கொரோனாவை விரட்ட உதவிய சிறந்த மனிதாபிமானம்.. சாப்ட் பேங்க் குழும CEO ஒப்புதல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகெங்கிலும் கொரோனாவின் காரணமாக மக்கள் ஆங்காங்க்கே கொத்து கொத்தாக செத்து மடிந்து வரும் நிலையில், இன்னும் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறதோ தெரியவில்லை.

 

ஆனால் இந்த ரணகளத்திலும் மனிதாபிமானம் வெளிபட்டு கொண்டு இருப்பதால் தான், இன்றும் உலகம் இந்த கொரோனா பிரச்சனையிலும் கூட சற்று ஆறுதலடைந்துள்ளது எனலாம்.

ஏனெனில் ஆங்காங்ககே மக்கள் தங்களால் முடிந்தவற்றை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதை நம்மால் அறிய முடிகிறது.

ஆபத்தில் 1.5 கோடி வேலைகள்.. கவலையில் ஏற்றுமதி துறை.. கொரோனா ஊரடங்கின் எதிரொலி..!

ஜப்பானுக்கு முகக் கவசம்

ஜப்பானுக்கு முகக் கவசம்

சீனாவின் முக்கிய மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான BYD Co Ltd நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்ததினை எட்டிய நிலையில், மாதம் தோறும் ஜப்பானுக்கு 300 மில்லியன் மாஸ்குகளை கொடுப்பதாக ஒப்புக் கொண்டுள்ளதாக சாப்ட் பேங்க் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியான மசயோஷி சன் தெரிவித்துள்ளார்.

நியூயார்க்கிற்கு நன்கொடை

நியூயார்க்கிற்கு நன்கொடை

கொரோனா பரவல் காரணமாக நிலவி வரும் பற்றாக்குறையை சமாளிக்க, இரண்டு விதமான முக கவசங்களை, ஜப்பானிய முககவசம் குழு ஒத்துழைப்புடன் அடுத்த மாதம் முதல் அடுத்த இரண்டு மாதங்களுக்கு அனுப்ப உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இவர் கடந்த மாதமே நியூயார்க் மாநிலத்துக்கு 1.4 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக அளிப்பதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

போதுமானதாக இல்லை
 

போதுமானதாக இல்லை

மேலும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு வீட்டுக்கு துவைக்கக் கூடிய இரண்டு மாஸ்குகளை வழங்க உள்ளதாகவும் தெரிவித்தது ஜப்பான். ஆனால் இந்த நிலையில் சப்ளை நெருக்கடிக்கு தீர்வு காண்பது ஜப்பான் அரசின் முன்னுரிமையாகும் என்றும் கூறப்படுகிறது. சமூக ஊடகங்களில் இந்த மாஸ்குகள் போதுமானதாக இல்லை என பலராலும் விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இப்படி ஒரு அதிரடி அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாஸ்க் உற்பத்தி

மாஸ்க் உற்பத்தி

இதற்கிடையில் 700 மில்லியன் உபயோகப்படுத்திய பின்பு தூக்கி எரியும் மாஸ்குகளை உற்பத்தி செய்ய அரசு இலக்காகக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. சீனா நிறுவனன்ங்களுடன் கைகோர்த்த மசயோஷி சன், தற்போது ஒரு நாளைக்கு BYD Co Ltd 15 மில்லியன் முகமூடிகளை உற்பத்தி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இது நல்ல தரமான விஷயம்

இது நல்ல தரமான விஷயம்

இதனை வரவிருகும் மாதங்களில் சாப்ட் பேங்க் சப்ளை செய்யலாம் எனவும் கூறப்படுகிறது. சாப்ட் பேங்க் குழுமம் 100 மில்லியன் என் 95 மாஸ்குகளையும்,, 200 மில்லியன் வழக்கமான அறுவை சிகிச்சனை முகக் கவசங்களையும் வழங்கலாம் என்றும் கூறப்படுகிறது. எப்படியோங்க இதுபோன்ற அசாதாரண சூழ்நிலைகளில், இதுபோன்ற மனிதாபினமானம் மிக்க செயல்களை பார்க்க முடிவது நல்ல விஷயம் தானே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Coronavirus impact: Softbank CEO Masayoshi son to supply 300 million masks to japan

SoftBank Group Corp CEO Masayoshi Son said secured a monthly supply of 300 million face masks for Japan
Story first published: Sunday, April 12, 2020, 12:18 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X