ஆப்பிள் நிறுவனமா இப்படி செய்தது.. காப்புரிமை மீறல் உண்மையா.. வழக்கு பதிவு செய்த மருத்துவர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக, காப்புரிமை மீறியதாக வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

 

சரி உலக அளவில் மிகப் பிரபலமான ஒரு நிறுவனத்தின் மீது வழக்கு செய்துள்ளாரா? ஏன் எதற்காக வழக்கு தொடுத்துள்ளார். என்ன பிரச்சனை என்று தான் இக்கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக காப்புரிமை என்பது ஒரு கண்டுபிடிப்புக்கான முழு உரிமையையும் குறிப்பிட்ட காலம் வரை கண்டுப்பிடிப்பாளருக்கே உரியது என்று பதிவு செய்யப்படுவதாகும். இவ்வுரிமை குறிப்பிட்ட எல்லைக்குள் வழங்க முடியும். ஆக இந்த உரிமையால் உரிமையாளரைத் தவிர வேறெவரும் உருவாக்கவோ அல்லது உற்பத்தி செய்யவோ கூடாதென தடை செய்கிறது.

ஆப்பிள் விதிமுறையை மீறியுள்ளது?

ஆப்பிள் விதிமுறையை மீறியுள்ளது?

இப்படி ஒரு நிலையில் தான் அமெரிக்கா மருத்துவர் ஒருவர், தனது மனுவில் ‛ஆப்பிள் நிறுவனம் தங்களது புதிய தயாரிப்பான ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3ல் ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் ஐக் (ஒழுங்கற்ற இதயத்துடிப்பை) கண்டறியப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுளளனர். அதன்படி ஆப்பிள் நிறுவனம் தனது காப்புரிமையை மீறியுள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

காப்புரிமை வழங்கல்

காப்புரிமை வழங்கல்

நியூயார்க் பல்கலைக்கழகத்தில் இருதயநோய் நிபுணரான டாக்டர் ஜோசப் வீசலுக்கு, கடந்த மார்ச் 28, 2006 அன்று மாறுபட்ட இதயத்துடிப்பை கண்டறிவதற்கான முறை மற்றும் அதை கண்டறியும் எந்திரத்திற்கான காப்புரிமை வழங்கப்பட்டது. ஆனால் இந்த தொழில்நுட்ப முறையானது ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3ல் வெளியானதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20, 2017 அன்று ஜோசப், ஆப்பிள் நிறுவனத்திடம் தனது காப்புரிமை பற்றி கூறியதாக கூறப்படுகிறது.

பேச்சு வார்த்தைக்கு மறுப்பு
 

பேச்சு வார்த்தைக்கு மறுப்பு

மேலும் டாக்டர் ஜோசப் அந்த காப்புரிமை பற்றி விரிவான விளக்கப்படங்களுடன் தனது உரிமை மீறப்பட்டுள்ளதை எடுத்துக் கூறிய பிறகும், ஆப்பிள் நிறுவனம் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மிகக் கடுப்பான டாக்டர் பின்னரே இந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாதிப்பாளர்களுக்கு தகவல் கிடைக்கும்

பாதிப்பாளர்களுக்கு தகவல் கிடைக்கும்

ஒரு நபர் உண்மையிலேயே ஒழுங்கற்ற இதயத்துடிப்பால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து ஆப்பிள் வாட்ச் ஒரு இறுதி முடிவை வழங்க முடியாது என்றாலும். இதனால் ரத்தம் உறைதல், மூளைப் பக்கவாதம் போன்ற விளைவுகள் ஏற்படும். எனவே, ஆப்பிள் வாட்ச் மூலம் ஒருவருக்கு இப்பிரச்னை இருப்பது தெரிந்தால் மருத்துவரை அனுகும் படி நோயாளிக்கு தகவல் கிடைக்கும் என்றும் அந்த டாக்டர் விளக்கம் கொடுத்துள்ளார்.

வாட்ச் ஈசிஜி போன்று செயல்படும்

வாட்ச் ஈசிஜி போன்று செயல்படும்

ஆக ஈசிஜி போன்று செயல்படும் இந்த வாட்ச் மூலம் நோயாளி வாட்சில் உள்ள டிஜிட்டல் கிரவுனை விரலால் பிடித்ததும் சமிக்ஞைகள் மூலம் இதயத்துடிப்பு அளவிடப்படுகிறது. 30 விநாடிக்குள் நோயாளிக்கு இதயத்துடிப்பு குறித்த தகவல்கள் இதன் மூலம் கிடைத்து விடும். இருப்பினும் வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒரு சதவீதத்தினருக்கு மட்டுமே ஒழுங்கற்ற இதயத்துடிப்பு பிரச்னை இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் காப்புரிமை மீறப்பட்டது உண்மைத் தான் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

America based doctor filled lawsuit against apple

Us based cardiologist DR.joseph wiesel filled a lawsuit against apple. Joseph said he notified Apple about his patent on September 20, 2017, following the rollout of the Apple Watch Series 3. But apple was not yet to respond to the lawsuit filed at the court. Us based cardiologist DR.joseph wiesel filled a lawsuit against apple. Joseph said he notified Apple about his patent on September 20, 2017, following the rollout of the Apple Watch Series 3. But apple was not yet to respond to the lawsuit filed at the court.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X