அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வியாபாரத்தையே உலுக்கிய கொரோனா வைரஸ்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸ், ஒட்டு மொத்த உலக பொருளாதார நடவடிக்கைகளை பாதித்து இருக்கின்றன. அதில் இருது மீள வழி தெரியாமல் எல்லா நாடுகள் முழித்துக் கொண்டு இருக்கின்றன.

 

கூலி வேலை பார்க்கும் எளிய மக்கள் தொடங்கி சம்பளம் வாங்கும் நடுத்தர மக்கள் வரை, எல்லோருமே ஒரு நிதிச் சிக்கலை எதிர்கொண்டு வருகிறார்கள்.

ஆனால் உலக பில்லியனர்கள் மற்றும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு மட்டும், இந்த கொரோனா காலத்திலும் புதிய உச்சங்களைத் தொட்டு இருக்கிறது.

ஜெஃப் பிசாஸ்

ஜெஃப் பிசாஸ்

உதாரணமாக, அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பிசாஸின் சொத்து மதிப்பு, சமீபத்தில் 200 பில்லியன் டாலரைத் தொட்டு, உலக சாதனை படைத்தது இங்கு நினைவு கூறத்தக்கது. தற்போது 186 பில்லியன் டாலர் உடன் முதலிடத்தில் இருப்பதாகச் சொல்கிறது ப்ளூம்பெர்க் தரவுகள். 2020-ம் ஆண்டில் மட்டும், இவரின் சொத்து மதிப்பு 71.1 பில்லியன் டாலர் அதிகரித்து இருக்கிறதாம்.

மற்ற பில்லியனர்கள்

மற்ற பில்லியனர்கள்

இந்த 2020-ம் ஆண்டில், பில் கேட்ஸின் சொத்து மதிப்பு 8 பில்லியன் டாலர், மார்க் சக்கர் பெர்கின் சொத்து மதிப்பு 24 பில்லியன் டாலர், எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 54 பில்லியன் டாலர், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 21 பில்லியன் டாலர் அதிகரித்து இருக்கிறதாம்.

அதிபர் டொனால்ட் ட்ரம்ப்
 

அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

தற்போது அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் ட்ரம்பும், ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் டாப் 400 பில்லியனர்களில் ஒருவராம். கடந்த ஆண்டு, 3.2 பில்லியன் டாலர் உடன் 275-வது இடத்தில் இருந்து டொனால்ட் ட்ர்மப், இந்த ஆண்டு 2.5 பில்லியன் டாலர் உடன் 352-வது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறாராம்.

கொரோனா எதிரொலி

கொரோனா எதிரொலி

டொனால்ட் ட்ரம்புக்குச் சொந்தமான Trump Organization என்கிற கம்பெனி, அலுவலக கட்டடங்கள், ஹோட்டல்கள், ரிசார்ட்கள் போன்றவைகளில் சொத்து வைத்திருக்கிறார்களாம். இந்த கொரோனா வைரஸால் ஹோட்டல், அலுவலகம், ரிசார்ட் எல்லாமே பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறதாம். எனவே சொத்து மதிப்பிலும் இவைகள் கொஞ்சம் பலமாக எதிரொலித்து இருக்கின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Coronavirus affect Donald Trump business organization

The Coronavirus has affected the Donald Trump's Trump Organization company. Donald Trump fall from 275th place in billionaires list to 352nd place.
Story first published: Wednesday, September 9, 2020, 13:57 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X