சீனாவில் தலைதூக்கும் விலைவாசி அதிகரிப்பு.. அஞ்சும் உலக நாடுகள்.. இந்தியாவின் நிலை..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவின் கோரத்தாண்டவத்திற்கு மத்தியில் பல நாடுகளும் பொருளாதாரத்தில் நிலை குலைந்துள்ளன. பல லட்சம் பேர் வேலையிழந்து தவித்து வருகின்றனர். பலர் வாழ்வாதாரத்தினை இழந்து தவித்து வருகின்றனர்.

 

இதற்கிடையில் மக்கள் சீனாவின் கொரோனாவுடனும் மல்லுகட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். இதனை இன்னும் மோசமாக்கும் விதமாக, அடிப்படை சில்லறை விற்பனை பொருட்கள் முதல் கொண்டு, தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் கமாடிட்டிகள் வரையில் விலை வாசி அதிகரித்துள்ளது.

ஓரே மாதத்தில் 1.5 கோடி பேரின் வேலை பறிபோனது.. கண்ணீருடன் மக்கள்..!

பல்வேறு மூலதன பொருட்கள் விலையும் மோசமான அதிகரிப்பினைக் கண்டு வருகின்றது. ஏற்கனவே பல நாடுகளில் பற்றாக்குறையே நிலவி வருகின்றது. சீனாவின் நிலவி வரும் நிலைக்கு மத்தியில் இந்திய உள்ளிட்ட உலக நாடுகள், அடுத்து என்ன செய்யப்போகின்றனவோ? தெரியவில்லை.

புதிய ஆர்டர்கள் மறுப்பு

புதிய ஆர்டர்கள் மறுப்பு

ஒரு புறம் இப்படி எனில் மறுபுறம் சரியான மூலதன பொருட்கள் இல்லாமையால், உலக நாடுகளில் பலவற்றிலும் தொழிற்சாலைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் சமீபத்தில் வெளியான தரவில், அதிகரித்து வரும் செலவினங்களால் பாதிக்கப்பட்டுள்ள சில சீன உற்பத்தியாளர்கள் புதிய ஆர்டர்களை மறுப்பதாக கூறப்படுகிறது.

பணவீக்கத்தினை ஊக்கப்படுத்தலாம்

பணவீக்கத்தினை ஊக்கப்படுத்தலாம்

இது சீனாவில் அதிகரித்து வரும் விலைவாசி அதிகரிப்பால், உலகளாவிய அளவில் விநியோக சங்கிலி பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதனால் இது மேற்கோண்டு பல பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மேற்கொண்டு இது பணவீக்கத்தினையும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீன உற்பத்தியாளர்கள் பாதிப்பு
 

சீன உற்பத்தியாளர்கள் பாதிப்பு

அதிகரித்து வரும் மூலம் பொருட்கள் விலை மற்றும் தொழிலாளர்களின் பற்றாக்குறை ஆகியவை, சிறிய அளவிலான சீன உற்பத்தியாளர்களை மோசமாக பாதித்துள்ளது. இவற்றில் பல நிறுவனங்கள் அவற்றில் பல அமெரிக்கா மற்றும் மேற்கத்திய சந்தைகளுக்கு தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகின்றன.

விலை அதிகரிப்பு செய்ய முடியாது?

விலை அதிகரிப்பு செய்ய முடியாது?

பல நிறுவனங்கள் அதிக செலவினங்களுக்கு மத்தியிலும் வெளி நாடுகளில் உள்ள, மற்ற நிறுவனங்களுக்கு ஆர்டர்களை அனுப்பியுள்ளன. எனினும் சில உற்பத்தியாளார்கள் இந்த விலை அதிகரிப்பால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை உயர்வை ஈடு செய்யும் அளவுக்கு, விலையை உயர்த்துவதும் கடினமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

எனினும் சிலர் தங்கள் வணிகத்தினை போட்டியாளர்களுக்கு விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. ஆக அவர்களை இழப்புகளை ஈடுகட்ட வேறு வகையான தீர்வுகளை ஆராய்ந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆர்டர் நிறுத்தம்

ஆர்டர் நிறுத்தம்

தென் சீனாவை தளமாகக் கொண்ட சமையலறை வெண்டிலேட்டர் நிறுவனமான Zhongshan Xiliwang Electrical Appliances Co, மே மாதத்தின் மிடில் பகுதியில் தங்கள் வாடிக்கையாளர்களிடம் புதிய ஆர்டர்களை ஏற்பதை தள்ளி வைப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் விலை குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்கு, முன்பு 2 வாரங்கள் காத்திருக்கவும் கூறியுள்ளது.

சீனாவின் அதிரடி முடிவு

சீனாவின் அதிரடி முடிவு

சீனா 2060க்குள் படிப்படியாக சுற்றுசூழல் மாசுவை குறைப்பதாக அறிவித்துள்ளது. உலகில் ஏற்பட்டுள்ள அதிக தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, நாளுக்கு நாள் சுற்றுசூழல் பாதிக்கப்பட்டு காற்றில் கார்பன் டை ஆக்சைடு பெரிதும் கலந்துள்ளது. இதனை குறைக்க சீனா உள்ளிட்ட பல நாடுகளும் முயற்சி எடுத்து வருகின்றன. இதனால் சீன உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்தியினை பலர் குறைத்துள்ளனர். பலரும் ஆலையை இந்த சமயத்தில் மூடியுள்ளனர்.

தாமதமாகலாம்

தாமதமாகலாம்

சீனாவின் இந்த நடவடிக்கையினால் உற்பத்தி குறைந்துள்ளது. உற்பத்தி குறைவால் சீன உற்பத்தியாளர்கள் மேற்கொண்டு ஆர்டர்களை அனுப்புவதில் தாமதிக்கலாம். அல்லது விலையை அதிகரிக்கலாம். அப்படி இல்லாவிடில் கமாடிட்டிகளின் விலை கட்டுக்குள் வரும் வரை காத்திருக்கலாம். அதே நேரம் மூலதன பொருட்களின் விலையும் கூடியுள்ளது. இது இன்னும் சந்தைக்கு சவாலாக அமைந்துள்ளது.

பல பொருட்கள் விலை அதிகரிக்கலாம்

பல பொருட்கள் விலை அதிகரிக்கலாம்

இது சைக்கிள், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களில் இருந்து எல்லாதுறையிலும் எதிரொலிக்கலாம். இது மேற்கொண்டு விநியோக சங்கிலியில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம். இதனால் மூலதன பொருட்களின் விலையும் அதிகரிக்கலாம். இதனால் ஏற்றுமதி நாடுகளிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கலாம். இது கொரோனாவுக்கு மத்தியில் மேற்கொண்டு மக்கள் மத்தியில் தான் அழுத்தத்தினை கொடுக்கும்.

ஏற்றுமதி நாடுகளில் தாக்கம்

ஏற்றுமதி நாடுகளில் தாக்கம்

மேற்கொண்டு சீனாவில் செலவினங்கள் அதிகரித்தால், இதே நிலை தொடர்ந்தால், பலரும் உற்பத்தியினை நிறுத்தும் நிலைக்கு தள்ளப்படலாம். இது மேற்கோண்டு உற்பத்தியாளர்களை பேரம் பேசும் நிலைக்கு தள்ளலாம். இது சீனாவின் முக்கிய ஏற்றுமதி சந்தைகளில் அதிக பணவீக்கத்தினை ஏற்படுத்த கூடும். அமெரிக்கா உள்பட பல நாடுகள் ஏப்ரல் மாதத்திலேயே நுகர்வோர் விலை குறையீடு 2008ல் இருந்து மிக அதிகளவில் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

சீனாவுக்கும் இது பிரச்சனை தான்

சீனாவுக்கும் இது பிரச்சனை தான்

இது ஒரு புறம் மற்ற நாடுகளுக்கு பிரச்சனை என்றாலும், சீனாவுக்கும் இது பெரும் தலைவலியாகத் தான் இருக்கும். ஏனெனில்; தொடர்ந்து உற்பத்தி நிறுத்தம், விலை அதிகரிப்பு என்பது அங்கும் பணவீக்கத்திற்கு வழிவகுக்கும். ஆக இது சீன பொருளாதாரத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்தும். ஏற்கனவே சமீபத்திய அறிக்கையில் சீனாவின் தொழில் துறை செயல்பாடுகள் சற்று குறைந்துள்ளது. கடந்த ஏப்ரலில் 51.1 ஆக இருந்த நிலையில், மே மாதத்தில் 51 ஆக குறைந்துள்ளது.

நிபுணர்கள் எச்சரிக்கை

நிபுணர்கள் எச்சரிக்கை

இது புதிய ஆர்டர் நிறுத்தம், குறைவு காரணமாக மேற்கொண்டு குறையலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இது குறித்து சீன நிபுணர்களும் எச்சரித்து வருகின்றது. இது சந்தையில் மீண்டும் வீழ்ச்சியினை ஏற்படுத்தலாம். பொருளாதாரத்தில் சரிவினை ஏற்படுத்தலாம் என்றும் எச்சரித்து வருகின்றனர்.

பெரும் ஆள் பற்றாக்குறை

பெரும் ஆள் பற்றாக்குறை

சீன நிறுவனங்களில் வழக்கத்திற்கு மாறாக 10% வரை சம்பளத்தினை அதிகரித்தும், தற்போது வரையில் ஆள் பற்றாக்குறையே நிலவி வருகின்றது. கொரோனாவினால் பெரும்பாலான ஊழியர்கள் தங்கள் சொந்த நகரங்களிலேயே வேலையை எதிர்பார்ப்பதாகவும் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

இந்தியாவுக்கும் பிரச்சனை தான்

இந்தியாவுக்கும் பிரச்சனை தான்

இந்தியாவினை பொறுத்தவரையில் முக்கிய மருந்து மூலதன பொருட்கள், ஆட்டோமொபைல் துறை, எலக்ட்ரானிக்ஸ் மூலதன பொருட்கள், சோலார் உள்ளிட்ட முக்கிய பொருட்களை இறக்குமதி செய்து வருகின்றது. இதனால் இந்தியாவும் அதிக தொகையை செலவிட நேரிடும். அதே நேரம் பற்றாக்குறையும் ஏற்படலாம். இதுவும் சந்தையில் சிக்கலை ஏற்படுத்தலாம். மொத்தத்தில் சீனாவில் பிரச்சனை என்றாலும், அதன் தாக்கம் இந்தியாவிலும் பெரும் அளவில் இருக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: china சீனா
English summary

China’s factories delay new orders as costs rise, it may turn supply shortage

China news updates.. China’s factories delay new orders as costs rise, it may turn supply shortage
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X