அமெரிக்காவின் அதிரடி திட்டம்.. ஜாக் மாவுக்கு மீண்டும் ஒரு சிக்கல்.. பின்னணி என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன்: அமெரிக்காவின் அதிபரனான டொனால்டு டிரம்ப் இன்னும் சில தினங்களில தனது பதவியில் இருந்து விலக உள்ள நிலையில், சீனாவின் டெக் ஜாம்பவான்களான அலிபாபா, டென்சென்ட் உள்ளிட்ட நிறுவனங்களை அமெரிக்க பங்கு சந்தையிலிருந்து தடை செய்யும் பட்டியலில் இணைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஏற்கனவே கொரோனாவின் மத்தியில் பல பிரச்சனைகள் அமெரிக்கா சீனா இடையே நிலவி வருகின்றது. இந்த நிலையில் அமெரிக்கா பங்கு சந்தையில் இருந்து, கடந்த வாரத்தில் தான் சில பங்குகளை தடை செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அந்த பட்டியலில் சீனாவின் மிகப்பெரிய ஆன்லைன் ஈகாமர்ஸ் நிறுவனமான அலிபாபா மற்றும் மற்றொரு டெக் நிறுவனமான டென்சண்டும் தடை செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

ஹூண்டாயுடன் கைகோர்க்கும் ஜேகே டயர்ஸ்.. இது ரொம்ப நல்ல விஷயம் தான்..!

மிகப்பெரிய நிறுவனங்கள்

மிகப்பெரிய நிறுவனங்கள்

இந்த நிறுவனங்கள் அமெரிக்காவின் ராணுவத்தினால் கட்டுப்படுத்தப்படுவதாகவும், இதனால் இந்த நடவடிக்கையை அமெரிக்கா எடுக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது ஆசியாவின் இரண்டு மிகப்பெரிய ஜாம்பவான்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனங்களின் மதிப்பு சுமார் 1.3 டிரில்லியன் ரூபாயாகும்.

தடை செய்ய திட்டம்

தடை செய்ய திட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். அந்த வகையில் அமெரிக்க பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள சீன நிறுவனங்களை தடை செய்ய திட்டமிட்டு வருகின்றார். சீனாவில் பல நிறுவனங்கள், அமெரிக்க பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. இவைகள் சீனாவினை விட, அமெரிக்க பங்கு சந்தையில் அதிக முதலீடுகளை ஈர்த்துள்ளன.

சீன இராணுவத்திற்கு ஆதரவு
 

சீன இராணுவத்திற்கு ஆதரவு

சீன நிறுவனங்கள் அதோடு அமெரிக்காவின் இறையாண்மைக்கு எதிராகவும், சீன இராணுவத்திற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது. டொனால்டு டிரம்பின் பதவி காலம் இன்னும் சில தினங்களில் முடிவடையவுள்ள நிலையில், மேற்கண்ட சீன நிறுவனங்களை தடை செய்வதில் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும், அது இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் தெரிகிறது.

கருத்து கூற மறுப்பு

கருத்து கூற மறுப்பு

தற்போது தடை செய்வதற்கான இறுதி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து மேற்கண்ட இரு நிறுவனங்களும் தங்களது கருத்துகளை கூற மறுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் சீனாவின் மிகப்பெரிய ஈ காமர்ஸ் நிறுவனமான அலிபாபா, கேமிங் மற்றும் சமூக வலைதளமான டென்சென்ட் ஆகியவற்றின் பங்குகள் ஹாங்காங் பங்கு சந்தையில் சுமார் 4% குறைந்துள்ளது. இதே அலிபாவின் பங்குகள் அமெரிக்க சந்தையில் புதன்கிழமையன்று 5% மேல் சரிந்து முடிவடைந்துள்ளது.

கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்

கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்

மேலும் அலிபாபா மற்றும் டென்சென்ட் நிறுவனங்கள் நீண்ட கால நோக்கில் கடும் கட்டுப்பாடுகளை மேற்கொள்ள கூடும். இதன் மதிப்பு சுமார் 1.3 டிரில்லியன் டாலர். ஆக முதலீட்டாளர்கள் பரவலாக இதில் பங்குகளை வைத்திருக்க கூடும். இதனை தடை செய்தால் அது அமெரிக்க பங்கு சந்தைக்கு பெரும் பின்னடைவை தரும். நிதி பாதிப்பும் ஏற்படலாம். இதனால் இந்த நிறுவனம் மீண்டும் பாதிப்பினை எதிர்கொள்ளலாம்.

ஜாக் மாவுக்கு சிக்கல் தான்

ஜாக் மாவுக்கு சிக்கல் தான்

ஏற்கனவே சீனாவிலும் பெரும் பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் ஜாக் மாவுக்கு, அமெரிக்காவின் இந்த நடவடிக்கையானது மீண்டும் சிக்கலை கொடுக்கலாம். ஏற்கனகே ஆண்ட் குழுமத்தின் மிகப்பெரிய பொதுப் பங்கு வெளியீடு நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது அமெரிக்க பங்கு சந்தையில் இருந்தும் நீக்கப்பட்டாலும் மீண்டும் சிக்கலை சந்திக்க கூடும்.

சீனாவுக்கும் பின்னடைவு தான்

சீனாவுக்கும் பின்னடைவு தான்

ஆரம்பத்தில் இருந்தே அமெரிக்கா சீனா இடையே பிரச்சனை இருந்து வரும் நிலையில், இந்த நடவடிக்கையானது அமெரிக்கா சீனா உறவில் மேற்கொண்டு விரிசலை தான் ஏற்படுத்தும். இந்த நிலையில் புதிய அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பிடனின் வருக்கைக்கு பின்பாவது, இதெல்லாம் மாறுமா? பிரச்சனைகள் குறையுமா என்பதே சீனாவின் எதிர்பார்ப்பாக உள்ளது. கொஞ்சம் பொறுத்திருந்து தான் பார்ப்போமே..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

America may consider adding alibaba, tencent to china’s stock ban

US – china news updates.. America may consider adding alibaba, tencent to china’s stock ban
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X