புதிய கிரிப்டோகரன்சியை உருவாக்கும் சீனா.. கடுப்பான அமெரிக்கா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எந்தொரு துறையாக இருந்தாலும் அமெரிக்காவின் ஆதிக்கம் இருக்க வேண்டும். அது எந்த நாட்டிலிருந்தாலும் சரி, அப்படி இல்லையென்றால் அதை அழிக்க எந்த முயற்சிகளை வேண்டுமானாலும் அமெரிக்கா எடுக்கும். இதில் தான் அடிக்கடி ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் சண்டை உருவாகும்.

 

அப்படி அமெரிக்கா ஆதிக்கம் இல்லாமல் கொடிகட்டிப் பறந்த ஒரு விஷயம் தான் கிரிப்டோகரன்சி.

தடை.. தடை..

தடை.. தடை..

கிரிப்டோகரன்சி விஸ்வரூபம் எடுத்து உலக மக்கள் அனைவரும் வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டு இருந்த வேளையில், இந்த வர்த்தகத்திற்கு அமெரிக்கா தடை விதித்தது. இதன் பின் அமெரிக்காவின் நட்பு நாடுகளும் அடுத்தடுத்துத் தடை விதிக்கக் கிரிப்டோகரன்சி வர்த்தகமும் அதன் மீதான மோகமும் குறைந்தது.

 

 

பேஸ்புக்

பேஸ்புக்

இப்படி இருக்கும் சூழ்நிலையில் தான் பேஸ்புக் Libra என்னும் கிரிப்டோகரன்சி-ஐ உருவாக்கத் திட்டமிட்டது. இத்திடத்திற்குப் பின் பேஸ்புக் நிறுவனம் மட்டும் அல்லாமல் மாஸ்டர்கார்டு, விசா, Paypal, உபர், ஈபே, வோடபோன் மற்றும் மெர்சி கார்பஸ் என்ற பல முன்னணி நிறுவனங்கள் இணைந்தது.

பேஸ்புக்-இன் இத்திட்டம் குறித்துப் பல அரசியல் தலைவர்களும் சாதகமாகப் பேசப்பட்டது. இந்நிலையில் அமெரிக்காவிற்கு எதிராகச் சீனாவும் புதிய கிரிப்டோகரன்சியை உருவாக்க முடிவு செய்துள்ளது.

 

சீனா
 

சீனா

சீனாவில் தற்போது வங்கி சேவைகள் பல பரிணாம வளர்ச்சியை அடைந்து வரும் நிலையில் கிரிப்டோகரன்சி மட்டும் என்ன விட்டுவைக்கவா போகிறது. அதுவும் அமெரிக்கா களத்தில் இறங்கிய பின்பு சீனா இறங்காவிட்டால் எப்படி..?

இந்நிலையில் சீனாவின் மிக முக்கிய வங்கிகளில் ஒன்றான People's Bank of China புதுக் கிரிப்டோகரன்சியை உருவாக்க முடிவு செய்து அதற்கான பணிகளை வேகவேகமாகச் செய்து வருகிறது.

 

People’s Bank of China

People’s Bank of China

இதுகுறித்து இவ்வங்கி தலைவர் கூறுகையில், வங்கி நிர்வாகம் கடந்த ஒரு வருடமாகக் கிரிப்டோகரன்சியில் ஆராய்ச்சி செய்து வருகிறோம் என்று முக்கியமான நிதி நிறுவனங்கள் பங்குபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார். ஆனால் இது எப்போது பயன்பாட்டுக்கு வரும், எப்போது வர்த்தகத்திற்கு வரும் என்று கூறவில்லை.

 

 

வர்த்தகப் போர்

வர்த்தகப் போர்

ஏற்கனவே சீனாவின் அதிரடி வளர்ச்சி பிடிக்காமல் அமெரிக்கா வேண்டுமென வர்த்தகப் போர் செய்து வரும் நிலையில், சீனாவும் எந்த வகையிலும் விட்டுக்கொடுக்காமல் சரிசமமாகப் போட்டிப் போட்டு வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China to soon launch its own cryptocurrency

The People’s Bank of China (PBoC) is “close" to issuing its own cryptocurrency, according to a senior official. The bank’s researchers have been working intensively since last year to develop systems, and the cryptocurrency is “close to being out,"
Story first published: Wednesday, August 14, 2019, 7:43 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X