6 ஆண்டுகளில் இல்லாத சரிவு.. கவலையில் சீனா!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெய்ஜிங்: 2015ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் சீனாவின் வளர்ச்சி விகிதம் 7 சதவீதத்தை எட்டி, ஆறு ஆண்டுகளில் காணாத சரிவைத் தழுவியுள்ளது.

 

சீனாவில் உள்ள நாட்டுத் தேவை அதிகளவில் குறைந்துள்ளதால் உற்பத்தி பாதித்து வளர்ச்சியைப் பதம் பார்த்துள்ளது. புதியவளர்ச்சி திட்டங்களின் மூலம் சரிவை குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகச் சீன அரசு தெரிவித்துள்ளது.

2014ஆம் நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் சீனாவின் வளர்ச்சி விகிதம் 7.3 சதவீதமாக இருந்தது.

வளர்ச்சியில் சரிவு

வளர்ச்சியில் சரிவு

காலாண்டு வளர்ச்சி அடிப்படையில் ஜனவரி - மார்ச் மாத காலகட்டத்தில் சீனாவின் வளர்ச்சி விகிதம் 1.3 சதவீதமாகக்குறைந்துள்ளதாக தேசிய புள்ளிவிவர அமைப்பு தெரிவித்துள்ளது.

தொழில்துறை உற்பத்தி

தொழில்துறை உற்பத்தி

மார்ச் மாதத்தில் சீனாவின் தொழில்துறை உற்பத்தி 5.6 சதவீதம் அளவிற்கு உயர்ந்ததாலும், ராய்ட்டர்ஸ் கணிப்புகளை (6.9%)விடக் குறைவான அளவை பதிவு செய்துள்ளது.

2008ஆம் ஆண்டு உலகப் பொருளாதார நெருக்கடி நிலவிய பிறகு சீனா குறைவான தொழில்துறை உற்பத்தியை மார்ச்மாதத்தில் சந்தித்துள்ளது.

நிரந்தர சொத்து முதலீடு

நிரந்தர சொத்து முதலீடு

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாக விளக்கும் நிரந்தர சொத்து முதலீட்டில் சீனா 13.5 சதவீத வளர்ச்சியைச்சந்தித்துள்ளது.

ரியல் எஸ்டேட்
 

ரியல் எஸ்டேட்

இந்நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக இருந்து வரும் ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்பு துறையைமேம்படுத்த, சீன அரசு வீடு வாங்குவதில் இருக்கும் தடைகள், சட்டத்திட்டங்களை எளிமையாக்கியது.

இத்துறை வளர்ச்சி மற்றும் வர்த்தம் மார்ச் மாத்தில் 10.4 சதவீத உயர்வில் இருந்து 8.4 சதவீதமாகக் குறைந்ததுள்ளது.

பங்குச் சந்தை

பங்குச் சந்தை

இத்தகைய நிலையில் சீன பங்குச் சந்தையில் முதலீடு அளவும் தொடர்ந்து குறைந்து வருவாத சீனா கவலைத் தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பின்மை

வேலைவாய்ப்பின்மை

சீனாவின் உற்பத்தி துறை வளர்ச்சிக்கு ஏற்றவாறு அதிகப்படியான மக்களுக்குச் சீன நிறுவனங்கள் வேலைவாய்ப்பு அளித்துவந்தது.

தற்போது உற்பத்தி மற்றும் முதலீடு குறைந்துள்ளதால், வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இது ஒருநாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China's economic growth dips to six-year low

China's annual economic growth slowed to a six-year low of 7.0 per cent in the first quarter as demand stayed weak, meeting analyst forecasts but fanning expectations that authorities will roll out more policy stimulus to avert a sharper slowdown.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X