உலகின் முன்னணி பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருக்கும் சீனாவில், கடந்த சில மாதங்களாகவே கொரோனாவின் கோராத்தாண்டவம் இருந்து வருகின்றது. இதன் காரணமாக அங்கு கடுமையாக கடுமையான லாக்டவுன் நடவடிக்கை இருந்து வந்தது.
கொரோனாவுக்கு முன்னதாக அரசின் கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகளின் மத்தியில் பொருளாதாரத்தில் மந்த நிலையே இருந்து வந்தது.
இந்த நிலையில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது முந்தைய ஆண்டுகளை காட்டிலும், மெதுவான வளர்ச்சியிலேயே காணப்படுகின்றது.
திவாலாகும் கூகுள்.. ரஷ்யா-வில் நடப்பது என்ன.. சுந்தர் பிச்சை-க்கு புதிய நெருக்கடி..!

மின்சார வாகன உற்பத்தியாளர்களுக்கு சலுகை
இந்த நிலையில் சீனா இந்த நிலையை சமாளிக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிகிறது. குறிப்பாக 2022ல் எக்ஸ்பெய்ரி ஆகவுள்ள மின்சார வாகன உற்பத்தியாளர்களுக்கான மானிய நீட்டிப்பு குறித்து உற்பத்தியாளார்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது வாகன உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், மந்த நிலையில் உள்ள பொருளாதாரத்தினை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

வளர்ச்சியினை ஊக்குவிக்க திட்டம்
சீன அரசின் இந்த நடவடிக்கையால் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாட்டின் மந்த நிலையை போக்கி, வளர்ச்சியினை ஊக்குவிக்க முடியும் என அரசு நம்புவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கொரோனாவினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வளர்ச்சியினை மேம்படுத்தவும், இந்த முடிவினை எடுத்துள்ளதாகவும் தெரிகிறது.

மானிய சலுகை
லாக்டவுன் காரணமாக வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் மக்கள், செலவினங்களை குறைத்துள்ளனர். இதற்கிடையில் வாகன விற்பனை, புதிய வீடு விற்பனை என பலவும் சரிவினைக் கண்டுள்ளன. உலகம் முழுவதும் சப்ளை சங்கிலியில் பெரும் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் சீனாவின் இந்த மானிய திட்டமானது, குறிப்பாக மின்சார வாகன உற்பத்தியாளர்களுக்கு சலுகை அளிக்கும் என கூறப்படுகின்றது.

உற்பத்தியினை அதிகரிக்க உதவும்
உலகின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றான சீனாவில் இந்த சலுகையானது, மேற்கொண்டு மின்சார வாகன உற்பத்தியினை மேம்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த மானிய விகிதம் எவ்வளவு என்பது இறுதி செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது. இந்த மானிய தொகையானது சீனாவில் உற்பத்தி செய்யும் சீன உற்பத்தியாளர்களுக்கு மட்டும் அல்லாது, மற்ற நிறுவனங்களுக்கும் அளிக்கப்படும் என தெரிகின்றது.

எவ்வளவு மானியம்?
இது கடந்த 2009ம் ஆண்டு மானியங்கள் வழங்க தொடங்கியதில் இருந்து, 2021ம் ஆண்டில் நிலவரப்படி பார்க்கும்போது சுமார் 100 பில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டுள்ளது என சீனா மெர்சண்ட்ஸ் பேங்க் இண்டர்நேஷனலின் வாகன ஆய்வாளர் கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.

அதிகமாக இருக்கலாம்
எவ்வளவு மானியம் வழங்கப்படலாம் என்பது குறித்து தெளிவாக இல்லை என்றாலும், தற்போது பொருளாதாரமும் மந்த நிலையில் உள்ள நிலையில் சீனா பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்தும் கட்டாயத்தில் உள்ளது. ஆக உற்பத்தியினை ஊக்குவிக்கும் விதமாக அதிக சலுகைகள் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.