நீங்கள் இந்த ஜும் காலில் இருந்தால் மிக துரதிஷ்டவசமானவர். ஏனெனில் நிறுவனத்தில் நடைபெறும் பணி நீக்க நடவடிக்கையில் நீங்களும் ஒருவர் என கூறி, ஒரே ஜும் காலில் 900 பேரை பணி நீக்கம் செய்தவர் தான் பெட்டர்.காம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விஷால் கார்க்.
இது குறித்து அந்த சமயத்தில் வெளியான வீடியோ பதிவு பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் விஷால் கார்க்கினை திட்டி தீர்த்தனர்.
அநாகரிகமான பணி நீக்கத்திற்காக பெயர் பெற்றவர் தான் விஷால் கார்க். ஏனெனில் முன்னதாக இவர் ஊழியர்களுக்கு அனுப்பிய ஒரு மெயில் ஒரு போர்ப்ஸ் பத்திரிக்கைக்கு கிடைத்து, அதுவும் பெரும் சர்ச்சையானது.
இனியும் வீட்டில் இருந்தே பணி.. ஐடி நிறுவனங்களின் செம அறிவிப்பு.. கொண்டாட்டத்தில் ஊழியர்கள்..!

ஒரே காலில் 900 பேர் பணி நீக்கம்
இந்திய வம்சாவளியை சேர்ந்த பெட்டர்.காம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான விஷால் கார்க், சந்தையின் செயல் திறன், ஊழியர்களின் செயல் திறன், உற்பத்தி திறன் உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு கடந்த டிசம்பர் மாதம், ஒரே ஜும் காலில் 900 பேரை பணி நீக்கம் செய்தார்.

துரதிர்ஷ்டவசமானவர்
3 நிமிட ஜும் காலில் நீங்கள் இதனை கேட்க விரும்ப மாட்டீர்கள். இந்த ஜும் காலில் இருந்தால், நீங்கள் அதிர்ஷ்டம் இல்லாதவர். நீங்கள் தற்போதிலிருந்து பணி நீக்கம் செய்யப்படுகின்றீர்கள். உடனடியாக இப்போதிலிருந்தே பணி நீக்கம் செய்யப்படுகின்றீர்கள் என விஷால் கார்க் கூறினார். இது அந்த நிறுவனத்தின் மொத்த ஊழியர் தொகுப்பில் 9% பேர் ஆகும்.

பணி நீக்கத்துக்கு விருப்பமில்லை
இந்த அறிவிப்பினை கொடுத்த விஷால், இது என் கேரியரில் செய்யும் இரண்டாவது பணி நீக்கமாகும். இதனை நான் செய்ய விரும்பவில்லை. இனி இதுபோன்று செய்யக் கூடாது. இது தான் கடைசி முறை. கடந்த முறை இதுபோன்று செய்யும்போது நான் அழுதேன். ஆனால் இந்த முறை நான் வலிமையாக உள்ளேன்.

மோசமான மெயில்
இதே முன்னதாக ஒரு மெயிலில் நீங்கள் படு மந்தமாக இருக்கிறீர்கள். மந்தமான டால்பின்கள் எனக்கு வேண்டாம். நீங்கள் என்னை தர்மசங்கடத்திற்கு ஆளாக்குகிறீர்கள். உங்களது பணியினை இத்தோடு முடித்துக் கொள்ளுங்கள் என்றும் கூறியிருந்தார். இது ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

மன்னித்து விடுங்கள்
விஷால் கார்க்கின் இந்த பணி நீக்க நடவடிக்கை குறித்து சமூக வலைதளத்தில் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது. இந்த நிலையில் தான் பணி நீக்கம் குறித்து கையாண்ட விதத்திற்காக மன்னிப்பும் கேட்டார் விஷால். மேலும் இது குறித்தான கடித்தத்தில் பணி நீக்கம் செய்ததில் நான் தவறு செய்து விட்டேன். பாதிக்கப்பட்ட ஊழியர்களின் பங்களிப்பிற்காக தகுந்த மரியாதை அளிக்க தவறி விட்டேன். ஊழியர்களுக்கு பாரட்டுகளை தெரிவிக்க தவறிவிட்டேன். அவ்வாறு செய்ததன் காரணமாக நான் உங்களை கஷ்டப்படுத்தி விட்டேன். இதன் மூலம் நான் உங்களை மேலும் காயப்படுத்தி விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என உருக்கமாக கடித்தத்தினை எழுதியிருந்தார்.

CEO ஆக இருக்க முடியுமா?
இதற்கிடையில் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, பெட்டர்.காமின் தலைமை செயல் அதிகாரியின் பணி நீக்கம் குறித்தான "தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை" செய்தியினை சுட்டி காட்டி, இதன் பிறகும் இவர் CEO ஆக இருக்க முடியுமா? இவருக்கு இரண்டாவது வாய்ப்பினை அனுமதிப்பது நியாயமா? இதனை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என ட்விட்டரில் சுட்டிக் காட்டியிருந்தது நினைவுகூறத்தக்கது.

பரபரப்புக்கு பிறகு ஓய்வு
இவ்வாறு மன்னிப்பு வருத்தம் தெரிவித்த பிறகு, விஷால் உடனடியாக ஓய்வில் சென்று விட்டார். இந்த நிலையில் தான் தற்போது மீண்டும் பணிக்கு திரும்பலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது. விஷால் தனது தலைமை நிர்வாக அதிகாரியாக முழு நேர பணியை மீண்டும் தொடங்குவார். விஷால் மீது நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்றும் நிறுவனம் தரப்பில் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

ஊழியர்கள் விரும்பவில்லை.
ஆனால் கார்க்கின் வருகையை ஊழியர்கள் யாரும் விரும்பவில்லை. விஷால் கார்க் திரும்ப வந்தால், பல ஊழியர்கள் அலுவலகத்தினை விட்டு வெளியேறவும் தயாராக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.