பீட்ஸ் நிறுவனத்தின் தடையத்தை முற்றிலும் அழித்து விட்டது ஆப்பிள்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கலிபோர்னியா: இசை உலகை கலக்கிய ஹெட்போன் நிறுவனமான பீட்ஸ்-யை, மொபைல் மற்றும் கணிப்பொறி தயாரிப்பு மற்றும் உற்பத்தி நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் 3 பில்லியன் டாலருக்கு கைபற்றியது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் ஆப்பிள் நிறுவன பெயரில் இன்னும் வெளிவரவில்லை.

 

அடுத்த 2 மாதங்களில் பீட்ஸ் இசை சேவை ஆப்பிள் நிறுவனத்தின் போன்களிலும், ஐ -பேட் களிலும் துவங்கப்படவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆப்பிள் பொருட்களை வாங்குவதற்காக இனி மக்களுக்கு மேலும் ஒரு முக்கிய காரணம் கிடைத்துள்ளது.

கம்போ ஆஃபர்

கம்போ ஆஃபர்

ஆப்பிள் நிறுவனம் 2015ஆம் ஆண்டு துவக்கத்தில் தங்களுடைய ஐஒஎஸ் இயங்குதளத்துடன் பீட்ஸின் இசை சேவைக்கான சந்தாவை சேர்த்து வழங்கப்போவதாக பீட்ஸ் நிறுவனம் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளது.

பீட்ஸ் டூ ஐ-டியுன்ஸ்

பீட்ஸ் டூ ஐ-டியுன்ஸ்

இதில் மற்றுமொரு பெரிய எதிர்பார்ப்பு என்னவென்றால், வரும் 2015 மார்ச் மாதத்தில் இந்த சேவை துவங்கப்பட்ட பிறகு, பீட்ஸ் பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஐ-டியுன்ஸ் என அழைக்கப்படும் என்பது தான்.

லோகோவில் மாற்றம்

லோகோவில் மாற்றம்

மேலும் பீட்ஸ் நிறுவனத்தின் லோகோவிற்கு பதிலாக ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்தியேக லோகோவையே பதிக்க திட்டமிட்டு வருகின்றது ஆப்பிள் நிர்வாகம். இதன் ஆனால் பீட்ஸ் நிறுவனத்தின் நிழலின் தடையம் கூட இல்லாம் முற்றிலும் மாற்றி அமைக்கிறது ஆப்பிள்.

சுமை தாங்கியாக பீட்ஸ்
 

சுமை தாங்கியாக பீட்ஸ்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-டியூன் சேவைகளில் டவுன்லோட் செய்யப்படும் அளவு, கடந்த ஆண்டில் 14 சதவிகிதம் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நடவடிக்கையின் மூலம் உலகில் முழுவதும் இந்த சேவைக்கான விற்பனையை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கண்டுபிடிப்புகள்

புதிய கண்டுபிடிப்புகள்

பீட்ஸ் சேவையை இணைத்து வழங்கும் ஆப்பிளின் இந்த திட்டம் வெறும் பெயர் மாற்றத்துடன் முடிந்து விடாமல் பல புதிய சேவைகளை குறிப்பாக ஆப்பிள் தயாரிப்புகளுக்கு கண்டுபிடிக்கும் வேலைகளிலும் பீட்ஸ் நிறுவனம் இறங்கியுள்ளதாக அதன் தலைமை புதிய கண்டுபிடிப்புகளுக்கான அதிகாரி ட்ரென்ட் ரேஸ்னர் தெரிவித்தார்.

விற்பனை அதிகரிப்பு

விற்பனை அதிகரிப்பு

ஆப்பிள் நிறுவனம் டவுன்லோட் மூலமான தனது விற்பனையை இந்த புதிய பீட்ஸ் அம்சங்கள் உதவியோடு அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

போட்டி

போட்டி

ஆப்பிளின் ஐஒஎஸ்-இல் பீட்ஸ் இடம் பெற்றிருப்பது ஏற்கனவே உள்ள இசை சேவைகளான ஸ்போடிபை, பண்டோரா மற்றும் சவுண்ட்கிளவுட் ஆகியவற்றிற்கு பெரும் போட்டியாக அமையும். எனினும் இது ஒரு மியுசிக் ஆப் ஆக ஏற்கனவே உள்ள ஐ-ஒஎஸ் இயங்குதளத்தில் அமைக்கப்படுவதால் இதற்கான விளம்பரங்கள் மற்றும் அறிமுகப்படுத்துதல் வேலை சற்று குறைவாகவே இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Apple Is All Set To Launch Beats Globally By 2015

Beats is set to hit Apple soon. The news gives better reasons for users to buy Apple iPads and iPhones.Beats on Apple Financial Times has reported that Apple will bundle the subscription music service it bought from Beats into its iOS operating system early in 2015.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X