அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ஜோ பிடன் முதல் நாளிலேயே பல்வேறு குடியேற்றம் உரிமை கட்டுப்பாடுகளை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார். முன்னாள் அமெரிக்க அரசு அறிவித்த சில முக்கியக் கட்டுப்பாடுகளை ஜோ பிடன் முதல் நாளிலேயே ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார்.

பயணக் கட்டுப்பாடுகள்
அமெரிக்காவிற்குப் பயணம் செய்ய முஸ்லீம், ஆப்பிரிக்கா நாடுகள் மீது விதிக்கப்பட்ட தடைகளையும், எல்லை சுவர் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியையும் உடனடியாக ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார் என விஓஏ தெரிவித்துள்ளது.

குழந்தைகள் பாதுகாப்பு
இதுமட்டும் அல்லாமல் அமெரிக்காவிற்கு முறையற்ற வகையில் வெளிநாட்டில் இருந்து வந்த குழந்தைகளுக்கு அதிகப்படியான பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் டிரம்ப் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பெருமளவிலான குடியேற்றக் கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

விசா கட்டுப்பாடுகள்
இதைத் தொடர்ந்து டிரம்ப் அரசு அறிவித்துள்ள விசா கட்டுப்பாடுகள் குறித்து அடுத்த சில நாட்களுக்குள் இறுதி முடிவுகளை எடுக்க உள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே ஹெச்1பி விசா வழங்கும் புதிய முறைக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் டிரம்ப் அரசின் முடிவிற்குச் சாதகமாக அறிவிப்பு வந்துள்ள நிலையில், ஜோ பிடன் அரசு இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறது
அப்படி டிரம்ப் அரசு வழங்குவதில் என்ன கட்டுப்பாடுகளை விதித்தார்..?

85,000 ஹொச்1பி விசா
அமெரிக்க அரசு ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் 85,000 ஹொச்1பி விசாவை, இதுநாள் வரையில் கடைப்பிடித்து வரும் லாட்டரி முறையில் தேர்வு செய்யப்படாமல் ஊதியத்தின் அடிப்படையில் வழங்க முடிவு
செய்துள்ளது. இந்த டிரம்ப் ஆட்சியில் விதிக்கப்பட்டு மிகவும் கடுமையான விசா கட்டுப்பாட்டுக் கொள்கை என அனைவராலும் கூறப்பட்டவை, இந்நிலையில், இதற்கான இறுதி விதிமுறைகள் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

டிரம்ப் அரசு
டிரம்ப் அரசு அமெரிக்காவில் உருவாகும் வேலைவாய்ப்புகள் அதிகளவில் வெளிநாட்டவர்களுக்குச் செல்லும் காரணத்தால் திறமையானவர்களுக்கு மட்டுமே விசா அளிக்கப்பட வேண்டும் என முக்கியமான முடிவின் கீழ் புதிய விசா வழங்கும் கொள்கையின் கீழ் ஒருவரின் கல்வி மற்றும் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் விசா வழங்க முடிவு செய்தது.

விசா விண்ணப்பங்கள்
இந்தக் கொள்கையின் படி விசா விண்ணப்பங்களைச் சம்பளத்தை முதன்மையாக வைத்துக் கல்வி மற்றும் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் லெவல் 1 (entry level), லெவல் 2 (qualified), லெவல் 3 (experienced), லெவல் 4 (fully competent) என
நான்கு பிரிவுகளின் கீழ் விசா விண்ணப்பங்களைப் பிரிக்குப்படும். இந்தப் பிரிவின் கீழ் இருக்கும் விசா விண்ணப்பங்களை அமெரிக்காவின் ஊழியர்கள் தரவுகளின் சம்பளத்தை முதன்மையாகக் கொண்டு விசா வழங்குவர்.

இந்திய ஐடி ஊழியர்கள்
பொதுவாகப் பிற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் சம்பள அளவுகள் மிகவும் குறைவாக இருக்கும் காரணத்தாலும், திறமை அதிகமாக இருக்கும் காரணத்தினாலும் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து அதிக ஊழியர்களைப் பணியில் சேர்த்து வந்தது. இப்புதிய கொள்கையால் அதிகச் சம்பளம் கொண்ட ஊழியர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்படும் காரணத்தால் இந்தியர்கள் வெளிநாட்டுக்குச் செய்யும் வாய்ப்பு பெரிய அளவில் பாதிக்கும்.
குறிப்பாக ஐடி துறையில் இருக்கும் துவக்க நிலை ஊழியர்களுக்குக் கிடைக்கும் வெளிநாட்டு வாய்ப்புகள் பெரிய அளவில் பாதிக்கப்படும்.

80 சதவீத விசா
மேலும் இந்தப் புதிய விசா கொள்கையின் மூலம் 80 சதவீத விசா லெவல் 1 மற்றும் லெவல் 2 கீழ் இருப்பவர்களுக்கு மட்டுமே செல்லும் என நிலை உருவாகியுள்ளது. அவை அனைத்தையும் தாண்டி வெளிநாட்டுக்குச் சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் அனைவரும் லெவல் 1 அதாவது என்டரி பிரிவில் விண்ணப்பிக்க வேண்டும் என்பதால் பெரிய அளவிலான வாய்ப்புகளை இழக்க நேரிடும்.