வரலாற்றில் முதன் முறையாக அமெரிக்காவை முந்தியது ஆசியா!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகளவில் அதிகப்படியான கோடீஸ்வரர்கள் ஆசிய கண்டத்தில் தான் உள்ளார்கள். உலகக் கோடீஸ்வரர்களில் சொத்து மதிப்பு 2016ம் ஆண்டு 17 சதவீதம் உயர்ந்து 6 டிரில்லியன் டாலர்களாக உள்ளது.

 

இந்தப் பட்டியலில் சீனாவில் இருந்து அதிகப்படியான கோடீஸ்வரர்கள் உள்ளார்கள் என்றும் அதற்கு அடுத்தபடியாக அமெரிக்கா உள்ளதாகவும் யூபிஎஸ் குழுமத்தின் ஆய்வு அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

சீனா மற்றும் இந்தியா

சீனா மற்றும் இந்தியா

கடந்த மூன்று காலாண்டில் சீனா மற்றும் ஆசியாவில் இருந்து புதிதாக 117 பில்லியனர்கள் உருவாகியுள்ளனர். தற்போது ஆசியாவில் இருந்து மொத்தமாக 637 பில்லியனர்கள் உள்ளனர், அதிலும் பரம்பரை பணக்காரர்களாக உள்ளவர்கள் அதிகம்.

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்காவைப் பொருத்தவரை 25 புதிய பில்லியனர்கள் அதிகரித்து 563 ஆக உள்ளது. இது ஆசிய நாடுகளினை விடக் குறைவு ஆகும். போகிற போக்கை பார்த்தால் சீனா எளிதாக அமெரிக்காவைப் பின் தள்ளிவிடும். அமெரிக்கப் பில்லியனர்கள் வசம் மட்டும் 2.8 டிரில்லியன் டாலர் மதிப்பிலான சொத்து மதிப்பு உள்ளது.

சீனா

சீனா

சீனாவில் இருந்து ஒவ்வொரு மூன்று வாரத்திற்கு ஒரு புதிய பில்லியனர் உருவாகி வருகின்றார் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா
 

இந்தியா

இந்தியாவினை பொறுத்தவரையில் இந்தப் பட்டியலில் புதிதாக 16 பில்லியனர்கள் இணைந்து 100-ஐ எட்டியுள்ளது. அடுத்த 4 வருடத்தில் ஆசியா கண்டம் அமெரிக்காவைச் சொத்து மதிப்பில் மிஞ்சி விடும் என்றும் கூறப்படுகின்றது.

ஆசிய நாடுகள்

ஆசிய நாடுகள்

ஆசிய அளவில் ஒப்பிடும் போது மூன்று நாட்களுக்கு ஒரு புதிய பில்லியனர் உருவாகிவருகின்றனர். முதல் தலைமுறை பில்லியனர்களுக்குத் தங்களது வர்த்தகத்தின் மூலதனத்தினை அதிகரித்துச் சந்தையினை விரிவுபடுத்தா பல வழிகளில் நிதிகளைத் திரட்டுகின்றனர்.

ஐரோப்பிய நாடுகள்

ஐரோப்பிய நாடுகள்

ஐரோப்பிய நாடுகளைப் பொருத்த வரையில் பில்லியனர்கள் பட்டியலில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் பிளாட்டாக உள்ளது. இங்கு மொத்தமாக 342 பில்லியனர்கள் உள்ளனர்.

சொத்து மதிப்பு அதிகரிப்பு

சொத்து மதிப்பு அதிகரிப்பு

உலகின் டாப் 500 பில்லியனர்கள் இந்த ஆண்டில் இதுவரை 824 பில்லியன் டாலர் சொத்து மதிப்பினை அதிகரித்துள்ளனர். இது 19 சதவீத உயர்வு ஆகும். இவர்களது மொத்த சொத்து மதிப்பு அக்டோபர் 25 வரை 5.2 டிரில்லியன் டாலர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சராசரி வயது

சராசரி வயது

இளம் வயது இளைஞர்கள் அதிகமாக வந்துகொண்டு இருந்தாலும் சராசரி பில்லியனர்களின் வயது 63 ஆக உள்ளது. இதுவே 1995-ம் ஆண்டு 60 ஆக இருந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Billionaire list: Asia overtook the US for the first time in history!

Billionaire list: Asia overtook the US for the first time in history!
Story first published: Friday, October 27, 2017, 14:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X