துபாயில் கடினமான வேலை பார்க்கும் இளைஞர்களுக்கு ஏற்ற பண சேமிப்பு ஐடியா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

துபாய் வாழ்வதற்கு மிகவும் விலையுயர்ந்த ஒரு நகரமாகும். இங்கு நீங்கள் கவனமாக இல்லாவிட்டால், நீங்கள் இங்கு வரும் போது கொண்டு வந்ததை விடக் குறைவான பணத்தை வைத்திருப்பதில் போய் முடியும்.

எங்கள் நகரத்தின் மயக்கம் சில சமயங்களில் நம்மில் வலிமையான மன உறுதி கொண்டவர்களையும் கூட ஆசைப்படத் தூண்டி விடுகிறது.

அது நீங்கள் தவிர்க்க பாரத்துக்கெண்டிருக்கும் ஒரு சில திராம்களாக இருந்தாலும் அல்லது சோம்பேறித்தனத்தால் தினசரி இரவில் உணவு வாங்கிச் சாப்பிடுவதாக இருந்தாலும் அது உங்கள் பணத்தைப் பதம் பார்த்து விடும். இங்கே சில முக்கிய ஆலோசனைகள் கொடுக்கப்பட்டுள்ளன:

ஆரம்பத்திலிருந்தே தொடங்குங்கள்

ஆரம்பத்திலிருந்தே தொடங்குங்கள்

மாதத்தின் தொடக்கம் (அல்லது எப்போது சம்பள நாளோ அன்று) சேமிப்பதற்கான மிக முக்கியக் காலமாகும், ஏனென்றால் அது தான் உங்கள் நிதி சார்ந்த நல்லறிவை உருவாக்கும் அல்லது உடைக்கும். துபாயில் உங்களுக்குத் தனிப்பட்ட வங்கிக் கணக்கு இல்லையென்றால், அந்தப் பணத்தை உங்கள் வீட்டிற்கு அனுப்பி விடுங்கள் அல்லது இங்குள்ள ஒரு வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்து விடுங்கள், தொகை எவ்வளவு சிறியது என்பது முக்கியமில்லை.

 செலவழிக்க வாய்ப்புகள் அதிகம்

செலவழிக்க வாய்ப்புகள் அதிகம்

ஆரம்பத்தில் நீங்கள் அந்தப் பணத்தைச் செலவழித்து விடச் சபலப்படலாம், ஆனால் ஒருமுறை நீங்கள் செய்த குறிப்பிடத் தகுந்த சேமிப்பைப் பார்த்து விட்டால், நீங்கள் பெருமையாக உணர்வதோடு மட்டுமில்லாமல் ஆனால் விரைவில் அதை ஒரு ஆரோக்கியமான பழக்கமாக மாற்றிக் கொள்வீர்கள். பணத்தைச் சேமிப்பதற்கு மாதத்தின் இறுதி வரை காத்திருக்காதீர்கள் சாமர்த்தியமான தேர்வுகளைச் செய்யுங்கள்.

இரவுகளை வித்தியாசமாகக் கழித்தல்

இரவுகளை வித்தியாசமாகக் கழித்தல்

வெளியிடங்களில் இரவுகளைக் கேளிக்கைகளில் கழித்தல் மகிழ்ச்சியாக இருக்கும் அதே சமயத்தில், நீங்கள் ஒவ்வொரு முறை வெளியே செல்லும் போதும் உங்கள் சிறிய சேமிப்புச் செல்வங்களைச் செலவழித்து விட வேண்டும் என்று அர்த்தமில்லை. நீங்கள் எங்குச் செல்கிறீர்கள் என்பதைப் பற்றிச் சாமர்த்தியமாக முடிவெடுங்கள்.

வார இறுதியை எப்படிக் கொண்டாடலாம்?

வார இறுதியை எப்படிக் கொண்டாடலாம்?

வார இறுதி ஒப்பந்தங்கள் கொண்ட இடங்கள் அல்லது இரவு பெண்கள் நடனங்கள் கொண்ட ஹோட்டல்களைத் தேர்ந்தெடுங்கள். நகர அறை இல்லாத வியர்த்துப் போகும் விலையுயர்ந்த கிளப்புகளை விட ஒரு நண்பரின் வீட்டில் திடீர் விருந்து அல்லது விளையாட்டு இரவு போன்ற மாற்று வழிகளைத் தேர்ந்தெடுங்கள். நீங்கள் வெளியில் கழிக்கும் இரவுகள் மற்றும் வார இறுதி நாட்களைப் பற்றிய உங்கள் எண்ணத்தின் பாதையை மாற்றிக் கொண்டு அதைச் சிந்திப்பதற்கும் ஓய்வெடுப்பதற்குமான நேரமாகக் கருதுங்கள். உங்கள் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் நீங்கள் செலவு செய்த பணம் மற்றும் நேரத்திற்கு மதிப்புடையதா?

விற்றுவிடுங்கள் விற்றுவிடுங்கள் விற்றுவிடுங்கள்

விற்றுவிடுங்கள் விற்றுவிடுங்கள் விற்றுவிடுங்கள்

கூடுதல் பணத்தை உருவாக்கவும் மற்றும் வருங்காலத்திற்காகச் சேமிக்கவும் சிறந்த எளிய வழி நீங்கள் பயன்படுத்தாத உங்கள் வீட்டைச் சுற்றிலுமுள்ள தேவையற்ற பொருட்களை விற்றுவிடுவதாகும். நீங்கள் பயன்படுத்திய ஆனால் தவறாகப் பயன்படுத்தாத பொருட்களைப் பணத்திற்கு இணையத்தில் விற்பதற்கான சிறந்த கடைகளைப் பற்றிய வழிகாட்டியை நாங்கள் கொண்டிருக்கிறோம்.

உங்களிடம் தேவை இல்லாமல் இருக்கும் பொருட்களை விற்றுவிடுங்கள்

உங்களிடம் தேவை இல்லாமல் இருக்கும் பொருட்களை விற்றுவிடுங்கள்

மேலும் ஃபேஸ்புக் குழுக்களில் புத்தகங்கள் முதல் உடைகள் வரை மற்றும் மரச்சாமான்கள் முதல் குழந்தைகளுக்கான பொருட்கள் வரை அனைத்தையும் வாங்குவதற்கு மக்கள் இருக்கிறார்கள். உங்களுக்கு இனிமேல் பொருந்தாத அல்லது நீங்கள் உண்மையில் விரும்பாத உடைகளை விற்றுவிடுங்கள். துபாய் இரண்டாம் உபயோகப் பொருட்களின் இணையத் தளத்தில் உள்நுழைவதன் மூலம் உள்ளூர் இரண்டாம் உபயோகப் பொருட்களை விற்கும் சந்தையில் அல்லது கனிந்த சந்தையிலாவது ஒரு மேசையை முன்பதிவு செய்யுங்கள். மேலும் நீங்கள் அங்காடியை உங்கள் நண்பருடன் பகிர்ந்து கொண்டு அந்த மாலை நேரத்தைக் குதூகலமானதாக்கலாம். நீங்கள் அந்த வார இறுதியில் செலவு செய்வதற்குப் பதிலாகப் பணம் சம்பாதிப்பது மட்டுமல்லாமல் அவ்வாறு செய்வதில் மகிழ்ச்சியும் அடையலாம்.

சில எல்லைக்கோடுகளை வரைந்து கொள்ளுங்கள்

சில எல்லைக்கோடுகளை வரைந்து கொள்ளுங்கள்

குழந்தைகளைப் போல நமக்கும் சில நேரங்களில் எல்லைக் கோடுகள் தேவைப்படுகின்றன. எனவே, துபாயின் மால்களுக்குச் சிறுபயணம் மேற்கொண்டால் அது அவசியமற்ற செலவுகளுக்கு வழிவகுக்கும் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும் போது, அதைத் தவிர்த்து விடுங்கள். ஒரே மாதத்தில் உங்களுக்கு அளவுக்கதிகமான அழுத்தத்தைக் கொடுக்காதீர்கள் அது அடுத்த மாதம் நீங்கள் அளவுக்கு அதிகமாகச் செலவு செய்வதில் கொண்டு போய் முடிக்கும்.

 புத்திசாலித்தனமாகச் செலவு செய்யுங்கள்

புத்திசாலித்தனமாகச் செலவு செய்யுங்கள்

தற்காலிக உயர்வை மட்டுமே வழங்கும் செலவுகளைத் தவிர்ப்பதற்குச் சுய உணர்வுடன் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். எதையாவது வாங்க வேண்டுமென்று உங்களுக்கு ஏக்கமிருந்தால் அப்படியே செய்யுங்கள். ஆனால் அது அந்த மாதத்திற்கான உங்களது விருந்து என்பதை நினைவில் வைத்துக் கொண்டு புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுங்கள். உங்களுக்கு நீங்களே சில சலுகைகளை வழங்கிக் கொள்ளுங்கள். குறைந்த செலவுள்ள தேர்வுகளைத் தேர்ந்தெடுங்கள். உதாரணமாக, உங்கள் நண்பர்கள் அனைவரும் அதிகச் செலவு வைக்கும் ஒரு இசை இரவுக்குச் செல்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால், நீங்கள் மட்டும் ஒரே ராத்திரியில் உங்கள் ஒரு முழு மாத சம்பளத்தில் பாதியைக் கரைத்துவிடும் அந்த நிகழ்ச்சிக்குப் பதிலாகச் சமையல் வகுப்பைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது உங்கள் மற்றொரு நண்பரைச் சந்தித்துச் சிறிது நேரத்தை தரமானதாகச் செலவழிக்கலாம்.

 உங்கள் கருத்தின் குரல்

உங்கள் கருத்தின் குரல்

பெரும்பாலும் எல்லோருக்கும் குறிப்பிடத் தகுந்த அளவு அதிகமாகப் பணத்தைச் செலவழிக்கும் நண்பர்கள் இருப்பார்கள். அவர்களுடைய திட்டங்கள் எல்லாவற்றையும் பினிதொடர்ந்தே ஆக வேண்டுமென்று கட்டாயம் ஒன்றுமில்லை. ஏனென்றால் மாத இறுதியில் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளப் போகிறவர் நீங்கள் தான். நீங்கள் செல்ல விரும்பும் இடங்கள் மற்றும் நீங்கள் செலவழிக்கத் தயாராக இருக்கும் உங்கள் பட்ஜெட் போன்ற உங்கள் பரிந்துரைகளைப் பற்றி முன்கூடியே குரலெழுப்புங்கள்.

பட்ஜெட் போடுவது எப்படி?

பட்ஜெட் போடுவது எப்படி?

அவர்களுடைய வார இறுதி கொண்டாட்டத் திட்டங்கள் உங்களுக்கு அதிக விலையுயர்ந்ததாகத் தோன்றினால், வார இறுதிகள் மற்றும் இதர ஆடம்பரங்களுக்கு நீங்கள் செலவிட விரும்பும் ஒரு பட்ஜெட்டைத் தயாரித்து அதைக் கடைப்பிடியுங்கள். அதிகப் பணத்தைச் செலவழிப்பதில் உங்களுக்கு மகிழ்ச்சியில்லை என்பதை உங்கள் நெருங்கிய நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள் அல்லது எளிமையாக அந்தச் செலவைத் தவிர்த்து விடுங்கள்.

 கிரெடிட் கார்டுகளைத் தூக்கியெறியுங்கள்

கிரெடிட் கார்டுகளைத் தூக்கியெறியுங்கள்

அந்த மாயாஜால கார்டுகள் மீது நம்பிக்கை வைத்து பிறகு சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைத்து நம் மனம் விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கி விடுகிறோம். கட்டணங்கள் குவியும் போது தான் உண்மை உறைக்கிறது.
உங்களுக்குப் பணம் தேவைப்படும் போதெல்லாம் டெபிட் கார்டு அல்லது ஏடிஎம் ஐ பயன்படுத்துங்கள். இந்த வழியில் குறைந்தபட்சம் உங்களிடமுள்ள பணத்தை மட்டுமே நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். மேலும் நிலுவையில் உள்ள கட்டணங்கள் மற்றும் கடன்கள் உங்களுக்காகக் காத்திருப்பதில்லை.

பணத்தைக் கடன் வாங்குதல் மற்றும் கடன் கொடுத்தலை தவிர்த்திடுங்கள்

பணத்தைக் கடன் வாங்குதல் மற்றும் கடன் கொடுத்தலை தவிர்த்திடுங்கள்

குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கிடையில் பணத்தைக் கடனாக வாங்குவதோ அல்லது கடனாகப் பெறுவதோ நல்லதல்ல மற்றும் பாதுகாப்பானதல்ல என்று அடிக்கடிச் சொல்லப்படுகிறது. இருந்தாலும் சில சமயங்களில் சூழ்நிலைகளை நம்மால் தடுக்க முடியாது. உங்களுக்கு முடியாது என்று சொல்லத் தயங்கும் ஒரு நண்பரிடம் நீங்கள் பணத்தைக் கடனாக வாங்கலாம். ஆனால், இது ஆரோக்கியமற்ற ஒரு பழக்கத்திற்கு வழிவகுப்பதோடு உறவுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

கடன் வேண்டாம் சேமியுங்கள்

கடன் வேண்டாம் சேமியுங்கள்

உங்களிடம் பணம் இல்லையென்றால், ஒரு நண்பரிடம் பணம் கேட்டு செல்வதை விடப் பணத்தைச் சேமிக்கக் கற்றுக் கொள்ள இது ஒரு நல்ல பாடமாகும். நீங்கள் நிச்சயமாகக் கடன் வாங்கியே தீர வேண்டிய ஒரு சந்தர்ப்பம் வரும் போது மற்ற எந்தச் செலவுகளையும் செய்வதற்கு முன்னால் அதைத் திருப்பிக் கொடுத்து விடுவேன் என்று உறுதி செய்து கொள்ளுங்கள். அதே போல உங்களிடம் தொடர்ந்து கடன் வாங்குபவர் யாரேனும் இருந்தால், எதாவது சாக்கு போக்குகளைச் சொல்லி அவர்களுக்கு எதுவும் தருவதைத் தவிர்த்து விடுங்கள். இதனால் அவர்கள் விரைவில் உங்கள் குறிப்பை உணர்ந்து கொண்டு வேறு சாமர்த்தியமான தேர்வுகளை உருவாக்கத் தொடங்குவார்கள்.

 சிறிய அளவில் சேமிக்கத் துவங்குங்கள்

சிறிய அளவில் சேமிக்கத் துவங்குங்கள்

இந்த நாட்டில் வசிக்கும் பெரும்பாலானவர்கள் தாய்நாட்டிலிருந்து தங்கள் வீடு மற்றும் குடும்பத்தை விட்டு தூரமாகி கடினமாக உழைத்து, பணம் சம்பாதித்து, தங்கள் எதிர்காலத்திற்காகவும் மற்றும் குடும்பத்திற்காகவும் சேமித்து வீடு திரும்ப வேண்டும் என்ற முதன்மையான குறிக்கோளுடன் வெளிநாடுகளில் குடிபெயர்ந்தவர்கள் ஆவர். சிறிய அளவில் சேமிக்கத் தொடங்குங்கள் ஆனால் அதைத் தொடர்ந்து செய்யுங்கள் சில மாதங்கள் சென்ற பிறகு நீங்கள் எவ்வளவு சேமித்து இருக்கிறீர்கள் என்பதைப் பார்க்கும் போது நீங்களே பெருமை கொள்வீர்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

7 money saving tips for youngsters in Dubai

7 money saving tips for youngsters in Dubai
Story first published: Saturday, October 14, 2017, 11:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X