13 மாதத்தில் $526 பில்லியனை காலி செய்த அலிபாபா.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீனாவின் மிகப் பிரபலமான இகாமர்ஸ் நிறுவனம் தான் அலிபாபா. இந்த குழுமம் சமீபத்திய காலத்தில் சர்வதேச அளவில் அதிகளவு பேசப்பட்டது. இந்த நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா, இவரும் அப்படி தான். தன் வாயாலேயே கெட்டவர்.

 

இதனாலேயே சீன அரசால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும் வருகின்றார். சீனாவில் பெரும் பணக்காரரான ஜாக் மா, அடிக்கடி ஏதேனும் ஒன்றை சொல்லி விட்டு, பின்னர் கடும் விமர்சனத்துக்கும் உள்ளாவது வாடிக்கையான ஒரு விஷயம்.

வருடத்திற்கு ரூ.2 கோடிக்கு மேல் சம்பளம்.. ஐஐடி கேம்பஸில் தூள் கிளப்பிய இந்திய மாணவர்கள்..!

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

இப்படி பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் தான், கடந்த ஆண்டில் சீனாவில் ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜாக் மா, சீனா அரசினை கடுமையாக விமர்சித்தார். சீனாவின் அதிகாரத்துவத்தினை குற்றம் சாட்டினார். சீன அரசு அடுத்த தலைமுறையில் நலனைக் கருத்தில் கொண்டு, சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கூறினார்.

வங்கிகளை சாடல்

வங்கிகளை சாடல்

மேலும் சீன வங்கிகள் அடகு கடைகள் போல செயல்படுவதாக கடுமையாகச் சாடினார். ஏற்கனவே அலிபாபா நிறுவனம் பல சிக்கல்களில் இருந்த நிலையில், ஜாக் மாவின் கடுமையான பேச்சினால் சீன அரசு பெரும் அதிருப்தி அடைந்தது. இதனையடுத்து சீனாவின் மிகப்பெரிய ஐபிஓ நடவடிக்கையாக இருந்த ஆண்ட் குழுமத்தின் ஐபிஓ சில காரணங்களுக்காக நிறுத்தப்பட்டது.

பல பிரச்சனைகள்
 

பல பிரச்சனைகள்

அதோடு பிரச்சனை முடிந்து விடவில்லை. அதன் பின்னர் தான் சீன அரசு தன் விசாரணையை அலிபாபாவின் குழுமத்தின் மீது தொடங்கியது. இப்படி தொடர்ந்து பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வந்த அலிபாபா நிறுவனமும், ஜாக் மாவும் இன்னும் பல பெரும் பிரச்சனைகளை அந்த சமயத்தில் சந்தித்தனர் எனலாம்.

ஜாக் மாவை காணவில்லை

ஜாக் மாவை காணவில்லை

அந்த சமயத்தில் தான் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி முதல் தடவை பொதுவெளியில் காண முடியவில்லை, அவரை காணவில்லை என செய்திகள் வெளியானது.

அவர் எங்கு இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை, அப்படியே தெரிந்தாலும் சொல்வதற்கும் யாரும் இல்லை, அவரது தொண்டு நிறுவனத்தின் சார்பில் நடத்தப்படும் ஆப்பிரிக்காவின் பிசினஸ் ஹீரோக்கள் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஜாக் மா நடுவராக செயல்பட்டு வந்த நிலையில், அந்த நிகழ்ச்சியிலும் கூட அவர் தோன்றவில்லை.

குழப்பமே

குழப்பமே

இப்படி பல கேள்விகளுக்கு மத்தியில் சீன அரசின் கண்காணிப்பில் ஜாக் மா இருப்பதாகவும், அவர் கைது செய்யப்பட்டு சிறை பட்டிருக்கலாம், அப்படி இல்லை எனில் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கலாம் என்ற குழப்பம் நீடித்து வந்தது. எனினும் இது குறித்த நான் உண்மை இதுவரையில் குழப்பமாகவே இருந்து வருகிறது.

சந்தை மதிப்பு சரிவு

சந்தை மதிப்பு சரிவு

எனினும் பிரச்சனை இத்தோடு முடிந்த பாடாகவும் இல்லை. அலிபாபா குழுமம் பேரில் சீன அதிகாரிகள் பல்வேறு விசாரணைகளை தொடங்கினர். இந்த விசாரணை தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே அலிபாபா நிறுவனத்தின் சந்தை மதிப்பினை வெகுவாக சரிந்தது எனலாம். மேலும் அலிபாபா குழுமத்தினை தேசியமயமாக்க அரசு பரிசீலித்து வருவதாக வருவதாகவும் அப்போது செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

எதிர்மறை எண்ணத்தில் முதலீட்டாளர்கள்

எதிர்மறை எண்ணத்தில் முதலீட்டாளர்கள்

சீன அரசின் இந்த நடவடிக்கையானது ஒருபுறம் முதலீட்டாளர்கள் மத்தியில் மிக எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தியிருந்தது. எனினும் சீனாவோ தொழில்நுட்ப நிறுவனங்கள், அரசு அல்லது சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியினரின் கட்டுப்பாட்டில் இல்லை. அவைகள் சுதந்திரமாக செயல்பட்டு வருவதாகவும் ஒரு தரப்புக் கூறியது.

சீனா அரசின் மீதான சந்தேகம்

சீனா அரசின் மீதான சந்தேகம்

எனினும் சீன அரசின் மீதான சந்தேகத்தின் மத்தியில், பல நாடுகளும் சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்தன. குறிப்பாக அமெரிக்காவில் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு பல்வேறு ஆப்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. சீனாவின் மிகப் பெரிய டெக் ஜாம்பவான் நிறுவனங்களுக்கும் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது. அமெரிக்காவில் மட்டும் அல்ல இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் சீன நிறுவனங்களின் ஆப்களை தடை செய்ய ஆரம்பித்தன. பல்வேறு கட்டுபாடுகளை விதிக்க ஆரம்பித்தன.

பெரும் இழப்பு

பெரும் இழப்பு

இதற்கிடையில்தான் அலிபாபா குழுமம் நிறுவனத்தின் பங்கானது, அமெரிக்க பங்குச் சந்தையில் பெரும் சரிவினைக் கண்டது. கடந்த 13 மாதங்களாக பெரும் வீழ்ச்சி கண்ட இந்த பங்கின் விலையானது, மிகவும் மலிவான விலையில் உள்ளது. கடந்த 13 மாதங்களில் மட்டும் இந்த பங்கு சரிவினால், அலிபாபாவுக்கு 526 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கேள்விக்குறியாகும் எதிர்காலம்

கேள்விக்குறியாகும் எதிர்காலம்

பல்வேறு பிரச்சனைகளுக்கும் மத்தியில் இந்த நிறுவனத்தின் விற்பனையானது, நடப்பு ஆண்டில் இன்னும் சரிவடையலாம். இதன் காரணமாக அதன் வருவாய் மேலும் குறையலாம். மேலும் சீனா அரசு தற்போது கார்ப்பரேட்டுகளுக்கு கடும் கட்டுபாடுகளை விதித்து வரும் நிலையில், அலிபாபா போன்ற தொழில் நுட்ப நிறுவனங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 மீண்டும் கட்டுப்பாடா?

மீண்டும் கட்டுப்பாடா?

மேலும் வெளிநாட்டு பங்கு சந்தைகளில் VIEக்கள் மூலம் பட்டியலிடுவதை தடுக்க திட்டமிடுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இது குறித்து அதிகாரபூர்வமாக எந்த தகவலும் இல்லை. அப்படி நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் சீனா நிறுவனங்களின் பங்கு இன்னும் கூட சரியலாம் என்ற யூகங்கள் இருந்து வருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: alibaba அலிபாபா
English summary

Alibaba shares are very cheapest ever as crackdown wiped many billions of wealth

Alibaba shares are very cheapest ever as crackdown wiped many billions of wealth/13 மாதத்தில் $526 பில்லியனை காலி செய்த அலிபாபா.. முதலீட்டாளார்கள் அதிர்ச்சி.
Story first published: Thursday, December 2, 2021, 17:44 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X