7% சரிவால் சீன பங்குச்சந்தை வர்த்தகம் அட்டோமேடிக் ஷட்-டவுன்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஷாங்காய்: உலகின் 2வது மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கும் சீனா, தனது பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து மந்தமடைந்து வருவதாகப் பல பொருளாதார அமைப்புகள் எச்சரித்து வந்த நிலையில், 2015ஆம் ஆண்டில் சீன நாட்டின் தொழிற்துறை வளர்ச்சி மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது.

 

15 நிமிட முடக்கம்..

15 நிமிட முடக்கம்..

இத்தகைய சூழ்நிலையில் 2016ஆம் ஆண்டின் முதல் நாள் வர்த்தகத்தில் சீன பங்குச்சந்தையை வர்த்தகம் துவக்கம் முதலே அதிகளவிலான சரிவை எட்டியதால், 15 நிமிடம் முடங்கியது.

அட்டோமேடிக் ஷட்-டவுன்

அட்டோமேடிக் ஷட்-டவுன்

இதன் பின் சீன பொருளாதாரத்தை முழுமையாகப் பாதிக்கும் வண்ணம் ஷாங்காய் பங்குச்சந்தை 7 சதவீதம் வரை சரிவை எட்டியதால் சர்கியூட் பிரேக்கர் எனப்படும் அட்டோமேடிக் ஷட்-டவுன் ஏற்பட்டது.

சர்கியூட் பிரேக்கர்

சர்கியூட் பிரேக்கர்

சீன பங்குச்சந்தை நாட்டின் பொருளாதாரம் மற்றும் பங்குச்சந்தை ஸ்திரமற்ற தன்மையைச் சமாளிக்கும் விதமாகச் சர்கியூட் பிரேக்கர் எனப்படும் அட்டோமேடிக் ஷட்-டவுன் முறையைச் சில ஆண்டுகளுக்கு முன் தனது வர்த்தக அமைப்பில் நிறுவியது.

இந்நிலையில் முதல் முறையாக இந்த அட்டோமேடிக் ஷட்-டவுன் முறையின் கீழ் சீன பங்குச்சந்தை முடங்கியுள்ளது.

ஆசிய சந்தை
 

ஆசிய சந்தை

சீன பங்குச்சந்தை வீழ்ச்சியால் இந்தியா, சிங்கப்பூர், தென் கொரியா, மற்றும் ஜப்பான் ஆகிய சந்தைகள் மிகப்பெரிய வீழ்ச்சி அடைந்துள்ளது.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

மேலும் சீன சந்தையின் வீழ்ச்சியை மேலும் மோசமடையச் செய்ய, ஈரான் மற்றும் சவுதி அரேபியா நாடுகளின் போட்டியில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

யுவான்

யுவான்

சீனாவின் பங்குச்சந்தை வீழ்ச்சியின் காரணமாகச் சீன நாணயமான யுவான் இன்று 5 வருட சரிவை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

யுவான் நாணயத்திற்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Chinese stock markets close for the day after shares fall 7%

Shares in China nosedived in Monday morning trade, as poor manufacturing data, raised fresh concerns of growth in Asia's largest economy.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X