"என்னுடைய மொத்த சொத்தும் மக்களுக்கு தான்" - டிம் குக்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கலிபோர்னியா: ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனரான டிம் குக் தனது மொத்த சொத்துக்களையும் மக்களுக்கு பயன்படும் வகையில் தொண்டு நிறுவனங்களுக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

 

உலகளவில் அதிக சந்தை மதிப்புடைய நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் தான் டிம் குக். ஆப்பிள் நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸ் மறைவிற்கு பிறகு இந்நிறுவனத்தின் அனைத்து பொறுப்புகளும் டிக் குக் கைக்கு மாறின.

785 மில்லியன் டாலர்

785 மில்லியன் டாலர்

தனது 785 மில்லியன் டாலர் சொத்து மதிப்பில் 10 வயது மருமகனின் (சகோதரரின் மகன்) கல்வி செலவுகள் போக மீதமுள்ள அனைத்தையும் மக்களுக்குப் பயன்படும் வகையில் தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்க தான் தயாராக உள்ளதாக பார்ச்சூன் பத்திரிக்கைக்கு அளித்த போட்டியில் தெரிவித்தார்.

மாற்றம்

மாற்றம்

குளத்தில் விழும் கூழாங்கல் தனது அதிர்வை குளம் முழுவதிலும் பரவச் செய்யும், அதுப்போல மக்களின் மத்தியில் மாற்றத்தை உருவாக்கும் கூழாங்கல் ஆக இருப்பேன் என டிம் குக் தெரிவித்தார்.

சொத்து மதிப்பு

சொத்து மதிப்பு

ஆப்பிள் நிறுவனத்தின் 120 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளையும், விற்க முடியாத 665 மில்லியன் டாலர் பங்குகளையும் வைத்துள்ளார் டிம் குக். இதன் மொத்த மதிப்பு 785 மில்லியன் டாலர்.

வாரன் பஃபெட்
 

வாரன் பஃபெட்

உலகளவில் 2வது பணக்காரரான வாரன் பஃபெட் அவரின் "Giving Pledge" என்ற உறுதி மொழியை ஏற்று பல பணக்காரர்கள் தங்களின் பெரும் பகுதி பணத்தை மக்களுக்கு அளித்துள்ளனர். இவர்களை தொடர்ந்து தற்போது டிம் குக் இந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

கொடை வள்ளல்கள்

கொடை வள்ளல்கள்

வருடம் முழுவதும் உழைத்து சம்பாதித்த பணத்தை மக்களுக்கும் அளிக்கும் எண்ணம் வெகு சிலருக்கே வரும். இதில் "Giving Pledge" மையக்கருத்தை உணர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், வாரன் பஃபெட் மற்றும் ஆரக்கிள் கார்ப் நிறுவனத்தின் லேரி எலிசன் ஆகியோர் இப்பட்டியலில் இணைந்துள்ளனர்.

இவர்களை பற்றி இந்த இணைய பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Apple's Tim Cook plans to give away all his money to charity

Fortune magazine cited the head of the world's largest technology corporation as saying he planned to donate his estimated $785 million fortune to charity - after paying for his 10-year-old nephew's college education.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X