பில் கேட்ஸ் இதை மட்டும் செய்யாமல் இருந்திருந்தால்..!! நிலைமையே வேற..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் கடந்த 2 வருடத்தில் அதிகப்படியான மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க் மற்றும் அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெசோஸ் மத்தியிலான போட்டி தற்போது புதிய உச்சத்தை அடைந்துள்ளது. எலான் மஸ்க் யாரும் அடைய முடியாத உயரத்தை எட்டியுள்ளார்.

 

ஆனால் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பல ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த பில் கேட்ஸ் இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்யாமல் இருந்திருந்தால், இன்று எலான் மஸ்க் மற்றும் ஜெப் பெசோஸ் ஆகிய இருவரின் மொத்த சொத்து மதிப்பை விடவும் அதிகமாக வைத்திருப்பார்.

#Demonetisation-க்கு பின் மக்களுக்கு அதிக பாதிப்பு..!

 பெரும் பணக்காரர்கள்

பெரும் பணக்காரர்கள்

பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு பெரிய அளவில் உயர மிக முக்கியமான காரணம் ஒன்று அவர்கள் துவங்கிய அல்லது முதலீடு செய்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயரும் போது சொத்து மதிப்பும் உயரும். இப்படித் தான் பில் கேட்ஸ் முதல் வாரன் பபெட் வரை அனைவருக்கும்.

 மைக்ரோசாப்ட் நிறுவனம்

மைக்ரோசாப்ட் நிறுவனம்

டெக்னாலஜி-யின் வளர்ச்சி மற்றும் தேவை அதிகரித்த காரணமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆதிக்கம் அதிகரித்து இந்நிறுவனப் பங்குகளை வைத்துள்ளவர்கள் மற்றும் முதலீடு செய்துள்ளவர்களின் சொத்து மதிப்பு அதிகரித்தது. அந்த வகையில் பில் கேட்ஸ் 1998 ஆம் ஆண்டுச் செப்டம்பர் மாதம் வைத்திருந்த மைக்ரோசாப்ட் பங்குகளை இப்போதும் வைத்திருந்தால், இன்று நிலைமையே வேறு.

 மைக்ரோசாப்ட் - பில் கேட்ஸ்
 

மைக்ரோசாப்ட் - பில் கேட்ஸ்

சமீபத்தில் உலகிலேயே அதிக மதிப்புடைய நிறுவனங்கள் பட்டியலில் நீண்ட காலமாக இருந்த ஆப்பிள் நிறுவனத்தை ஓரம்கட்டி மைக்ரோசாப்ட் முதல் இடத்தைப் பிடித்து இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 2.53 டிரில்லியன் டாலர் அளவில் உயர்ந்தது. இதேபோல் மைக்ரோசாப்ட் பங்கு மதிப்பும் 338.79 டாலர் என்ற வரலாற்று உச்சத்தையும் தொட்டது.

 பில் கேட்ஸ் சொத்து மதிப்பு

பில் கேட்ஸ் சொத்து மதிப்பு

இந்த நிலையில் பில் கேட்ஸ் 1998 ஆம் ஆண்டுச் செப்டம்பர் மாதம் மைக்ரோசாப்ட்-ன் 2.06 பில்லியன் பங்குகளை வைத்திருந்தார், இந்தப் பங்குகளை இப்போதும் அவர் வைத்திருந்தால் பில் கேட்ஸ்-ன் மொத்த சொத்து மதிப்பு 693 பில்லியன் டாலர்.

 எலான் மஸ்க் - ஜெப் பைசோஸ்

எலான் மஸ்க் - ஜெப் பைசோஸ்

இது எலான் மஸ்க்-ன் 340 பில்லியன் டாலர் மற்றும் ஜெப் பைசோஸ்-ன் 200.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை விடவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பில் கேட்ஸ் தன்னிடம் இருந்த பங்குகளை விற்பனை செய்த காரணத்தால் தான் மைக்ரோசாப்ட் அந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்து 138 பில்லியன் டாலர் அளவீட்டில் உள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bill Gates had chance to be Richer Than Elon Musk, Jeff Bezos Combined wealth

Bill Gates had chance to be Richer Than Elon Musk, Jeff Bezos Combined wealth
Story first published: Tuesday, November 9, 2021, 13:21 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X