ஒரு குண்டனால எங்களுக்கு 16 லட்சம் அவுட்டா? கதறும் விமான நிறுவனம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு விமான நிறுவனத்திடம் எதற்கு எல்லாம் புகார் சொல்லி நஷ்ட ஈடு வாங்கலாம். விமானம் தாமதமானதுக்கு, சொன்ன தரத்தில் சேவைகள் வழங்காததற்கு, தரக் குறைவாக நடத்தப்பட்டதற்கு, பொருட்களை மோசமாக மையாண்டதற்கு என நஷ்ட ஈடு கோரினால் ஓகே. ஆனால் ஒரு இங்கிலாந்துக்காரர், தன் அருகில் குண்டாக இருப்பவர் அமர்ந்ததால் தன் பயணம் பாழாகிவிட்டது என கூறி 6 - 16 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கோரி இருக்கிறார்.

Stephen Huw Prosser

Stephen Huw Prosser

இங்கிலாந்தின் வேல்ஸ் நகரத்தைச் சேர்ந்த இவர் 5 அடி 3 அங்குள உயரம், எடை சுமார் 75 கிலோ. வயது 51. இவர் 10 ஜனவரி 2016-ல் பேங்காங் முதல் லண்டன் வரை பிரிட்டீஷ் ஏர்வேஸ்-ல் பயணித்தார். இவருக்கு ஜன்னல் ஓர இருக்கை வழங்கப்பட்டது. இனி அவர் மொழியில் இருந்து...

 என்ன பிரச்னை

என்ன பிரச்னை

எனக்கு அருகில் 6 அடி நாலு அங்குள உயரத்துடன் ஒரு பிரமாண்ட பயணி அமர்ந்தார். அந்த பிரமாண்ட பயணி மறைந்த ரக்பி (Rugby) விளையாட்டு வீரர் ஜோனா லோமூவைப் போல இருந்தார், ஆனால் ரொம்ப குண்டாக இருந்தார்.

என் இருக்கை
 

என் இருக்கை

அந்த பிரமாண்ட பயணியின் ஒரு பிருட்டம் என் சீட்டிலும் இடத்தைப் பிடித்துக் கொண்டது. இன்னொரு பிருட்டம் அவருக்கு அடுத்த பக்கத்தில் இருந்தவரின் சீட்டிலும் ஆக்ரமித்து இருந்தது. எப்படி சொல்வது என்றும் தெரியவில்லை.

முதுகு வலி

முதுகு வலி

இவர் என் இருக்கையை என் அனுமதி இல்லாமலேயே பகிர்ந்து கொண்டதால் என்னால் சரியாக உட்கார முடியவில்லை. எனக்கு பலத்த முது வலி எடுக்கத் தொடங்கியது. அதோடு என்னால் இயல்பாக உட்கார முடியவில்லை.

 உதவி கேட்பு

உதவி கேட்பு

விமானப் பணியாளர்களிடம் எனக்கு இருக்கையை மாற்றித் தருமாறு கேட்டேன். விமானம் முழுமையாக நிறைந்து இருந்ததால், வேறு இருக்கை வசதி கிடைக்கவில்லை. என்னால் முடிந்த வரை அந்த சிரமமான இருக்கையில் அமர்ந்து பயணித்தேன். வலி அதிகரிக்கும் போது விமானத்திலேயே கொஞ்சம் நடந்து கொண்டேன். அதையும் தாண்டி விமானப் பணியாளர்களின் இருக்கையாவது கிடைக்குமா எனவும் கேட்டேன்... அதுவும் முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.

வலி அதிகரிப்பு

வலி அதிகரிப்பு

எனக்கு மலையில் பைக் ஓட்டும் mountain-biking மற்றும் நீண்ட தூரம் இருசக்கர வாகனத்திலெயே பயணிக்கும் motorcycling போன்றவைகள் செய்ய முடியாமல் தவிக்கிறேன். என்னுடைய பணி நேரத்தையும் இந்த முதுகு வலியால் கடந்த இரண்டு ஆண்டுகளில் கணிசமாக குறைத்துக் கொண்டிருக்கிறேன். இதற்கு எல்லாம் காரணம் அந்த 13 மணி நேர விமானப் பயணம் தான் என்கிறார் Stephen Huw Prosser

புகார் அளித்தல்

புகார் அளித்தல்

இது குறித்து பிரிட்டேஷ் விமான நிறுவனத்திடம் புகாரும் அளித்து நஷ்ட ஈடும் கோரி இருக்கிறாராம். நஷ்ட ஈட்டுத் தொகை 7500 முதல் 17500 வரை பிபிசி தொடங்கி ஃபாக்ஸ் நியூஸ் வரை பல பத்திரிகைகள் பல தொகையினைக் கூறுகிறார்கள்.

 பிரிட்டீஷ் ஏர்வேஸ்

பிரிட்டீஷ் ஏர்வேஸ்

Stephen Huw Prosser புகாருக்கு அதே விமானத்திலேயே பயணம் செய்த வாடிக்கையாளர் சேவை அதிகாரி Chris McLindon பதிலளித்திருக்கிறார் "இது போன்ற புகார்கள் வெகு அரிதாகவே எழும். Stephen Huw Prosser சொல்வது போல் அவர் பிரமாண்ட உடற்கட்டு கொண்டவர் தான். ஆனால் அவர் வருணிக்கும் அளவுக்கு அத்தனை தொந்தியும் தொப்பையுமான ஆள் கிடையாது. சொல்லப் போனால் அவர் சீட்டை நிறைத்துக் கொண்டு Stephen Huw Prosser சீட்டிலும் உட்கார்ந்து இருந்தார் என்று சொல்வது ஏற்படையது அல்ல. அதை நானே பார்த்தேன்... அதோடு Stephen Huw Prosser உட்கார்ந்து இருந்த விதமும் ஒரு சாதாரண ஆள் உட்காரும் விதத்தில் இல்லை. அவர் தனக்கு வசதியாக எப்படியோ உட்கார்ந்து இருந்தார். இதெல்லாம் போக நாங்களும் விமானப் பயணிகள் உடன் தான் பயணத்தை முடித்துக் கொண்டு வெளியேறினோம். அப்போது கூட Stephen Huw Prosser சாதாரணமாகத் தான் வெளியேறினார். எந்த ஒரு வலியையும், சிரமத்தையும் காட்டவில்லை, அதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை" என்கிறார் மெக்லிண்டன்.

விமான நிறுவன விதிகள்

விமான நிறுவன விதிகள்

பிரிட்டீஷ் விமான நிறுவன விதிகள் படி ஒரு பயணி விமான பயணச் சீட்டைப் பெரும் போது அவரின் உடல் அளவுகளைச் சொல்லிப் பெற வேண்டும் என்கிற விதி இல்லை எனவே சக பயணி முறையாகத் தான் பயணித்திருக்கிறார் என்கிறது பிரிட்டீஷ் விமான நிறுவனம்.

விமான நிறுவன வக்கீல்

விமான நிறுவன வக்கீல்

இந்த வழக்கு வேல்ஸ் நகர நீதிமன்றத்தில் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விமான நிறுவனம் சார்பாக Timothy Salisbury வாதாடினார். "Stephen Huw Prosser சொல்கின்ற அளவுக்கு அந்த சக பயணியின் உடற்கட்டு இல்லை. அந்த பிரமாண்ட பயணிக்கு சீட் பெல்ட் விரிவாக்கமும் வழங்கப்படவில்லை என்பதையும் சுட்டிக் காட்டினார். அதோடு Stephen Huw Prosser ஒரு பக்கம் என்றால் மறு பக்க இருக்கையில் அமர்ந்திருந்தவர் எந்த ஒரு புகார் தெரிவிக்காததையும் சுட்டிக் காட்டினார்".

 Stephen Huw Prosser-ன் வக்கீல்

Stephen Huw Prosser-ன் வக்கீல்

Jack Harding என்கிற வழக்கறிஞர் தான் Stephen Huw Prosser காக வாதாடினார். "Stephen Huw Prosser தன்னால் முடிந்த வரை அனைத்து வழிகளை முயற்சித்துவிட்டுத் தான் தற்போது வழக்கு தொடுத்திருக்கிறார். 13 மணி நேரப் பயணத்தை அந்த இடமே இல்லாத இருக்கையில் கொஞ்சம் அமர்ந்தும், நடந்தும் என கடத்தி இருக்கிறார். அமர்ந்த வெகு சில மணி நேரத்தினால் தான் இப்படி கடுமையான முதுகு வலியினால் தன் அலுவலகத்துக்குக் கூட ஒழுங்காகச் செல்ல முடியாமல் மன உளைச்சலுக்கும், பொருளாதார இழப்புக்கும் ஆள் ஆகி இருக்கிறார். எனவே கோரிய நஷ்ட ஈட்டைக் கொடுக்கவும்" என கேட்டிருக்கிறார்.

 இப்படி எத்தனை பேர்

இப்படி எத்தனை பேர்

கடந்த ஆண்டு ஒரு ஆஸ்திரேலியர் அமெரிக்கn ஏர்லைன்ஸ் விமானத்தில் இரண்டு குண்டர்களுக்கு மத்தியில் அமர்ந்து சிட்னி முதல் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு பயணம் செய்ததால் கடுமையான முதுகு வலி என சில லட்சங்களை மருத்துவ சிகிச்சைக்கு நஷ்ட ஈடாக கேட்டார்.

அதே போல் அரபு அமீரக விமான நிறுவனத்தில் குண்டாக இருப்பவர் அருகில் இருக்கை கொடுத்ததால் தன் பயணம் கெட்டு விட்டதாக ச்சொல்லி நஷ்ட ஈடு தொடர்ந்தார். இதிஹாட் விமான நிறுவனத்தில் 2015-ல் இதே போன்ற ஒரு வழக்கு பதியப்பட்டது.

 

விமான நிறுவனங்கள் பதில்

விமான நிறுவனங்கள் பதில்

இப்படி பல பேர் சில புதிய காரணங்களைச் சொல்லி விமான நிறுவனங்களை நீதிமன்றங்களுக்கு இழுத்து வருகிறார்கள். எங்களுக்கு வழக்கு நடத்தும் செலவு ஒரு பக்கம் போக, வழக்கில் வாடிக்கையாளர் ஜெயித்தால் அந்த நஷ்ட ஈட்டுத் தொகயையும் கொடுக்க வேண்டி இருக்கிறது. இதுவரை உடற் பருமன் காரணமாக போடப்பட்ட வழக்குகள் மற்றும் புகார்கள் எல்லாம் பணம் பறிக்கை சிலர் கையில் எடுத்திருக்கும் வழிகள் என்றே பார்க்கிறோம் என்கிறார்கள் விமான நிறுவனங்கள்.

இன்னும் Stephen Huw Prosser-ன் இந்த சுவாரஸ்யமான வழக்கு வேல்ஸ் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. விமானத்திலேயே இந்த கதி என்றல் நம் ஊர் சென்னை பேருந்துகளில் ஒரு முறை Stephen Huw Prosser-ஐ ஏற்றி இறக்கினால் அவரே வழக்கு வாபஸ் வாங்கி விடுவார் தானே...? என்னங்க இதுக்கு எல்லாமா கேஸ் போடுவீங்க...?

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

air passengers are claiming compensation for sitting next to fat passengers

air passengers are claiming compensation for sitting next to fat passengers
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X