மக்களே 'காண்டம்' ஸ்டாக் இல்லையாம்.. கொஞ்சம் பொறுமையா இருங்கப்பா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா பாதிப்பு உலகளவில் மிகப்பெரியதாக வெடித்துள்ள நிலையில், தொழிற்துறைகள், உற்பத்தி ஆலைகள் அனைத்தும் மூடப்பட்டு மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இது இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் நிலவும் நிலைப்பாடு. இந்த மோசமான நிலையில் மக்கள் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என அனைத்து பொருட்களையும் பட்டியலிட்டு அதிகளவில் வாங்கிக் குவித்து வருகின்றனர்.

இதில் பட்டியலில் முக்கியமான பொருளாகத் தற்போது காண்டமும் இணைந்துள்ளது. இடந்த சில நாட்களாக இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் காண்டம் விற்பனை அமோகமாக உள்ளது. இந்நிலையில் தற்போது ஸ்டாக் இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர் என்றால் உங்களால் நம்ப முடியுமா..?

தட்டுப்பாடு
 

தட்டுப்பாடு

உலகளவில் காண்டம் தேவை அதிகரித்துள்ளது ஒருபக்கம் இருந்தாலும், கொரோனா பாதிப்புக் காரணமாகக் காண்டம் தயாரிக்கும் நிறுவனங்கள் அனைத்தும் இயங்காமல் முடங்கியுள்ளதால் சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் காண்டம்-க்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

காரெக்ஸ்

காரெக்ஸ்

காண்டம் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனமான திகழும் மலேசியாவின் Karex நிறுவனம் உலகளவில் தயாரிக்கப்படும் 5 இல் ஒரு காண்டம்-ஐ தயாரிக்கிறது.

இந்நிலையில் மலேசிய அரசு கொரோனா தொற்றின் காரணமாக அனைத்து தொழிற்சாலைகளையும் மூட உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் இந்நிறுவனத்தின் 3 தொழிற்சாலை கடந்த 10 நாட்களாக முடங்கி, ஒரு காண்டம் கூடத் தயாரிக்கவில்லை.

10 கோடி காண்டம்

10 கோடி காண்டம்

கடந்த 10 நாட்களைக் கணக்கிட்டால் கூடச் சுமார் 10 கோடி காண்டம் தற்போது தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிறுவனம் தான் வெளிநாடுகளிலும் பல்வேறு பிராண்டுகளில் காண்டம் விற்பனை செய்து வருகிறது.

இதுமட்டும் அல்லாமல் அரசு சுகாதார அமைப்பான பிரிட்டன் NHS மற்றும் அரசு உதவி பெறும் திட்டங்களான பிரிட்டன் மக்கள்தொகை நிதியம் ஆகியவற்றுக்கும் காண்டம் தயாரித்து விநியோகம் செய்து வருகிறது.

பயமா இருக்கு...
 

பயமா இருக்கு...

இதைப்பற்றிய Karex நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Goh Miah Kiat கூறுகையில், அடுத்தச் சில நாட்களில் உலகம் முழுவதும் காண்டம் தட்டுப்பாடு அதிகமாக இருக்கும். இதைப் பற்றி யோசித்தாலே எனக்குப் பயமாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இந்தத் தட்டுப்பாடுகள் 2 வாரங்கள் முதல் ஒரு மாதம் வரையில் நீட்டிக்கும் என எங்கள் நிறுவனம் கணித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: global corona condom coronavirus
English summary

Condom shortage looms after coronavirus lockdown shuts

A global shortage of condoms is looming, the world's biggest producer said, after a coronavirus lockdown forced it to shutdown production. Malaysia's Karex Bhd makes one in every five condoms globally. It has not produced a single condom from its three Malaysia factories in the past 10 days due to a lockdown imposed by the government to halt the spread of the virus.
Story first published: Saturday, March 28, 2020, 7:25 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more