சிஸ்கோ நிறுவனத்தின் 200 ஊழியர்களுக்கு பிங்க் ஸ்லிப்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: வன்பொருள் மற்றும் மென்பொருள் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான சிஸ்கோ நிறுவனம். தனது இந்திய கிளை நிறுவனமான என்.டி.எஸ் நிறுவனத்தின் 200 ஊழியர்களுக்கு பிங்க் ஸ்லிப் கொடுத்துள்ளது. பிங்க் ஸ்லிப் என்றால் இந்த நிறுவனத்தில் உங்களுக்கு வேலையில்லை கூடிய விரைவில் வேறொரு நிறுவனத்திற்கு செல்ல சொல்லும் ஒரு எச்சரிக்கை கடிதம்.

 

சிஸ்கோ - என்டிஎஸ்

சிஸ்கோ - என்டிஎஸ்

இந்த ஆட்குறைப்பு பற்றி பெயர் வெளியிட முடியாத ஒரு அதிகாரி கூறுகையில், கடந்த 2012ஆம் ஆண்டு சிஸ்கோ நிறுவனம் இந்தியாவில் என்டிஎஸ் நிறுவனத்தை கைபற்றியது. அப்போது இந்நிறுவனத்தின் ஊழியர் எண்ணிக்கை 1,900 ஆகும். கடந்த 2 காலாண்டுகளாக இந்நிறுவனம் தொடர்ந்து ஆட்களை குறைத்து வருகிறது.

என்டிஎஸ் நிறுவனம் என்ன செய்கிறது??

என்டிஎஸ் நிறுவனம் என்ன செய்கிறது??

இந்நிறுவனம் டிவி செட் டாப்பாக்ஸ்கான் மென்பொருளை உருவாக்கி வருகிறது. இந்நிறுவனத்தின் குறைந்த வளர்ச்சியால் இந்நிறுவனம் செலவுகளை குறைப்பதற்காக ஆட்குறைப்பில் இறங்கியுள்ளது. (லாபம் வரலைனா புது டெக்னாலஜியை பயன்படுத்து, புதிய வியாபார யுத்தியை கண்டுபிடி, அதை விடுத்து ஊழியர்களின் வயிற்றில் அடிக்கலாமா??)

6000 பணியாளர்கள்
 

6000 பணியாளர்கள்

மேலும் சிஸ்கோ நிறுவனம் தனது அத்தனை கிளைகளிலும் கடுமையான மறுசீரமைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது, இத்தகைய நடவடிக்கையால் இந்நிறுவனத்தின் 6000 பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிகிறது. இதில் இந்தியாவில் குறைக்கப்பட்ட ஊழியர்கள் ஒரு பகுதி மட்டுமே.

 சிஸ்கோவின் கவனம்

சிஸ்கோவின் கவனம்

மேலும் இந்நிறுவனத்தின் வளர்ச்சி, கண்டுபிடிப்புகள் மற்றும் திறன் மிக்க பணியார்களை நிறுவனம் கைவிடபோவதில்லை என சிஸ்கோ நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

புதிய பணியாளர்கள்

புதிய பணியாளர்கள்

இந்நிறுவனத்தின் பழைய பணியாளர்களை அனுப்பிவிட்டு, திறமைமிக்க புதிய பணியாளர்களை நிறுவனத்தில் அடுத்த கட்ட வளர்ச்சி பணிக்கு சிஸ்கோ ஆயத்தமாகிறது என மற்றோரு ஊழியர் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cisco lays off 200 people at its subsidiary NDS India

Cisco has given out pink slips to 200 engineers working for NDS India, one of its subsidiaries, as a part of its global restructuring efforts.
Story first published: Wednesday, September 10, 2014, 18:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X