சீனா-வில் புதிய தடை உத்தரவு.. பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் கண்ணீர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீன அரசு டிஜிட்டல் சேவை மற்றும் டிஜிட்டல் நிறுவனங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடு விதித்து வருகிறது. கடந்த ஒரு வருடமாக டிஜிட்டல் மற்றும் இண்டர்நெட் சேவை நிறுவனங்களுக்குக் கடுமையான விதிமுறைகள் விதித்து வந்தது. இதைத் தொடர்ந்து சீனாவின் இளம் தலைமுறையினர் அதிகளவில் ஆன்லைன் கேமிங்-ல் இருக்கும் காரணத்தால் ஆன்லைன் கேம் விளையாடும் நேரத்தைக் கட்டுப்படுத்தியது.

 

இதைத் தொடர்ந்து சமுக வலைத்தளத்தில் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் போடும் பதிவுகளுக்குப் பெரும் தடையைச் சீன அரசு விதித்துள்ளது.

 சைபர்ஸ்பேஸ் நிர்வாக அமைப்பு

சைபர்ஸ்பேஸ் நிர்வாக அமைப்பு

சீனாவின் சைபர்ஸ்பேஸ் நிர்வாக அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் இனி தங்களது செல்வத்தைக் காட்டும் விதமாகவும், ஆடம்பர வசதிகள் மற்றும் அனுபவங்களைச் சமுக வலைத்தளத்தில் பதிவிடக்கூடாது உத்தரவிட்டு உள்ளது.

 நல்ல பழக்கவழக்கம்

நல்ல பழக்கவழக்கம்

பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் கணக்குகள் உட்பட அனைவரும் பொது ஒழுங்கு மற்றும் நல்ல பழக்கவழக்கங்கள் பின்பற்ற வேண்டும், சமூக நோக்கம் மற்றும் மதிப்பை சமூகத்தில் உருவாக்க வேண்டும் எனச் சீனாவின் சைபர்ஸ்பேஸ் நிர்வாக அமைப்பு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

 ஜி ஜின்பிங் அரசு
 

ஜி ஜின்பிங் அரசு

சீனாவில் மிகப்பெரியதாக வளர்ந்து வரும் பொழுதுபோக்கு துறையில் ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு

பிரபலங்களின் ஊழல்கள் மற்றும் ஆன்லைன் ரசிகர்கள் கூட்டத்தின் மத்தியில் சமுக ஒழுக்கத்தை உருவாக்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்நிலையில் இதைச் சார்ந்து இருக்கும் விளம்பர வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்பட உள்ளது.

 தடை உத்தரவு

தடை உத்தரவு

இதேபோலப் பிரபலங்கள் வதந்திகள், போலி மற்றும் பொய்யான விஷயங்களைப் பதிவிடுவது, அதேபோல் ரசிகர்களைத் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்திச் சண்டையிடும் வகையில் தூண்டுவது, முறையற்ற வகையில் முதலீட்டை ஈர்ப்பது போன்ற பணிகளைச் செய்யத் தடை விதித்தது.

 88 பேருக்குத் தடை

88 பேருக்குத் தடை

இந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில மணிநேரத்தில் China Association of Performing Arts அமைப்பு சுமார் 88 பிரபலங்கள் இனி லைவ் வீடியோ போடக்கூடாது என உத்தரவிட்டு உள்ளது. இதில் சமீபத்தில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு எதிர்கொண்ட சீன கனடா பாப் ஸ்டார் கிரிஸ் வூ-ம் ஒருவர்.

 Zhao Wei-க்குத் தடை

Zhao Wei-க்குத் தடை

2021 ஆகஸ்ட் மாதம் சீன பொழுதுபோக்கு கட்டுப்பாட்டு அமைப்பு Zhao Wei என்ற பிரபலமான நடிகையை அனைத்து சமுக வலைத்தளம் மற்றும் ஸ்ட்ரீமிங் தளத்தில் இருந்து எவ்விதமான காரணமும் அறிவிக்காமல் நீக்கியது.

 mukbang வீடியோ தடை

mukbang வீடியோ தடை

இதேபோல் இணையத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் mukbang அதாவது அதிகளவில் சமைத்துச் சாப்பிடும் வீடியோ-வுக்கு எதிராகவும் சீன அரசு கடந்த வருடம் நடவடிக்கை எடுத்தது. இந்த mukbang வீடியோ மூலம் அதிகளவிலான உணவுகள் வீண் ஆகும் காரணத்தால் இத்தகைய வீடியோவை பதிவிடத் தடை விதித்தது சீன அரசு.

 டிவிட்டர், பேஸ்புக், யூடியூப்

டிவிட்டர், பேஸ்புக், யூடியூப்

இதேவேளையில் சீனாவில் டிவிட்டர், பேஸ்புக், யூடியூப் போன்ற சர்வதேச சேவைகள் முடக்கப்பட்டு உள்ளதாலும், அந்நாட்டுச் சேவைகள் மட்டுமே இருக்கும் காரணத்தாலும் மக்களும், நிறுவனங்களும் சீன அரசின் விதிமுறை கட்டாயம் பின்பற்றியாக வேண்டிய நிலை உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China Cyberspace bans celebrities from showing off wealth on social media, Live Streaming

China Cyberspace bans celebrities from showing off wealth on social media, Live Streaming
Story first published: Wednesday, November 24, 2021, 19:10 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X