ட்ரம்புக்கு ஷாக் கொடுக்கும் CNN போல் முடிவுகள்! சுட்டிக் காட்டும் Forbes!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜூன் 08-ம் தேதி, சி என் என் செய்தி நிறுவனம் வெளியிட்ட, அதிபர் தேர்தல் தொடர்பான போல் முடிவுகளில், தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை விட, டெமாக்ரட்டிக் கட்சியின் ஜோ பிடன் 14 புள்ளிகள் முன்னனியில் இருக்கிறார் எனச் சொன்னது.

 

இந்த செய்தி வெளியான பின், வழக்கம் போல டொனால்ட் ட்ரம்ப் தன் மிரட்டல் தொனியை கையில் எடுத்தார்.

இந்த போல் முடிவுகளை சி என் என் நிறுவனம் திரும்பப் பெற்றுக் கொண்டு, முழுமையான நியாயமான போல் முடிவுகளை வெளியிட வேண்டும். மன்னிப்பு கேட்க வேண்டும் என மிரட்டல்களை எல்லாம் சந்தித்தது சி என் என்.

ஃபோர்ப்ஸ்

ஃபோர்ப்ஸ்

சி என் என் போலவே உலகம் முழுக்க பிரபலமான இன்னொரு பத்திரிகையான ஃபோர்ப்ஸ் வலைதளத்தில், சி என் என் வெளியிட்ட போல் முடிவுகளில் கவனிக்க வேண்டிய விஷயங்களாக சிலவற்றை வெளியிட்டு இருக்கிறது. அவைகளைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம். சரி முதலில் ட்ரம்ப் தன் வேலையை எப்படி கையாள்கிறார் என்பதில் இருந்தே தொடங்குவோம்.

அதிபர் பதவியை கையாளுதல்

அதிபர் பதவியை கையாளுதல்

டொனால்ட் ட்ரம்ப் தன் அதிபர் பதவியை கையாளும் விதத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா (Approve), மறுக்கிறீர்களா (Disapprove)..? என்கிற கேள்விக்கு பதில்கள் கீழ் வருமாறு

1. கல்லூரி பட்டதாரிகள் - 30% பேர் ஆமோதிக்கிறார்கள், 67% பேர் மறுக்கிறார்கள்.

2. பட்டதாரி அல்லாதவர்கள் - 42% பேர் ஆமோதிக்கிறார்கள், 52% பேர் மறுக்கிறார்கள்.

வெள்ளையினத்தவர்கள் கருத்து
 

வெள்ளையினத்தவர்கள் கருத்து

அதே கேள்விக்கு வெள்ளையினத்தவர்கள் (White) என்ன பதில் சொல்லி இருக்கிறார்கள் என்பது தான் ட்ரம்புக்கே உச்சகட்ட ஷாக் கொடுக்கும் பதில்கள்.

1. கல்லூரி பட்டதாரிகள் - 32% பேர் ஆமோதிக்கிறார்கள், 66% பேர் மறுக்கிறார்கள்.

2. பட்டதாரி அல்லாதவர்கள் - 52% பேர் ஆமோதிக்கிறார்கள், 43% பேர் மறுக்கிறார்கள்.

யாருக்கு ஓட்டு

யாருக்கு ஓட்டு

இன்றே அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வைக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். யாருக்கு ஓட்டு போடுவீர்கள் என்கிற கேள்விக்கான பொளேர் பதில் கொடுத்து இருக்கிறார்கள். கல்லூரி பட்டதாரிகளில் 64% பேர் பிடனுக்கு ஆதரவு தந்திருக்கிறார்கள். பட்டதாரி அல்லாதவர்கள் 49 % பேர் ஜோ பிடனுக்கு ஆதரவு.

வெள்ளை இனத்தவர்கள்

வெள்ளை இனத்தவர்கள்

ஆனால் வெள்ளை இனத்தவர்களில் பட்டதாரி அல்லாதவர்களில் 57 % பேர் ட்ரம்புக்கு பச்சைக் கொடி காட்டி இருக்கிறார்கள். ஆனால் வெள்ளை இனத்தவர்களில் பட்டதாரிகள் ஜோ பிடனுக்கு தான் 63 % பேர் ஆதரவு கொடுத்து இருக்கிறார்கள். 35 % வெள்ளை இனத்து பட்டதாரிகள் தான் ட்ரம்புக்கு ஆதரவு கொடுத்து இருக்கிறார்கள்.

தேசத்தின் நெருக்கடியான நேரம்

தேசத்தின் நெருக்கடியான நேரம்

அமெரிக்கா நெருக்கடியில் இருக்கிறது. இந்த நேரத்தில் யார் அதிபராக இருந்தால் சிறப்பாக சமாளித்து இருப்பார்கள். இந்த கேள்விக்கு பட்டதாரிகள் மத்தியில் பிடனுக்கு 66 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. பட்டதாரி அல்லாதவர்களில் 49 % பிடனுக்கு ஆதரவு. வெள்ளை இன பட்டதாரிகளில் 66 % ஜோ பிடனுக்கு ஆதரவு. வெள்ளை இனத்தவர்களில் படிக்காதவர்களில் 55 % பேர் டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவு.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனாவை யார் அதிபராக இருந்து இருந்தால் சிறப்பாக கையாண்டு இருப்பார்கள்? படித்த பட்டதாரிகளில் 66% பேர் ஜோ பிடனுக்கு ஆதரவு. வெள்ளை இனத்து பட்டதாரிகளில் 64% பேரும் ஜோ பிடனுக்குத் தான் ஆதரவு. பட்டதாரி அல்லாதவர்களில் 48% பேர் ஜோ பிடனுக்கே யெஸ் சொல்கிறார்கள். இதிலும் வெள்ளை இனத்தவர்களில் பட்டப்படிப்பு படிக்காதவர்கள் மட்டுமே 55 % பேர் ட்ரம்புக்கு ஆதரவு தந்திருக்கிறார்கள்.

கறுப்பு வெள்ளை யார் டாப்

கறுப்பு வெள்ளை யார் டாப்

ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்கிற கருப்பினத்தவர் கொல்லப்பட்டதை எதிர்த்து, அமெரிக்க மக்களில் பெரும்பாலானவர்கள், தங்களின் இதயத்தில் இருந்து கோபத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த பிரச்சனையில் யார் சிறப்பாக கையாண்டு இருப்பார்கள் என்கிற கேள்விக்கு, ஜோ பிடனுக்கு பட்டதாரிகளில் 70%-க்கு மேல் ஆதரவு கிடைத்து இருக்கிறது. இந்த பிரிவில் வெள்ளை இன பட்டதாரி அல்லாதவர்கள் கூட 47% பேர் ஜோ பிடனுக்கு யெஸ் சொல்கிறார்கள். வெள்ளை இனத்தவர்களில் பட்டதாரி அல்லாதவர்களில் 48 % பேர் ட்ரம்புக்கு ஓகே சொல்லி இருக்கிறார்கள்.

பொருளாதார விவகாரங்களில் யார்?

பொருளாதார விவகாரங்களில் யார்?

இது தான் ட்ரம்புக்கு ஆறுதல் பரிசு கொடுக்கும் ஒரே ஏரியா. பொருளாதார செயல்பாடுகளில் யார் சிறப்பாக செயல்பட்டு இருப்பார்கள் என்கிற கேள்விக்கு பட்டதாரிகள் (வெள்ளை இனத்தவர்கள் உட்பட) சுமாராக 54 % பேர் ட்ரம்புக்கு "சூப்பர்" சொல்லி இருக்கிறார்கள். பட்டப் படிப்பு படிக்காதவர்கள் கூட 56 % பேர் ட்ரம்புக்கு தான் ஆதரவு. அதிலும் வெள்ளை இனத்தவர்களில் பட்டதாரி அல்லாதவர்களில் 66 % பேர் ட்ரம்புக்கு தான் யெஸ் சொல்லி இருக்கிறார்கள்.

ட்ரம்ப் கவனத்துக்கு

ட்ரம்ப் கவனத்துக்கு

இந்த விஷயங்களை எல்லாம், நம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பார்த்து இருப்பாரா..? மக்களுக்கு பல்வேறு பிரச்சனையில், தன் மீது இருக்கும் எண்ணத்தை மாற்ற வேண்டும் என்கிற எண்ணமாவது அவருக்கு வந்திருக்குமா..? எல்லாம் அதிபர் ட்ரம்புக்கும், அமெரிக்க மக்களுக்கும் தான் வெளிச்சம். இன்னும் சில மாதங்கள் தான். நவம்பரில் இந்த பரிட்சைக்கான முடிவுகள் வெளியாகிவிடும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

CNN poll details may shock Trump

The recent June 08th 2020 CNN poll details may shock the current president of the united states. Donald Trump doesn't have a good numbers as per the CNN poll.
Story first published: Wednesday, June 17, 2020, 16:44 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X