பாகிஸ்தானில் திடீர் முதலீட்டில் இறங்கிய 'சீனா'.. நிலம் முதல் நிறுவனங்கள் வரை.. 'பகிர் உண்மைகள்'..!

சீன நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பாக்கிஸ்தானில் நிறுவனங்கள் மாற்றும் இடங்களை வாங்கிக் குவித்து வருகின்றனர். இதற்காக இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது மாட்டும் இல்லாமல் 57 பில்லியன் டால

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீன நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பாகிஸ்தானில் நிறுவனங்கள் மாற்றும் இடங்களை வாங்கிக் குவித்து வருகின்றனர். இதற்காக இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது மாட்டும் இல்லாமல் 57 பில்லியன் டாலர்கள் வரை தெற்காசிய நாடுகள் பெறும் என்றும் கூறப்படுகின்றது.

பாகிஸ்தான் நிறுவனங்களின் பல நிர்வாகிகள் சிமெண்ட், ஸ்டீல், ஆற்றல் மற்றும் நெசவுத் துறை போன்ற பாக்கிஸ்தானின் முதுகெழும்பாக உள்ள 270 பில்லியன் பொருளாதாரத்தில் சீன நிறுவனங்கள் முதலீசு செய்ய காத்திருக்கின்றன என்று கூறுகின்றனர்.

அமெரிக்கா, சீனா இடையே போர் வரும் சூழல் இருக்கும் நிலையில், பாகிஸ்தானில் சீனா முதலீடு செய்வது அவர்களை பலப் படுத்தும் முயற்சியாகவும், இந்தியாவிற்குச் செல்லும் முதலீடுகளைக் குறைக்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகின்றது.

வல்லுநர்கள்

வல்லுநர்கள்

சீன நிறுவனங்கள் தங்களது நாட்டில் வளர்ச்சி குறைந்ததை அடுத்து பீஜிங்கின்‘ஒன் பெல்ட், ஒன் ரோடு' திட்டத்தில் ஆர்வம் காட்டி வருகின்றன. இதற்காக இவர்கள் தேர்ந்தெடுக்கும் துறுப்புசீட்டு தான் பாகிஸ்தான்.

பங்குச் சந்தையில் முதலீடு

பங்குச் சந்தையில் முதலீடு

சீனாவின் முக்கிய நிறுவனம் ஒன்று பாகிஸ்தான் பங்குச் சந்தையில் ஒரு பெறும் பங்கை வாங்கி உள்ளது. அதே போன்று சாங்காய் மின் சக்தி நிறுவனம் பாகிஸ்தானின் மிகப் பெரிய கே-எலக்ட்ரிக் நிறுவனத்தை 1.8 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கி உள்ளது.

கே-எலக்ட்ரிக்

கே-எலக்ட்ரிக்

யூனஸ் பிரதர்ஸ் சீன நிறுவனத்துடன் இணைந்து கே-எலக்ட்ரிக் வாங்கும் போட்டியில் வெளியேற்றப்பட்டு இருந்தாலும், வேறு இணை நிறுவனத்துடன் இணைந்து 2 பில்லியன் டாலர் வரை வரும் ஆண்டுகளில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.

தனியார் துறை அமைச்சர்

தனியார் துறை அமைச்சர்

பாகிஸ்தானின் தனியார் துறை அமைச்சர் முகமது ஜூபைர் சில நாட்களுக்கு முன்பு கூறுகையில் சீனாவின் பேயோ ஸ்டீல் குழுமம் பாக்கிஸ்தானின் ஸ்டீல் மில்களை 30 ஆண்டிற்குக் குத்தகைக்கு கேட்டுள்ளதாகக் கூறினார். இது குறித்து பேயோ ஸ்டீல் நிறுவனம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

முதலீடுகள்

முதலீடுகள்

அண்மைக்காலங்களில் மேற்கத்திய நாடுகளில் இருந்து முதலீடுகள் பெறுவது குறைந்து இருந்தது மேலும் பாகிஸ்தானில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக உள்ளது

இட ஒதுக்கீடு

இட ஒதுக்கீடு

பாகிஸ்தானின் அரபிக் கடல் துறைமுகம், ரயில், சாலை மற்றும் குழாய் திட்டங்கள் போன்றவற்றுக்கு சீனா கடன் அளித்துள்ளது. இதற்காக பாகிஸ்தானின் நிதி நகரமான கராச்சியில் அதிக சீனர்கள் வந்து செல்வதை பார்க்க நேரிடுகின்றது.

இப்படி கடன் அளிப்பதன் மூலம் திட்ட பணிகளுக்கான பொருட்களை சீன நிறுவனங்களிடம் இருந்து மாட்டுமே பெற வேண்டும்.

 

பின்பற்றும் விதிகள்

பின்பற்றும் விதிகள்

சீனாவில் உள்ளது போன்ற விதிகளையே இங்கும் பின்பற்றலாம் என்று இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு முன்பு இது போன்ற முடிவுகளுக்கு இரு நாடுகளுக்கு இடையில் சரியான புரிந்துணர்வு இல்லாமல் இருந்தது.

பாதுகாப்பு காரணங்கள்

பாதுகாப்பு காரணங்கள்

புதியவர்களுடன் இணைந்து வணிகத்தைத் துவங்க இயலாது. பாதுகாப்பு காரணங்கள் இங்குப் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. உலக வங்கியின் கணக்கின் படி வர்த்தக குறியீட்டில் 190 நாடுகளில் 144 வது இடத்தை பாகிஸ்தான் பிடித்துள்ளது.

அடுத்த கட்டம்

அடுத்த கட்டம்

பாக்கிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் சீனாவின் சரசு நிறுவனங்களுடன் இணைந்து பாக்கிஸ்தான் பல நிறுவனங்களைத் துவங்க முயற்சித்து வருகின்றது. சிறப்பு பொருளாதார மண்டலங்களை அளித்து, வரி விலக்குகளை அளித்து சீன நிறுவனங்களை பாக்கிஸ்தானில் ஆலைகளைத் துவங்க வழிவகை செய்யப்பட்டு வருகின்றது.

சலுகைகள் பற்றி கவலை இல்லாமல் இடம் வாங்கும் நிறுவனங்கள்

சலுகைகள் பற்றி கவலை இல்லாமல் இடம் வாங்கும் நிறுவனங்கள்

பல சீன நிறுவனங்கள் பாகிஸ்தானில் வழங்கும் வரி விலக்கு, இடம் போன்றவை பற்றி எல்லாம் கவலைப்படாமல் 500 ஏக்கர் நிலம் வாங்குவது போன்றவற்றில் ஆர்வம் செலுத்தி வருகின்றன.

எங்கெல்லாம் நிலம் வாங்கப்படுகின்றன

எங்கெல்லாம் நிலம் வாங்கப்படுகின்றன

பாகிஸ்தானின் முக்கிய சந்தைகளான லாகூர், கராச்சி, இஸ்லாமாபாது உள்ளிட்ட இடங்களில் இடம் வாங்குவது பற்றி சீன நிறுவனங்கள் ஆலோசனை செய்து வருகின்றன.

இந்தியாவில் முதலீடு குறைய வாய்ப்பு

இந்தியாவில் முதலீடு குறைய வாய்ப்பு

சீன நிறுவனங்கள் பல இந்தியாவில் தொடர்ந்து முதலீடு செய்து வரும் நிலையில் பாகிஸ்தான் மீதான சீன நிறுவனங்களின் கவனம் அதிகர்க்கும் நிலையில் இந்தியாவில் முதலீடுகள் குறையும் வாய்ப்பும் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Chinese firms are in a mad rush to buy business and land in Pakistan. Read why

Chinese firms are in a mad rush to buy business and land in Pakistan. Read why
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X