அமெரிக்காவுக்கு இது சரியான பதிலடி.. சீனாவின் அதிரடி முடிவு.. பதிலுக்கு பதில்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹாங்காங்கில் அரசியல் சுதந்திரத்தினை அழிக்க முயற்சிக்கும் விதமாக, ஹாங்காங் தலைமை நிர்வாக அதிகாரி கேரி லாம் உள்பட ஹாங்காங் மற்றும் சீனாவை சேர்ந்த 11 பேருக்கு தடை விதித்தது அமெரிக்க அரசு.

 

இது தொடர்பான அறிவிப்பை கடந்த சனிக்கிழமையன்று வாஷிங்டனில் வெளியிட்ட அமெரிக்கா நிதித்துறை செயலாளர் ஸ்டீவன் மனூஷின், ஹாங்காங் மக்களுக்கு உறுதுணையாக அமெரிக்கா நிற்கும் என்று கூறியிருந்தார்.

ஹாங்காங்கின் புதிய சட்டம்

ஹாங்காங்கின் புதிய சட்டம்

ஹாங்காங்கின் புதிய பாதுகாப்பு சட்டத்தை சில மாதங்களுக்கு முன்பு சீனா தனது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதன் நடவடிக்கையினால் பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் சர்ச்சையாக பார்க்கப்பட்ட நிலையில், ஹாங்காங்கில் உள்ள பிரிட்டன் வம்சாவளியினருக்கு குடியிரிமை வழங்குவதாக பிரிட்டன் அரசு சலுகை அறிவித்தது. இதேபோல, ஆஸ்திரேலியாவும், கனடாவும் அறிவித்தன.

அமெரிக்கா 11 சீனர்களுக்கு தடை

அமெரிக்கா 11 சீனர்களுக்கு தடை

இதற்கிடையில் ஹாங்காங்குக்கு கிடைத்து வந்த சிறப்பு வர்த்தக சிறப்பு அந்தஸ்தை அமெரிக்கா இரு வாரங்களுக்கு முன்பு பறித்தது. இதனையடுத்து தொடர்ச்சியாக சீனாவின் 11 முக்கிய பிரபலங்கள் மீதான தடையை அமெரிக்கா அறிவித்தது. இந்த லிஸ்டில் ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம், அந்த பிராந்திய காவல் ஆணையாளர் கிறிஸ் டாங், அரசியல் துறைச் செயலாளர்கள் உள்ளிட்டோருக்கும் தடை விதிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்தது.

சீனா தக்க பதிலடி
 

சீனா தக்க பதிலடி

அமெரிக்காவுக்கு சரியான பதிலடி கொடுக்கும் வகையில், 11 அமெரிக்கா அதிகாரிகளுக்கு தடை விதித்துள்ளது. சீனா எங்களுக்கு அதிகாரிகளைத் தடை செய்கிறது. இலக்கு வைக்கப்பட்டவர்களில் செனட்டர்கள் டெட் க்ரூஸ், மார்கோ ரூபியோ, டாம் காட்டன், ஜோஷ் ஹவ்லி மற்றும் பாட் டூமி, பிரதி நிதி கிறிஸ் ஸ்மித், இவர்களோடு எந்தவித இலாப நோக்கும் அற்ற உரிமை குழுக்களில் உள்ளவர்களும் அடங்குவர்.

சரியான நடவடிக்கை

சரியான நடவடிக்கை

அமெரிக்காவின் நடவடிக்கைக்கு சரியான பதிலடி கொடுக்கும் விதமாக, சீனாவின் இந்த நடவடிக்கையானது இரண்டு நாட்களுக்கு பின்பு வந்துள்ளது. அந்த தடைகள் அந்த மக்களுக்குச் சொந்தமான எந்தவொரு சொத்துக்களையும் முடக்குகின்றன. பொதுவாக இந்த தடையானது அமெரிக்கர்களுடன் வர்த்தகம் செய்வதை தடுக்கின்றது.

யார் இவர்கள்? எதற்காக தடை?

யார் இவர்கள்? எதற்காக தடை?

இதே சீனாவால், தடை செய்யப்பட்ட அமெரிக்க சட்டமியற்றுபவர்கள், ஜூன் மாத இறுதியில், பெய்ஜிங்கின் புதிய சட்டத்தினை கடுமையாக விமர்ச்சித்தவர்கள், நிதி மையத்தில் அதன் அதிகாரத்தை விரிவுபடுத்தியவர்கள். இந்த நிலையில் தான் தற்போது அவர்கள் மீதான தடை விதிகப்பட்டுள்ளது.

இனி என்ன நடக்க போகிறதோ?

இனி என்ன நடக்க போகிறதோ?

இன்னும் சில தினங்களில் முதல் கட்ட வர்த்தக ஒப்பந்தம் பற்றி ஆராயவிருக்கும் இந்த நாடுகள் தற்போதே மோதிக் கொள்ள ஆரம்பித்து விட்டன. ஏற்கனவே சீனாவின் மீது குற்றம் சாட்டி வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இதற்கு என்ன செய்யப்போகிறாரோ? கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் இதுவேறு? பொருளாதாரத்தினை என்ன செய்ய போகிறதோ? பங்கு சந்தைகள் என்னவாகும்? என அனைத்தும் கேள்விக்குறியாகவே உள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China imposes sanctions on 11 US lawmakers, china respond to US sanctions

China imposed sanctions 11 US citizens. Its response to US sanctions
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X