111 பில்லியன் டாலர் டீல்.. அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்தது சீனா..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெய்ஜிங்: 2016ஆம் ஆண்டின் முதல் 5 மாதத்தில் அமெரிக்கா-வை விடவும் சீனா அதிகளவில் வெளிநாடுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தங்களில் பெரும்பாலானவை நிறுவனங்களைக் கையகப்படுத்தப்பட்ட ஒப்பந்தம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதன் மூலம் மறைமுகமாகச் சீன நிறுவனம் வெளிநாட்டு வர்த்தகத்தின் வாயிலாகச் சீன நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி, சேவை, நாணய இருப்பு, பொருளாதாரம் என அனைத்தும் அதிகரிக்கும்.

111 பில்லியன் டாலர் டீல்.. அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்தது சீனா..!

2016ஆம் ஆண்டில் சீனா 110.8 பில்லியன் டாலர் மதிப்பிலான டீல்களை முடிந்துள்ளது. இது 2015ஆம் ஆண்டு முழுவதும் சீனா செய்த மொத்த டீலின் மதிப்பே 106.8 பில்லியன் டாலர் தான்.

கடந்த 5 மாதங்களில் சீன நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களை வாங்கும் அல்லது பங்கு கைப்பற்றும் விதிமாக 1 பில்லியன் டாலர் வீதம் சுமார் 17 டீல்கள் செய்துள்ளது. எஞ்சியுள்ள டீல்கள் அனைத்தும் 1 பில்லியன் டாலருக்கும் குறைவான மதிப்புடையது.

111 பில்லியன் டாலர் டீல்.. அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்தது சீனா..!

இதில் முக்கியமானது, சீன நாட்டின் தேசிய கெமிக்கல் நிறுவனம் சைன்ஜென்டா என்ற சுவிஸ் உரம் மற்றும் விதை நிறுவனத்தை 43 பில்லியன் டாலருக்குக் கைப்பற்றியுள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டு முதல் இதில் ஆதிக்கம் செலுத்தி வந்த அமெரிக்கா சீனாவின் இந்த அதிரடி வர்த்தகத்தின் மூலம் 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China pips US as world's No.1 investor

China has overtaken the US by signing the highest number of overseas deals in less than six months of 2016. The deals, mostly for the purchase of foreign companies, amount to $110.8 billion.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X