'பில்கேட்ஸ்' உடன் போட்டி.. டெக் பில்லியனர்ஸ் 2016 பட்டியலில் அசிம் பிரேம்ஜி, ஷிவ் நாடார்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2016ஆம் ஆண்டுக்கான உலகளவில் தொழில்நுட்பத் துறையில் கலக்கும் பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.

 

100 பேர் அடங்கிய இப்பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு பேர் இதில் இடம்பெற்றுள்ளனர். யார் அவர்கள்..?

ஃபோர்ப்ஸ்

ஃபோர்ப்ஸ்

இந்தப் பட்டியலில் பில்கேட்ஸ், கூகுள் நிறுவனர் எரிக் ஷ்மிட், உபர் டாக்ஸி தலைமை செயலாளர் டிராவிஸ் காலனிக் ஆகியோருடன் இந்தியாவில் இருந்து அசிம் பிரேம்ஜி மற்றும் ஷிவ் நாடாரும் டாப் 20-இல் இடம்பெற்றுள்ளனர்.

பில்கேட்ஸ்

பில்கேட்ஸ்

உலகளவில் வழக்கம் போல மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 7,800 கோடி டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

அசிம் ப்ரேம்ஜி

அசிம் ப்ரேம்ஜி

இந்தியாவைச் சேர்ந்த வீப்ரோ நிறுவன தலைவர் அசிம் ப்ரேம்ஜி 1,600 கோடி டாலர் அதாவது ரூ.1.05 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 13-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

மேலும் ஃபோர்ப்ஸ் பத்திரைக்கை இவரைப்பற்றி குறிப்பிடுகையில் இந்தியாவின் மூன்றாம் மிகப்பெரிய அவுட்சோர்ஸர் என்றும் கூறியுள்ளது.

 

ஷிவ் நாடார்
 

ஷிவ் நாடார்

எச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார் 1,160 கோடி டாலர் சொத்து மதிப்புடன் 17-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

அன்மையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்தல் மற்றும் அமெரிக்க சுகாதார தொழில்நுட்ப நிறுவனங்கள் வளர்ச்சிக்கு 500 மில்லியன் டாலர் ஒதுக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்திய வம்சாவளியினர்

இந்திய வம்சாவளியினர்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிம்ஃபோனி டெக்னாலஜியின் தலைமைச் செயலாளர் ரமேஷ் வாத்வாணி 300 கோடி டாலர் சொத்து மதிப்புடன் 67-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

சீனா

சீனா

அமெரிக்காவை அடுத்து சீனாவில் இருந்து 19 நபர்கள் இந்த 100 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

சீனாவில் இருந்து அலிபாபா நிறுவனர் காக் மா 25.8 பில்லியன் டாலர்களுடன் 8-வது இடத்தில் இந்த பாட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

 

அமேசான் நிறுவனர்

அமேசான் நிறுவனர்

அமேசான் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெசோஸ் 66.2 மில்லியன் டாலர்களுடன் உலகின் இரண்டாம் மிகப்பெரிய பணக்காரராக பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

மார்க் ஜுக்கர்பெர்க்

மார்க் ஜுக்கர்பெர்க்

ஃபேஸ்புக் நிறுவினர் மார்க் ஜூக்கர்பெர்க் நான்காம் இடத்தில் இருந்து 30 சதவீதம் முன்னேறி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

சராசரி வயது 53

சராசரி வயது 53

இந்த 100 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெற்றவர்களின் சராசரி வயது 53 எனவும் 2016 ஃபோர்ப்ஸ் தொழில்நுட்ப பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகளவில் ஐந்து பெண்கள்

உலகளவில் ஐந்து பெண்கள்

உலகளவில் தொழில்நுட்பத் துறை பணக்காரர்கள் பட்டியலில் ஐந்து பெண்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.

அமெரிக்காவின் எச்பி நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மெக் விட்மேன் 93-வது இடத்திலும், எபிக் சிஸ்டம்ஸ் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜூடி பாக்னர் 79-வது இடத்திலும் , லென்ஸ் தொழில்நுட்பம் ஐபிஓ ஷொவ் கின்ஃபி 33-வது இடத்திலும் உள்ளனர்.

 

ஜிஎஸ்டி மசோதாவால் எந்தெந்த பொருட்கள் விலை உயரும்..? எந்தெந்த பொருட்கள் விலை குறையும்..?

ஜிஎஸ்டி மசோதாவால் எந்தெந்த பொருட்கள் விலை உயரும்..? எந்தெந்த பொருட்கள் விலை குறையும்..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Azim Premji and Shiv Nadar in Forbes List Of 100 Richest Tech Tycoons

Azim Premji and Shiv Nadar from India are In Forbes List Of 100 Richest Tech Tycoons
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X