டேவிட் ராக்ஃபெல்லர்: அமெரிக்காவை ஆட்டிப்படைத்த சக்கரவர்த்தி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ராக்ஃபெல்லர் என்ற பெயர் அமெரிக்காவின் பணம் படைத்த, உயர்ந்த பரம்பரைச செல்வம் மற்றும் சக்திவாய்ந்த அதிகாரத்திற்கும் ஆற்றலுக்கும் அர்த்தமாக விளங்கி வருகிறது.

 

20ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதிகளில் யாருக்கேனும் நிதி நெருக்கடி ஏற்பட்டால் ராக்ஃபெல்லர் குடும்பம் தான் முதலில் நினைவிற்கும் வரும். நான் இங்கு குறிப்பிடுவது சாதாரண மக்களை அல்ல, பெரிய பெரிய நிறுவனங்கள், பில்லியனர்களுக்கான, சில நேரங்களில் நாடுகளுக்கும்.

ராக்ஃபெல்லர் தனது 101 வது வயதில் தூக்கத்தில் இறந்த போது இந்த சக்தி வாய்ந்த அமெரிக்க குடும்பம் தங்கள் குடும்ப ஆதிக்க அதிகாரத்தை இழந்தது நின்றது.

யார் இவர்..?

யார் இவர்..?

டேவிட் ராக்ஃபெல்லர் சேஸ் மண்ஹட்டன் வங்கியை (Chase Manhattan bank) அமெரிக்க நாட்டின் நிதியியல் நிறுவனங்களின் சின்னமாகக் கட்டியெழுப்பியதில் மிகமுக்கிய கருவியாக இருந்தார். மேலும் அவரது தொண்டு முயற்சிகளுக்காக பரவலாக அறியப்பட்டார்.

இவர் 19ஆம் நூற்றாண்டில் இந்த குடும்ப செல்வத்தை நிறுவிய திரு. ஜான் டி ராக்ஃபெல்லர் சீனியர் அவர்களின் பேரப்பிள்ளைகளில் உயிருடன் இருக்கும் கடைசி பேரன் ஆவார்.

இந்த ஆதிக்கம் நிறைந்த குடும்பத்தின் துவக்கத்தை பற்றி தெரிந்துக்கொள்ள யாருக்கு தான் ஆசை இருக்காது. வாங்க பார்ப்போம்.

இங்கே தான் எல்லாம் தொடங்கியது..?

இங்கே தான் எல்லாம் தொடங்கியது..?

சகோதரர்களான ஜேம்ஸ் டி மற்றும் வில்லியம் ராக்ஃபெல்லர் ஆகியோர் Standard Oil என்ற எண்ணெய் நிறுவனக் குழுவை 1870 - இல் ஓஹியோ மாகாணம், க்ளீவ் லேண்டில் தலைமையேற்று வழி நடத்தினர். அப்போது உலகளாவிய தொழிற்புரட்சி முழு வீச்சில் இருந்ததால் நீண்ட நாட்களுக்கு முன்பே இந்த ஸ்டாண்டர்ட் ஆயில் எண்ணெய் நிறுவனமானது ராக்ஃபெல்லர்ஸை உலகின் உயர்ந்த செல்வந்தக் குடும்பமாக உருவாக்கியது.

ஜான் டி ராக்ஃபெல்லர் போட்டிகளற்ற சந்தையில் வேலை செய்வதில் உள்ள சாதகங்களைக் கண்டார். மேலும் அவரது பார்வைக்குட்பட்டப் போட்டியாளர்களை சில வழிமுறைகளைப் பின்பற்றி துரத்தியடித்து சந்தையைக் கைப்பற்றினார்.

தொடர் வெற்றி
 

தொடர் வெற்றி

இந்த முறை நடைமுறையில் பெருமளவில் வெற்றிகரமாக இருந்தது. ஆனால் பெருமளவில் மற்றவர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த தலைமைக்குழு அவர்களின் விற்பனைத் தனியுரிமையை வெளியில் தெரியாமல் மறைக்க பல்வேறு புத்திசாலித்தனமான வழிமுறைகளைப் பயன்படுத்தியது.

ஆனால் 1890 - இல் காங்கிரஸ் தலைமையில் "ஷர்மன் ஆண்டி டிரஸ்ட்" சட்டம் அமலாக்கப்பட்ட போது அது இறுதியில் ஸ்டாண்டர்ட் ஆயில் நிறுவனத்தின் உடைப்புக்கு வழிவகுத்தது.

எஸ்ஸோ, எக்ஸான், மற்றும் செவ்ரான்

எஸ்ஸோ, எக்ஸான், மற்றும் செவ்ரான்

ஆனாலும் அது நிச்சயமாக ராக்ஃபெல்லர்ஸ் குடும்பத்தின் வளர்ச்சியையும் செல்வாக்கையும் எந்த விதத்திலும் குறைக்கவில்லை. ஸ்டாண்டர்ட் ஆயில் நிறுவனத்திலிருந்து உடைந்து வெளியேறிய சிறு துண்டுகளான எஸ்ஸோ, எக்ஸான், மற்றும் செவ்ரான் போன்றவை உடைந்தது.

இந்த நிறுவனங்கள் தான் இன்று எண்ணெய் உலகை ஆட்சி செய்து வருகிறது என்றால் மிகையாகாது.

ராக்ஃபெல்லர் குடும்பமும் அரசியலும்

ராக்ஃபெல்லர் குடும்பமும் அரசியலும்

கச்சா எண்ணெய் மற்றும் வங்கித்துறையில் ஆட்சி செய்த ராக்ஃபெல்லர் குடும்பம் அன்று வரை அரசியலில் துணையுடன் பல வெற்றிகளை கண்ட நிலையில், 20 ஆம் நூற்றாண்டில் நேரடி அரசியலில் குதிக்க திட்டமிட்டனர். இதன் பிடி இவர்களுக்கு சந்தை சூழலும் சாதகமாக அமைந்தது காலத்தின் கட்டாயம்.

20 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் அரசியலையும் செல்வத்தையும் பிரித்துப் பார்ப்பதென்பது கிட்டத்தட்ட சாத்தியமில்லாத ஒன்றாக இருந்தது. எனவே செல்வந்தர்களான ஜான் டி ஜுனியரின் மகனும் ஜான் டி சீனியரின் பேரனுமான நெல்சன் ராக்ஃபெல்லர் அரசியலை நாடியது இயற்கையாகவே பொருத்தமாகக் காணப்பட்டார். இது அவர்களின் ஒட்டுமொத்த குடும்பத்தின் தேர்வு.

நியூயார்க் ஆளுநர்

நியூயார்க் ஆளுநர்

சிறிய பதவிகளுக்குத் தேரந்தெடுக்கப்பட்டு பணியாற்றியப் பிறகு 1959 - இல் நியூயார்க்கின் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது நெல்சன் தனது முதல் பெரிய நடவடிக்கையை மேற்கொண்டார்.

அவரது தாத்தா 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஸ்டாண்டர்ட் ஆயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை நியூயார்க்கிற்கு மாற்றிய போது ராக்ஃபெல்லர்கள் நியூயார்க் நகரின் முதல் செல்வந்தர் குடும்பமாகக் கருதப்பட்டனர். இப்போது நியூயார்க் ஆளுநராக நெல்சனின் பணிகளும் அமெரிக்க வரலாற்றில் நீங்க இடம் பிடித்துள்ளது.

துணை ஜனாதிபதி

துணை ஜனாதிபதி

ரிச்சர்ட் நிக்சனின் ராஜினாமாவைத் தொடர்ந்து ஜெரால்ட் ஃபோர்ட் ஜனாதிபதியாக பதவி உயர்த்தப்பட்ட பிறகு, அவர் நியூயார்க்கின் அப்போதைய ஆளுநரை, துணை ஜனாதிபதியாக பணியாற்ற அழைத்தார்.

இந்த சூழ்நிலை ராக்ஃபெல்லரை சுதந்திர உலகின் தலைவராவதற்கான மிக நெருக்கமான ஒரு இடத்தில் கொண்டு சென்று வைத்தது.

அரசியலில் ராக்ஃபெல்லர் குடும்பத்தின் ஆதிக்கம்

அரசியலில் ராக்ஃபெல்லர் குடும்பத்தின் ஆதிக்கம்

பிற்காலத்தில் இவரின் தலைமுறைகளில் 1960 களின் பிற்பகுதியில் ஆர்கன்சாஸ் மாநில கவர்னராக பணியாற்றிய வின்த்ராப் ராக்ஃபெல்லரும், மற்றும் மேற்கு வெர்ஜீனியாவில் ஆளுநராகவும், செனட்டராகவும் பணியாற்றிய ஜேய் ராக்ஃபெல்லர் உட்பட மற்ற பல ராக்ஃபெல்லர்களும் அவரது பாதையைப் பின்பற்றினர்.

இதுவே ராக்ஃபெல்லர் குடும்பத்தின் ஆதிக்கம் வளர அடிப்படையாக அமைந்தது.

டேவிட் ராக்ஃபெல்லரின் வாழ்க்கை

டேவிட் ராக்ஃபெல்லரின் வாழ்க்கை

பொது அலுவலகத்தின் அழைப்பை மறுத்த ராக்ஃபெல்லர்களில் ஒருவர் நெல்சனின் சகோதரரான டேவிட் ஆவார். 1968இல் ராபர்ட் கென்னடி படுகொலை செய்யப்பட்ட பின்பு, அப்போதைய ஆளுநர் நெல்சன் ராக்ஃபெல்லர் அவருடைய சகோதரருக்கு காலியாக இருந்த நியூயார்க் செனட் பதவியை வழங்கினார். ஆனால் டேவிட் அதை மறுத்து விட்டு, சேஸ் மண்ஹட்டன் வங்கியை நடத்துவதிலும் மற்றும் தொண்டு மற்றும் இயற்கை பாதுகாப்பு முயற்சிகளில் கவனம் செலுத்துவதையுமே விரும்பினார்.

ஆர்வம்

ஆர்வம்

டேவிட் ராக்ஃபெல்லர்-இன் இயற்கை மீதான ஆர்வம் அவரது சிறுவயது நாட்களில் குடும்பத்துக்கு சொந்தமான வெஸ்ட்செஸ்டர் (Westchester) நியூயார்க் தோட்டத்தில் கழித்த போது தொடங்கியது.

வெளி உலகத்திற்கு அதிகம் அறிந்திருக்கப்படாத வழக்கமற்ற புகழ்பெற்றிராத ஒரு செயலான உலகின் மாபெரும் வண்டுகள் சேகரிப்பு பணியை டேவிட் செய்து வந்தார். அவர் குறிப்பாக கடலோர நிலங்களைப் பாதுகாப்பதில் அதீத ஆர்வம் கொண்டிருந்தார்.

ராக்ஃபெல்லர்களின் குடிமரபு

ராக்ஃபெல்லர்களின் குடிமரபு

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் அமெரிக்காவில் செழித்து வெற்றியடைந்த ஏராளமான சக்தி வாய்ந்த குடும்பங்கள் இருந்தன.

ராக்ஃபெல்லர்கள் செய்ததைப் போலவே டுபான்ட்சும் (Dupont) மெலான்சும் (Mellon) வியாபாரத்தில் தங்கள் முத்திரையைப் பதித்தனர். ஆனால் அந்தக் குடும்பங்கள் ராக்ஃபெல்லர்களைப் போல அமெரிக்காவின் கலாச்சார நிலப்பரப்பை ஊடுருவவில்லை.

ராக்ஃபெல்லர்களைப் போலவே கென்னடி குடும்பத்தினரும் அமெரிக்காவின் ராஜ குடும்ப பாத்திரத்தை ஏற்றுள்ளனர் என்று ஒரு சிலர் வாதிடலாம். ஆனால் நியூயார்க் நகரத்தில் ராக்ஃபெல்லர்கள் பதித்த முத்திரை மக்கள் மனதை ஈர்த்து தனித்தன்மையுடையதாக பதிந்துள்ளது.

நன்கொடை

நன்கொடை

நவீன கலை அருங்காட்சியகம் (MOMA) முற்றிலும் ராக்ஃபெல்லர் குடும்பத்தினரின் நன்கொடைகளின் விளைவாக இன்றளவும் இருக்கின்றது. மேலும் புகழ் வாய்ந்த நியூயார்க் நகரின் நிலக்குறியீடு "30, ராக் .பெல்லர் பிளாசா" என்ற முகவரியினால் பெயரிடப்பட்டு பொதுவாக "30 ராக்" என்று அறியப்படுகிறது.

ஆதிக்கமும், செல்வாக்கும்

ஆதிக்கமும், செல்வாக்கும்

காலம் மாறிவிட்டது என்பதில் சந்தேகமில்லை, ராக்ஃபெல்லர்கள் முந்தைய நூற்றாண்டினைப் போல மக்கள் மனதில் ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் இனிமேலும் பெற்றிருக்கவில்லை. ஆனால் இந்த குடும்பத்தின் ஆதிக்கம் இன்றளவும் அமெரிக்க அரசியலிலும், வர்த்தக சந்தையில் அதிகமாக உள்ளது.

மறைவு

மறைவு

அந்த வகையில் டேவிட்டின் இறப்பு (மார்ச் 20, 2017), மற்றுமொரு பணக்கார தொழிலதிபர் மற்றும் மக்கள் சேவகரின் இழப்பு என்பதற்கும் அதிகமாக ஏதோ ஒன்றை பிரதிபலிக்கிறது. மேலும் அவருடைய இழப்பு அமெரிக்க குடும்ப வணிக வரலாற்றில் ஒரு வித்தியாசமான காலகட்டத்தின் தொடர்பையும் இழந்ததாக்குகிறது.

இந்தியா அமெரிக்கா

இந்தியா அமெரிக்கா

இந்தியாவை போலவே அமெரிக்காவின் வர்த்தக சந்தையை ஆளுவதும் சில குடும்பங்கள் தான், சொல்லபோனால் இந்த குடும்பங்கள் டெக்னாலஜி துறையில் மட்டும் தான் குறைவு. ஆட்டோமொபைல், வங்கியியல், உற்பத்தி, சுரங்கம் என அனைத்து துறைகளிலும் இவர்களின் ராஜ்ஜியம் தான்.

குடும்ப வியாபாரம்

குடும்ப வியாபாரம்

குடும்ப 'அரசியல்' போல இது குடும்ப 'வியாபாரம்'..!

வீட்டுப் பட்ஜெட்

வீட்டுப் பட்ஜெட்

ஜிஎஸ்டி உங்க வீட்டுப் பட்ஜெட்-ஐ எப்படியெல்லாம் பாதிக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்..!

அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை

அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை

RERA: வீடு வாங்குபவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்

ஜெட் ஏர்வேஸ்

ஜெட் ஏர்வேஸ்

விமானத்தில் பிறந்த குழந்தைக்கு லைப் டைம் ப்ரீ ஆஃபர் கொடுத்த ஜெட் ஏர்வேஸ்..!

எஸ்ஐபி திட்டங்கள்

எஸ்ஐபி திட்டங்கள்

எஸ்பிஐ-ல் முதலீடு செய்ய ஏற்ற எஸ்ஐபி திட்டங்கள்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

American Business Giant: David Rockefeller

American Business Giant: David Rockefeller
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X