வரலாறு காணா சரிவில் சீனா, இடி மேல் இடி விழுதே!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியப் பொருளாதாரம் எப்படி கடந்த ஒரு வருட காலமாக பயங்கரமாக அடி வாங்கிக் கொண்டு இருக்கிறதோ அதே போல சீனாவும் அடி வாங்கிக் கொண்டு இருக்கிறது.

 

இந்தியாவில் எப்படி ஜிடிபி சரிவு, ஆட்டோமொபைல் விற்பனையில் பயங்கரமான மந்த நிலை எல்லாம் இருக்கிறதோ, அதே போல சீனாவிலும் மந்த நிலை கோரமாக உருவாகிக் கொண்டு இருக்கிறது.

அப்படி சீனாவில் என்ன ஜிடிபி சரிந்து விட்டது..? நடப்பு ஆண்டிலும் சீனாவின் ஜிடிபி சரியுமா..? சீனாவிலும் ஆட்டோமொபைல் விற்பனை சரிந்து விட்டதா..?வாருங்கள் போய் பார்ப்போம்.

அட லவ்வுக்காக எது வேணா செய்யலாம்..இது என்ன வெறும் ரூ.1,178 கோடி.. ஜெஃப் பெசோஸ் காதலிக்கு பரிசு..!

சீன ஜிடிபி

சீன ஜிடிபி

உலக வங்கி கணக்குப் படி, சீனாவின் ஜிடிபி வளர்ச்சி கடந்த 2007-ம் ஆண்டு 14.23 சதவிகிதமாக இருந்தது. அந்த கால கட்டத்தில் எல்லாம் சீனாவை பார்த்து அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளே பயந்தன. அந்த அளவுக்கு புலிப் பாய்ச்சலில் வளர்ந்து வந்தது சீனா. ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளிலேயே சீனா சரியத் தொடங்கிவிட்டது.

சரிவு

சரிவு

அடுத்த 2010-ம் ஆண்டில் சீனாவின் ஒட்டு மொத்த ஜிடிபி வளர்ச்சி 10.63 சதவிகிதம் தான். அதற்குப் பின் தொடர்ந்து இப்போது வரை சரிவு தான்.

2011 - 9.55%

2012 - 7.86%

2013 - 7.76%

2014 - 7.30%

2015 - 6.90%

2016 - 6.73%

2017 - 6.75%

2018 - 6.56%

2019 - 6.15%

என மரண அடி வாங்கிக் கொண்டு இருக்கிறது, சீனாவின் ஜிடிபி வளர்ச்சி

1990-களில் சீனா
 

1990-களில் சீனா

ஜிடிபி சரிவது எல்லாம் ஒரு விஷயமா..? எல்லா நாட்டிலும் ஜிடிபி அவ்வப் போது சரிவதும், மீண்டும் ஒரு நல்ல வளர்ச்சி கண்டு மீண்டு வருவதும் சகஜம் தானே என்கிறார்களா..? அங்கு தான் சீனாவின் சிக்கலே ஆரம்பம். 1990-ம் ஆண்டில், சீனாவின் ஜிடிபி வளர்ச்சி வெறும் 3.90 சதவிகிதம் தான்.

7.6 % தான் பெஞ்ச் மார்க்

7.6 % தான் பெஞ்ச் மார்க்

அதன் பிறகு ஒரு முறை கூட சீனாவின் ஜிடிபி 7.6 சதவிகிதத்துக்குக் கீழ் வளர்ச்சி கண்டதில்லை. கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 7.6%-க்குக் கீழ் தான், சீனாவின் ஜிடிபி வளர்ந்து வருகிறது. இதனால் தான் சீனா தலையில் அடித்துக் கொண்டு தன் பொருளாதாரத்தை வளர்த்து எடுக்க ஓடிக் கொண்டு இருக்கிறது.

கொரோனா

கொரோனா

இப்படி சீனா தன் 29 வருட பொருளாதார வரலாற்றில் இல்லாத அளவுக்கு சரிவில் இருக்கும் போது, கொரோனா வைரஸ் சீன பொருளாதாரத்தை பந்தாடத் தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே, சீனாவுக்கு வர வேண்டிய ஏற்றுமதி வியாபாரங்கள் எல்லாம் இந்தியா, இந்தோனேசியா, வியட்நாம் போன்ற நாடுகளுக்கு கைமாறத் தொடங்கிவிட்டது.

ஆட்டோமொபைல் விற்பனை

ஆட்டோமொபைல் விற்பனை

அது போக, கடந்த ஜனவரி 2020-ம் மாதத்துக்கான கார்கள் விற்பனை தொடர்ந்து 19-வது மாதமாக சரிவைச் சந்திக்க வாய்ப்பு இருக்கிறதாம். ஜனவரி 2020-ல் ஆட்டோமொபைல் விற்பனை கடந்த ஜனவரி 2019 உடன் ஒப்பிட்டால் சுமாராக 18% விற்பனை சரியலாம் என சீனாவில் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் சொல்லி இருக்கிறார்கள்.

கொரோனா

கொரோனா

சுமாராக 1,100 பேர் மரணமடைய காரணமாக இருக்கும் கொரோனா வைரஸ், சீன பொருளாதாரத்தையும் சிதைக்கப் பார்க்கிறது. கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, சீன அரசு, பெரிய அளவில் பயணம் செய்ய கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. அதோடு அலுவலகங்களை எல்லாம் கூட நடத்த முடியாத சூழல் நிலவுகிறது.

பொருளாதார நடவடிக்கைகள் இல்லை

பொருளாதார நடவடிக்கைகள் இல்லை

எனவே உற்பத்தி ஆலைகள், ஹோட்டல்கள், உணவகங்கள், மால்கள் என பலரும் வியாபாரம் செய்ய முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். வியாபாரம் செய்ய முடியவில்லை என்றால் ஜிடிபி எப்படி வளரும்..? ஜிடிபி சரியத் தானே செய்யும். அந்த கொடுமை தான் இப்போது சீனாவில் நடந்து கொண்டு இருக்கிறது.

இடி மேல் இடி

இடி மேல் இடி

ஏற்கனவே கடந்த சில வருடங்களாக சரிவில் இருக்கும் பொருளாதார ஜிடிபி வளர்ச்சிப் பிரச்சனையை சரி செய்ய போராடிக் கொண்டு இருக்கிறது. இதற்கு மத்தியில் கொரோனாவைக் கட்டுப்படுத்த போராடிக் கொண்டிருக்கிறது சீன அரசு. அதோடு ஆட்டோமொபைல் விற்பனை சரிவு என இடி மேல் இடி விழுந்தால் சீனா எப்படித் தான் சமாளிக்குமோ தெரியவில்லை. எப்படியாவது மீண்டு வந்தால் சரி.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China GDP growth is in 29 years low

The highest populated country China's GDP growth is in 29 years low. Due to corona and automobile sale down, the GDP growth may fall down more.
Story first published: Thursday, February 13, 2020, 17:18 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X