ஜோ பைடன் நிர்வாகத்தில் புதிதாக 2 இந்தியர்கள் நியமனம்.. யார் தெரியுமா...?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற நாளில் இருந்து அதிகப்படியான இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களைத் தனது ஆட்சி நிர்வாகக் குழுவில் நியமித்து வருகிறார். இதன் வாயிலாக இந்தியா அமெரிக்கா மத்தியிலான நட்புறவு மற்றும் வர்த்தக உறவு ஆகியவை பெரிய அளவில் மேம்பட்டது.

 

ஆனால் ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின்பு, ரஷ்யா - இந்தியா மத்தியிலான வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் அமெரிக்க அரசு சார்பில் பல எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புத் துணை ஆலோசகரும் இந்திய அமெரிக்கருமான தலீப் சிங் சமீபத்தில் விடுத்த அறிவிப்புகள் பெரும் பேசு பொருளாக மாறியது.

இந்நிலையில் ஜோ பைடன் நிர்வாகக் குழுவில் புதிதாக இரண்டு இந்தியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவுக்கு அமெரிக்கா வைத்த அடுத்த செக்.. இன்னும் பல காத்திருக்கு.. ஜோ பைடன் எச்சரிக்கை!

அமெரிக்க இந்தியர்கள்

அமெரிக்க இந்தியர்கள்

அமெரிக்காவின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் தலைமை நிதி அதிகாரியாக வினய் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அமெரிக்காவின் சம வேலை வாய்ப்பு ஆணையத்தில் ஆணையராகக் கல்பனா கொட்டகல் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்விருவர்களும் அமெரிக்க இந்தியர்களாவர்.

வினய் சிங்

வினய் சிங்

சர்டிபைட் பப்ளிக் அக்கவுண்டென்ட் ஆக இருக்கும் வினய் சிங் தற்போது அமெரிக்கச் சிறு வணிக நிர்வாகத்தின் (SBA) நிர்வாகியின் மூத்த ஆலோசகராக உள்ளார். அமெரிக்காவின் சிறு வணிகங்களுக்குச் சிறந்த சேவை வழங்கும் இக்குழுவுக்கு உதவுகிறார்.

25 வருட அனுபவம்
 

25 வருட அனுபவம்

வினய் சிங் நிதி, பகுப்பாய்வு மற்றும் மூலோபாயம் பிரிவுகளில் சுமார் 25 வருட தனியார் துறையில் அனுபவத்தைக் கொண்டுள்ளார். வினய் சிங் ஒபாமா-பிடன் நிர்வாகத்தில் துணை உதவி செயலாளராக (அமெரிக்கப் புலம்) பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்பனா கொட்டகல்

கல்பனா கொட்டகல்

கோஹன் மில்ஸ்டீனின் பங்குதாரராகக் கல்பனா கொட்டகல் தற்போது அமெரிக்காவின் சம வேலை வாய்ப்பு ஆணையத்தில் ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார். சிவில் உரிமைகள் மற்றும் வேலைவாய்ப்புப் பயிற்சிக் குழுவின் உறுப்பினராகவும், நிறுவனத்தின் பணியமர்த்தல் மற்றும் பன்முகத்தன்மைக் குழுவின் இணைத் தலைவராகவும் உள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Biden administration appointed 2 Indian Americans on important key positions

US President Joe Biden administration appointed two Indian Americans Kalpana Kotagal and Vinay Singh on important key positions. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தில் புதிதாக 2 இந்தியர்கள் வினய் சிங் மற்றும் கல்பனா கொட்டகல் ஆகியோர் முக்கியமான பதவிகளில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X