அமெரிக்கா - சீனா இடையில் தீவிரமான வர்த்தகப் போர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சீனா மீது இதுவரை இல்லாத மிகப் பெரிய அளவிலான வர்த்தகப் போரினை தொடுத்துள்ளார். சீனாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் 34 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு வரியினை உயர்த்தியுள்ளார்.

 

இதனை அடுத்து சீனாவும் உடனடியாக அமெரிக்காவிற்குப் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.

 வரி உயர்வு எப்போது முதல்?

வரி உயர்வு எப்போது முதல்?

வாஷிங்டன்னில் சீன பொருட்கள் மீதான புதிய வரி வெள்ளிக்கிழமை காலை 12:01 முதல் துவங்க உள்ளதால் சீனாவில் இந்தப் பாதிப்பானது மதிய உணவு வேளைக்குப் பின் இருக்கும். மேலும் அடுத்த 2 வாரத்தில் 16 பில்லியன் டாலர் மதிப்பிலான சீன பொருட்கள் மீத வரியினை உயர்த்த இருப்பதாகவும் டிரம்ப் அரசிடம் இருந்து கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

எவ்வளவு பாதிப்பு ஏற்படும்?

எவ்வளவு பாதிப்பு ஏற்படும்?

சீனா மீது அமெரிக்கா தொடுத்து வரும் இந்த வர்த்தகப் போரினால் 550 பில்லியன் டாலர் வரை பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. 2017-ம் ஆண்டுச் சீஆவில் இருந்து 550 பில்லியன் டாலர் மதிப்பிலான சீன பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எவ்வளவு வரி உயர்வு
 

எவ்வளவு வரி உயர்வு

சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் விவசாயம் முதல் விமான உதிரிப்பாகங்கள் வரை எனப் பல்வேறு பொருட்களுக்கு இந்த 25 சதவீத கூடுதல் வரியானது இன்று இரவு 12:01 முதல் அமலுக்கு வருகிறது. அமெரிக்காவிற்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்று அமெரிக்காவின் சோயா பீன்ஸ் முதல் பன்றிக்கறி வரை பல பொருட்களுக்கு வரியினை உயர்த்துவோம் என்று ஜீ ஜின்பிங் அரசு தெரிவித்துள்ளது.

சீனா குற்றச்சாட்டு

சீனா குற்றச்சாட்டு

உலக வர்த்தகச் சபையின் விதிகளை மீறி அமரிக்கா வரலாறு காணாத அளவில் மிகப் பெரிய வர்த்தகப் போரினை தொடுத்துள்ளது என்று சீன வர்த்தக அமைச்சகம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் சீனாவின் அறிக்கையில் அமெரிக்காவிற்கு எதிராக வர்த்தகப் போரினை எப்படித் துவக்க இருக்கிறோம் என்ற விவரங்கள் ஏதும் இல்லை.

 அமெரிக்கா

அமெரிக்கா

சீன பொருட்கள் மீது அமெரிக்கா முதன் முறையாக இந்த அளவிற்கு வரியினை உயர்த்தியுள்ளது மட்டும் இல்லாமல் அமெரிக்காவின் அறிவுசார்ந்த சொத்துக்களைச் சீனா திருடுகிறது என்றும், அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தில் நியாயமாக ஈடுபடவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

வல்லுநர்கள்

வல்லுநர்கள்

அமெரிக்க அரசு எடுத்து வரும் இந்த நடவடிக்கைகளால் நமக்கே இந்தப் பாதிப்பு திரும்பி வரும் என்று பராக ஒபாமா கீழ் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியாக இருந்த ராபர்ட் ஹோலிமென் தெரிவித்துள்ளார். அன்மையில் அமெரிக்கா ஸ்டீல் மற்றும் அலுமினியம் இறக்குமதி மீது வரியினை உயர்த்திய போது சீனா, இந்தியா மட்டும் இல்லாமல் ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து கனடாவும் தங்களது எதிர்ப்பினை காட்டின.

அமெரிக்காவின் நிலைப்படை விமர்சிக்கும் படி சீன ஊடகங்கள் பல்வேறு வகையில் சர்ச்சைக்குள்ளான கருத்துக்களை வெளியிட்டு விமர்சனம் செய்து வருகின்றன.

 

ஹார்லி டேவிட்சன் மற்றும் ஐக்கானிக் நிறுவனங்கள்

ஹார்லி டேவிட்சன் மற்றும் ஐக்கானிக் நிறுவனங்கள்

அமெரிக்காவின் ஆடம்பர பைக் நிறுவனமான ஹார்லி டேவ்ட்சன் இந்த வரி உஅர்வு சிக்கல்களில் இருந்து தீர்வு கான ஐரோப்பிய நாடுகளில் தங்களது உற்பத்தியைத் துவங்க முடிவு செய்துள்ளனர். மேலும் அமெரிக்காவின் மிகப் பெரிய நிறுவனங்களான ஆப்பிள், வால்மார்ட், ஜெனரல் மோட்டார்ஸ் உள்ளிட்டோரும் சீனாவில் உள்ள தங்களது வர்த்தகத்தினை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர்.

சீனாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்களுக்கு வந்த சிக்கல்

சீனாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்களுக்கு வந்த சிக்கல்

சீன பொருட்களுக்கு டிரம்ப் அரசு வரியினை உயர்த்தும் போது அமெரிக்க நிறுவனங்களுக்கு உள்ள விதிகளைக் கடுமையாகப் பின்பற்றி அதனைக் கடைப்பிடிக்காத போது அபராதம் போன்றவற்றை விதிக்கும் நடவடிக்கைகளில் ஜின்பிங் அரசு இறங்கியுள்ளது.

பங்கு சந்தை

பங்கு சந்தை

அமெரிக்க - சீன இடையிலான இந்த வர்த்தகப் போர் அபாயத்தினால் கடந்த சில வாரங்களாகவே சீன பங்கு சந்தை கரடி வசம் சிக்கியுள்ளது. அதே நேரம் அமெரிக்கப் பங்கு சந்தை 2 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

2016-ம் ஆண்டுத் தேர்தலின் போது டொனால்டு டிரம்ப் பிற நாடுகளிடம் அமெரிக்காவிற்கு உள்ள சமநிலையற்ற வர்த்தக உறவுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

பாதிப்பு எப்படி இருக்கும்?

பாதிப்பு எப்படி இருக்கும்?

வரும் நாட்களில் அமெரிக்கா, சீனா என இரண்டு நாடுகளும் வர்த்தகப் போரில் என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க இருக்கின்றன என்பதைப் பொருத்துப் பொருளாதாரம் பாதிக்கப்படும். பிற நாடுகளின் பொருட்கள் மீது அமெரிக்க 10 சதவீத வரியினை உயர்த்தினால் அவர்களின் நாட்டு வளர்ச்சி 2020-ம் ஆண்டு 0.8 சதவீதம் வரை பாதிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சீனா மீது அமெரிக்கா எடுத்துள்ள இந்த முதற்கட்ட 34 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மீதான வரி உயர்வானது மிகவும் குறைவான பதிப்பினை தான் ஏற்படுத்தும். ஆனால் இது தொடர்ந்து அதிகரிக்கும் போது பாதிப்புகளும் பெரியதாக இருக்கும். அதனைச் சமாளிக்கச் சீனாவும் பிற நாடுகளுக்கு இடையில் வர்த்தகத்தினைப் பலப்படுத்தும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது.

 

ஆட்டோமொபைல்

ஆட்டோமொபைல்

வர்த்தகப் போரின் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக டிரம்ப் அரசு ஆட்டோமொபைல் துறை மீது கைவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு அதிகப்படியான வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இரு அரசுக்கு இடையிலான இந்தப் பிரச்சனைகளில் பன்னாட்டு நிறுவனங்கள் தான் பெரும் அளவில் சிக்கித்தவித்து வருகிறன.

 என்ன ஆகும்?

என்ன ஆகும்?

அமெரிக்கா எவ்வளவு பெரிய வர்த்தகப் போரினை சீனா மீது தொடுத்தாலும் அதனைச் சமாளிக்கும் பலத்துடன் தான் உள்ளனர். ஆனால் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகள் மீது அமெரிக்கா வர்த்தகப் போரினை தொடுத்தால் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

America's Trade War On China. Donald Trump Fires $34 bn Tariff Gun At China

America's Trade War On China. Donald Trump Fires $34 bn Tariff Gun At China
Story first published: Friday, July 6, 2018, 14:09 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X