சீனாவின் மோசமான நிலை.. இனி பொருளாதாரம் என்னவாகுமோ.. ஜின்பிங்கின் யுக்தி கைகொடுக்குமா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீனாவின் ரியல் எஸ்டேட் மீதான நம்பிக்கையை குறைந்துள்ளது. அதோடு கல்வியுடன் தொழில்நுட்பம் வரையிலான துறைகளை ஒழுங்கு படுத்திவரும் சீன அதிபர் ஜின்பிங் நடவடிக்கைகளுக்கு மத்தியில், சீனாவின் பொருளாதாரம் வேகமாக சரியும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

 

இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

பாங்க் ஆஃப் அமெரிக்கா கார்ப்பரேஷன் இன்க் மற்றும் சிட்டி குரூப் இன்க் உள்ளிட்ட ஆய்வு நிறுவனங்களின், பொருளாதார வல்லுனர்கள் சீனாவின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது 8.2% ஆக சரிவடையலாம் என கணித்துள்ளனர். இதே அடுத்த ஆண்டில் 5% சரிவடையலாம் என கணித்திருந்தனர்.

வளர்ச்சி சரிவடையலாம்

வளர்ச்சி சரிவடையலாம்

இதே கடந்த 2020ஆம் ஆண்டில் சீனாவின் பொருளாதாரம் 2.3% ஆக வளர்ச்சியினைக் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது மூன்று தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு சரிவினைக் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வரவிருக்கும் காலாண்டுகளில் வளர்ச்சி இன்னும் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுசீரமைப்பு

மறுசீரமைப்பு

1970களின் பிற்பகுதியில் டெங் ஜியாவோப்பிங்கின் நவீனமயமாக்களுக்கு பிறகு, 1990ல் ஜூரோங்ஜியின் அரசு நிறுவனங்கள் மற்றும் நிதித்துறையும் மறுசீரமைத்தது. இதன் பிறகு தற்போது ஜி ஜின்பிங் அரசு அதுபோன்ற ஒரு மறுசீரமைப்பு திட்டத்தினை கையில் எடுத்துள்ளது. இது குறிப்பாக தற்சார்பு மிக்க பொருளாதாரத்தினை மையப்படுத்துகிறது.

பல துறைகள் வீழ்ச்சி
 

பல துறைகள் வீழ்ச்சி

சீனாவின் பொருளாதாரம் கொரோனா பெருந்தொற்று மற்றும் ரியல் எஸ்டேட் துறை வீழ்ச்சி உள்ளிட்ட பல காரணிகளினால் வீழ்ச்சியினை கண்டுள்ளது. இதற்கிடையில் தற்போது மீண்டும் சீனாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இன்னும் எந்தளவுக்கு தாக்கதினை ஏற்படுத்துமோ? என்ற அச்சமும் எழுந்துள்ளது.

பலவித நடவடிக்கை

பலவித நடவடிக்கை

இருப்பினும் பெய்ஜிங் தனது பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிக்கும் விதமாக பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. தற்போது சீன நாட்டின் கடன் விகிதம் விரிவாக்கம் அடையத் தொடங்கியுள்ளதையடுத்து, அமெரிக்காவிலிருந்து கடுமையான கட்டுபாடுகளை எதிர்கொள்ளும் தொழில்நுட்ப நிறுவனங்களின், நிதி ஆதாரம் மேன்மையட முயற்சிகளை சீனா தொடங்கியுள்ளது.

மீண்டும் வளர்ச்சி சரியலாம்

மீண்டும் வளர்ச்சி சரியலாம்

கடந்த காலாண்டில் சீனாவின் பொருளாதாரம் 7.9% ஆக வளர்ச்சியினை கண்டிருந்த நிலையில் மூன்றாவது காலாண்டில் 4.9% ஆக வளர்ச்சி குறைந்துள்ளது. இதற்கிடையில் தற்போது சீனாவில் மின்சார பற்றாக்குறை நீடித்து வரும் நிலையில், கடைசி காலாண்டில் வளர்ச்சி இன்னும் குறையலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

கடனை குறைக்கும் நடவடிக்கை

கடனை குறைக்கும் நடவடிக்கை

முன்னதாக கொரோனாவினால் தாக்கம் கண்டிருந்தாலும், அதற்கு முன்னதாகவே பெய்ஜிங்கின் கடன் கட்டுப்பாட்டுக் கொள்கை, நடவடிக்கைகள் இன்னும் அச்சத்தினை ஏற்படுத்தியது. இதனால் மெதுவான வளர்ச்சியே இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 4 தசாப்தங்களாக சீனா பொருளாதாரத்தினை மேம்படுத்த ஏற்றுமதியை மட்டுமே நம்பிருந்தது. ஆனால் அதனை மாற்ற நினைக்கும் அதிபர் தற்சார்பு பொருளாதாரத்தில் கவனம் செலுத்தி வருகின்றார்.

மெதுவான வளர்ச்சி விகிதம்

மெதுவான வளர்ச்சி விகிதம்

எனினும் கடன் கட்டுப்பாட்டுக்கு கொள்கைக்கு மத்தியில், சீனாவின் எவர்கிராண்டே போன்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மிகப்பெரிய தாக்கத்தினை உணர்ந்துள்ளன. இதற்கிடையில் ஜின்பிங் நுகர்வோர் தொழில் நுட்பம் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினை மேம்படுத்த முயன்று வருகின்றார். எனினும் மறுபுறம் வளர்ச்சி விகிதம் மெதுவான வேகத்திலேயே இருந்து வருவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அண்டை நாடுகளுக்கும் பாதிப்பு

அண்டை நாடுகளுக்கும் பாதிப்பு

HSBC ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் ஆசிய பொருளாதார இணைத் தலைவர் ஃபிரடெரிக் நியூமன் கூறுகையில், சீனாவின் பொருளாதாரம் சரியும்போது, அது சர்வதேச பொருளாதாரம் வளர்ச்சியில் எதிரொலிக்கலாம். இதன் காரணமாக ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் போன்ற நகரங்களில் முதலீடுகள் குறையலாம். மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளையும் இது பாதிக்கலாம்.

நிதிச் சந்தைகளில் மோசமான தாக்கம்

நிதிச் சந்தைகளில் மோசமான தாக்கம்

சீனாவின் வளர்ச்சி சரிவானது மிகப்பெரியளவில் உணரப்படும். மேலும் பலவீனமான ரியல் எஸ்டேட் மற்றும் சீனாவில் மற்ற நிலையான சொத்து முதலீட்டு நடவடிக்கைகளில் தாக்கத்தினை உணரலாம். நடப்பு ஆண்டில் சீனாவின் CSI 300 குறியீட்டில் 18% உச்ச நிலை சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் நிதி சந்தைகளில் அதிக தாக்கம் ஏற்படலாம் என ராயல் பேங்க் ஆப் கனாடாவின் ஆசியத் தலைவர் கூறியுள்ளார்.

இந்த வளர்ச்சி பரவாயில்லை

இந்த வளர்ச்சி பரவாயில்லை

எப்படியிருப்பினும் தற்போதுள்ள எதிர்மறையாக கருத்துகளுக்கு மத்தியில் கூட, சீன பொருளாதாரம் 7.5% மேலாக வளர்ச்சி காணும் என்று கூறி வருகின்றனர். இது சீனாவின் முந்தய வளர்ச்சி விகிதங்களுடன் ஒப்பிடும்போது நல்ல வளர்ச்சியாகும். இதற்கிடையில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தினை 2035ல் இருமடங்காக மாற்றுவது இலக்காக நிர்ணயித்துள்ளது. இது வருட வளர்ச்சியில் 5% வளர்ச்சியினை குறிக்கிறது.

முதலீடுகள் குறையலாம்

முதலீடுகள் குறையலாம்

அடுத்த ஆண்டு முதல் பாதியில் சீனாவின் முதலீடுகள் 10% சரிவினைக் காணலாம். ஏனெனில் கடன் வளர்ச்சி விகிதமானது அடிமட்டத்திற்கு அருகில் இருப்பதால், வருடாந்திர வளர்ச்சி விகிதம் குறையலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். சமீபத்தில் எவர்கிராண்டே நிறுவனம் சரிவினைக் கண்டுள்ள நிலையில், அது நீண்டகால நோக்கில் மீண்டும் பொருளாதாரம் உறுதியாக இருக்குமா? என்ற சந்தேகத்தினையும் எழுப்பியுள்ளது.

அரசின் யுக்திகள் கைகொடுக்குமா?

அரசின் யுக்திகள் கைகொடுக்குமா?

இதற்கிடையில் சீனாவின் சொத்து விலைகள் 10% வீழ்ச்சி கண்டுள்ளன. இது வங்கிகளுக்கு கடன் வழங்குவதை குறைத்துள்ளதையடுத்து, ரியல் எஸ்டேட் சரிவினைக் கண்டு வருகின்றது. சீன அதிகாரிகள் வளர்ச்சியில் கவனம் செலுத்தினாலும், இது எந்தளவுக்கு சீனாவுக்கு கைகொடுக்கும் என்று பொறுத்திருந்து தான் பார்ப்போமே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: china சீனா
English summary

Chinese economy risks slowing faster than markets realize

China latest news updates.. Chinese economy risks slowing faster than markets realize
Story first published: Sunday, October 24, 2021, 19:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X