கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தக போருக்கு மத்தியில் கடினமான நிலை இருந்து வருகின்றது. இந்நிலையில் கொரோனாவிற்கு பின்பு இது இன்னும் மோசமாகியுள்ளது.
கொரோனா காலகட்டத்தினை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதாக பல நாடுகளும் சீனாவின் மீது குற்றம் சாட்டின.
குறிப்பாக கொரோனாவினால் மோசமான பின்னடவை சந்தித்துள்ள நிறுவனங்களை, தங்களது சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சீனாவின் முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அமெரிக்காவை மிஞ்சிய சீனா
இதனையடுத்து இந்தியா உள்பட பல நாடுகளும் தங்களின் அன்னிய நேரடி முதலீட்டு விதிகளை மாற்றின. இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ள அறிக்கையின் படி, அன்னிய நேரடி முதலீட்டில் அமெரிக்காவினை சீன மிஞ்சி விட்டதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் கடந்த ஆண்டில் சர்வதேச அளவிலான வணிகத்தில், அமெரிக்காவின் புதிய முதலீடுகள் கடந்த ஆண்டில் 49% வீழ்ச்சியடைந்துள்ளது.

அன்னிய முதலீடு அதிகரிப்பு
இது குறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டின் பரவிய புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக, பொருளாதாரம் வீழ்ச்சியினை சந்தித்தது. சீனா அன்னிய நேரடி முதலீட்டில் நீண்டகாலமாக இரண்டாவது இடத்தில் இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டில் 4% அதிகரித்துள்ளது.

கொரோனாவினால் பாதிப்பு
இது ஆரம்பத்தில் கொரோனாவின் காரணமாக பெய்ஜிங் தான் முதன் முதலாக லாக்டவுனை அமல்படுத்தியது. எனினும் இதன் பிறகு பாதிக்கப்பட்ட நாடுகளான அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் சீனாவினை விட மோசமாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த ஆண்டில் முக்கிய பொருளாதாரங்கள் சரிவினைக் கண்டன. இதனால் முதலீட்டில் சீனா அமெரிக்காவினையும் மிஞ்சியது.

அதிக முதலீட்டினையும் பெற்ற சீனா
அதோடு சீனா கடந்த ஆண்டில் அதிகப்படியான முதலீட்டினையும் பெற்றது. குறிப்பாக அமெரிக்கா பங்கு சந்தைகளில் வலுவான வரத்தினையும் பெற்றது. கடந்த 2016ம் ஆண்டில் அமெரிக்காவின் அன்னிய முதலீடு 472 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால் அந்த காலகட்டத்தில் சீனாவின் முதலீடு வெறும் 134 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால் அதன் பிறகு சீனா தொடர்ந்து முதலீடுகளை அதிகரித்து வருகின்றது.

டிரம்ப்பின் நடவடிக்கை
டிரம்ப் நிர்வாகம் அமெரிக்க நிறுவனங்களை சீனாவில் இருந்து வெளியேற கூறியது. அதோடு அமெரிக்காவில் அதன் செயல்பாடுகளை அதிகரிக்க கூறியது. அதோடு அமெரிக்காவில் சீன நிறுவனங்கள் செய்யும் முதலீடுகள் ஆய்வினை எதிர்கொள்ளும் என்ற நிலையே இருந்து வந்தது. இதனால் அமெரிக்க ஒப்பந்தம் செய்வதில், சீன நிறுவனங்களின் ஆர்வம் குறையும் என்ற நிலையே இருந்து வருகின்றது.