரியப்படுத்தும் போரம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தென் கொரியா : தென் கொரியா சேர்ந்த சிறுமி தனது 6 வயதில் 55 கோடி ரூபாய் சொத்துக்கு உரிமையாளராகி இருக்கிறராம்.

ஆமாங்க.. பிரபல யூ டியூப்பரான போரம் ரூ.55 கோடி மதிப்பிலான (8 மில்லியன் டாலர் மதிப்பிலான ) வீடு வாங்கி அவ்வூர் மக்களை எல்லாம் ஆச்சர்யப்படுத்தி உள்ளாராம்.

யூடியூப் சேனல்
 

யூடியூப் சேனல்

தென் கொரியாவைச் சேர்ந்த 6 வயது சிறுமியான போரம். இவர் யூடியூப்பில் மிகவும் பிரபலம் ஆனவர். போரம் இரண்டு யூ டியூப் சேனல்களை நடத்தி வருகிறார்.அதில் போரம் தனது ஒரு யூடிபூப் சேனல் மூலம் உலக அளவில் குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் குறித்து விமர்சனம் செய்து வருகிறார்.

ரசிகர்கள் ஏராளம்

ரசிகர்கள் ஏராளம்

மற்றொரு யூடியூப் சேனலில் குழந்தைகளுக்கான காணொளிக்கள் வெளியிட்டு வருகிறார். இதன் மூலம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் போரம்மை பின் தொடர்கிறார்கள். இதில் பொம்மைகள் தொடர்பான விமர்சனங்கள் செய்யும் சேனலுக்கு 13. 6 மில்லியன் ரசிகர்களும், காணொளி பிளாக் சேனலுக்கு 17.6 மில்லியன் ரசிகர்களும் அதாவது சந்தாதாரர்கள் உள்ளனராம். இதன் மூலம் போரம்முக்கு 3.10 கோடி பேர் ரசிகர்களாக உள்ளனர்.

எவ்வளவு வருமானம்?

எவ்வளவு வருமானம்?

இந்த நிலையில் தான் போரம்மின் யூடியூப் சேனல்களுக்கு மாதம் 21 லட்சம் ரூபாய் வருமானம் வருகிறதாம். இதன் காரணமாக குறுகிய காலத்திலேயே போரம்மின் பெற்றோர் ரூ.55 கோடி மதிப்பிலான 5 மாடி வீட்டினை தென்கொரியாவின் சியோல் நகரில் வாங்கியுள்ளனராம்.

பாராட்டு மழை
 

பாராட்டு மழை

இந்த தகவலை தென்கொரியாவில் உள்ள செய்தி நிறுவனங்கள் போரம்மை பாராட்டி வெளியிட்டுள்ளனவாம். இந்த நிலையில் தற்போது உலகம் முழுக்க பிரபலமான சிறுமி போரம் 6 வயதிலேயே 55 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு வாங்கி இருப்பதை பலரும் வியந்து போய் பாராட்டி வருகிறார்களாம். நாமும் நம் வாழ்த்தை சொல்லி விடுமே.

நூடுல்ஸ் வேண்டாம்

நூடுல்ஸ் வேண்டாம்

இந்த நிலையில் அவரது பல யூடியூப் கிளிப்புகள் 300 மில்லியனுக்கும் அதிகமாக பார்க்கப்பட்டுள்ளனவாம். அவற்றில் ஒண்றுதான் பிளாஸ்டிக் பொம்மை சமையலறையைப் பயன்படுத்து தயாரிக்கப்பட்ட உடனடி நூடுல்ஸைக் குறைப்பதைக் காட்டுகிறதாம்.

பிரபலமான வீடியோக்கள்

பிரபலமான வீடியோக்கள்

மற்றொரு வீடியோ குளிர் என்ற தலைப்பில், மழைக்காலத்தில் பூங்காவில் சுற்றி திரிவதிலிருந்து விடுபடவும், குளிர்ச்சியிலிருந்து விடுபடவும், ஒரு நம்பக்கூடிய மூலிகை கலவையும் செய்து காட்டுவதும் காண்பிக்கப்படும். இது போன்ற போரமின் பல வீடியோக்கள் மிகப் பிரபலம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: youtube asset சொத்து
English summary

6-Year-Old girl and YouTube Star for Buys Property Worth Rs 55 Crores

6-Year-Old girl and YouTube Star for Buys Property Worth Rs 55 Crores
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X