கொரோனாவால் பலத்த அடி வாங்கிய அமெரிக்கா.. எப்படி தெரியுமா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகினையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா, மக்களை மட்டுமே காவு கேட்கவில்லை. உலகப் பொருளாதாரதினையே கொஞ்சம் கொஞ்சமாய் விழுங்கி வருகிறது.

 

சுமார் 2,600 பேருக்கும் மேல் பலி கொண்டுள்ள நிலையில், இதுவரை 77,658 பேருக்கும் மேல் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் தற்போது விஸ்வரூபம் எடுத்து ஆடி வரும் கொரோனா, உலக நாடுகளிலும் வெகுவேகமாக பரவ ஆரம்பித்துள்ளது.

ஏர் இந்தியாவை வாங்கலாமா..? யோசனையில் அதானி!

வீழ்ச்சி காணலாம்

வீழ்ச்சி காணலாம்

இதுவரையில் சீனா பொருளாதாரத்தை மட்டும் விழுங்கிக் கொண்டிருந்த கொரோனா வைரஸ், இனி உலகப் பொருளாதாரத்திலும் வேகமாக பரவலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் சர்வதேச பொருளாதாரமும் வீழ்ச்சி காணலாம் என்றும் ஆய்வாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது. இதன் காரணமாக சர்வதேச அளவில் உள்ள பங்கு சந்தைகள் படு வீழ்ச்சி கண்டு வருகின்றன.

அமெரிக்க சந்தைகள் வீழ்ச்சி

அமெரிக்க சந்தைகள் வீழ்ச்சி

அதிலும் குறிப்பாக உலகின் முதன்மையான பொருளாதார நாடான அமெரிக்கா இதனால் பெருத்த அடி வாங்கலாம் என்றும் நம்பப்படுகிறது. இதனால் அமெரிக்கா பங்கு சந்தைகள் படு வீழ்ச்சி கண்டுள்ளன. சீனவின் முக்கிய வர்த்தக பங்களியான அமெரிக்காவிலும், சீனாவின் தாக்கம் எதிரொலிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதிலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆய்வாளர்கள் சிலர் நிச்சயம் அமெரிக்கா பொருளாதாரத்தில் வீழ்ச்சி இருக்கலாம் என்று கூறியது கவனிக்கதக்கது.

நிச்சயம் வட்டி குறைப்பு இருக்கலாம்
 

நிச்சயம் வட்டி குறைப்பு இருக்கலாம்

சீனாவின் கொரோனா வைரஸால் அமெரிக்காவில் அடுத்து வரும் காலாண்டுகளிலும் பொருளாதாரத்திலும் தாக்கம் இருக்கலாம். ஆக பொருளாதாரத்தை மேம்படுத்த அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி நிச்சயம் வட்டி குறைப்பை செய்யலாம் என்றும் கூறினார்கள். உண்மையில் அப்படி ஒரு நிகழ்வு நடக்கவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஏனெனில் அமெரிக்காவின் முக்கிய பெரும் வர்த்தக நிறுவனங்கள், தொழில் சாலைகள் சீனாவில் உள்ளன. ஆக சீனாவின் வர்த்தகம் முழுவதும் முடங்கியுள்ள நிலையில், நிச்சயம் அது அமெரிக்கா நிறுவனங்களிலும் எதிரொலிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 நிறுவனங்கள் வீழ்ச்சியடையலாம்

நிறுவனங்கள் வீழ்ச்சியடையலாம்

இதன் காரணமாகவே நடப்பு காலாண்டில் அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்கள் வீழ்ச்சி காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதனால் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை பாதுகாப்பு கருதி வெளியே எடுத்து வருகின்றனர். அதோடு புதிய முதலீடுகளும் தவிர்க்கப்பட்டு வருகின்றன. இதனால் சர்வதேச சந்தைகள் அத்துணையும் பெரும்பாலும் வீழ்ச்சி கண்டு வருகின்றன.

டவ் ஜோன்ஸ் வீழ்ச்சி

டவ் ஜோன்ஸ் வீழ்ச்சி

இப்படி ஒரு நிலையில் தான் திங்கட்கிழமையன்று அமெரிக்காவின் டவ் ஜோன்ஸ் குறியீடானது 1000 புள்ளிகள் வீழ்ச்சி கண்டுள்ளது. அதுவும் ஒரே நாளில் 1000 புள்ளிகள் வீழ்ச்சி கண்டுள்ளது வரலாறு காணாத வீழ்ச்சி என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக திங்கட்கிழமையன்று டவ் ஜோன்ஸ் இண்டஸ்ட்ரியல் ஆவரேஜ் குறியீடு (DJIA) 1,031.60 புள்ளிகள் அல்லது 3.6% வீழ்ச்சி கண்டு 27,960.80 ஆக முடிவடைந்துள்ளது. இதே போல் அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனங்கள் பட்டியிடப்பட்ட S&P 500 INDEX 3.35% வீழ்ச்சி கண்டுள்ளது. இதே போல் நாஸ்டாக் குறியீடு 3.71% வீழ்ச்சியும் கண்டுள்ளன.

இவ்வளவு வீழ்ச்சி காணுமா?

இவ்வளவு வீழ்ச்சி காணுமா?

Wilmington Trust அமைப்பின் தலைமை முதலீட்டு அதிகாரி டோனி ரோத் இது குறித்து கூறுகையில், அமெரிக்க சந்தைகள் அடுத்து வரும் மூன்று அல்லது நான்கு வாரத்தில் 10 - 20% வீழ்ச்சி காணலாம் என்றும் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பல இடங்களில் பொது நிகழ்வுகள் கூட ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் இத்தாலியில் 152 பேருக்கு கொரோனா தாக்கம் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இதனால் அங்கு ரயில் சேவைகளும் விமான சேவைகளும் கூட தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் திங்களன்று இத்தாலியின் FTSE MIB குறியீடு 5.43% வீழ்ச்சி கண்டுள்ளது.

மற்ற நாட்டின் சந்தைகள்

மற்ற நாட்டின் சந்தைகள்

தென் கொரியாவின் கோப்சி கடந்த அக்டோபர் 2018லிருந்து ஒப்பிடும்போது மிக மோசமான வீழ்ச்சியை கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக திங்கட்கிழமையன்று மட்டும் கிட்டதட்ட 3.9% வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இதே ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு 1.8% வீழ்ச்சியும் கண்டுள்ளது. இதே லண்டனின் எப்டிஎஸ்இ 3.34% சரிவையும், இதே போல் பிரான்ஸின் சிஏசி 3.94%, ஜெர்மனியின் டிஏஎக்ஸ் 4.1% வீழ்ச்சியும் கண்டுள்ளன.

அமெரிக்கா நிறுவனங்கள் வீழ்ச்சி

அமெரிக்கா நிறுவனங்கள் வீழ்ச்சி

அமெரிக்க பங்கு சந்தையில் உள்ள பல முன்னணி நிறுவனங்கள் திங்கட்கிழமையன்று வீழ்ச்சி கண்டுள்ளன. குறிப்பாக டெல்சா நிறுவனம் 7.46% வீழ்ச்சி கண்டுள்ளது. சீனாவில் கொரோனாவின் தாக்கத்தினால் டெல்சா நிறுவனம் அதன் சீனாவின் உற்பத்தியில் வீழ்ச்சி கண்டுள்ளது. மேலும் டெல்சா அதன் விற்பனையில் மொத்தம் 10% சீனாவில் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போல் பாங்க் ஆப் அமெரிக்கா 4.74% வீழ்ச்சியும், ஜேபி மார்கன் சேஸ் & கோ 2.69% வீழ்ச்சியும், ஸ்டார்பக்ஸ் கார்ப்ஸ் 3.25% வீழ்ச்சியும், Exxon Mobil Corp 4.68% வீழ்ச்சியும், Marathon Oil Corp 6.43%, UnitedHealth Group Inc 7.84%, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் 4.97%, சிஸ்கோ சிஸ்டம்ஸ் இன்க் 4.96%, விசா இன்க் 4.80%, ஹெச்பி இன்க் 2.64% வீழ்ச்சி திங்கட்கிழமையன்று வீழ்ச்சி கண்டுள்ளன.

இவ்வறாக உலகினை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா மக்களை மட்டும் அல்ல, பொருளாதாரத்திலும் பெரிய அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Coronavirus outbreak is impact on world markets

Due to corona virus outbreak world stock markets are declined on Monday, particularly dow ends more than 1,000 points lower as fears of corona virus, and other indexes also were declined on Monday.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X