ரஷ்யா முதல் மெக்சிகோ வரை.. திவாலான நாடுகளின் சோகக் கதை..!

By Janakiraman
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜூலை 2015ல் சர்வதேச நிதிக் கழகத்திடம் வாங்கியிருந்த 1.7 பில்லியன் டாலர் கடன் காரணமாகக் கிரீஸ் நாடு திவாலாகும் நிலை ஏற்பட்டது. ஐரோப்பிய தலைவர்கள் சர்வதேச நிதிக் கழகத்தால் நடைமுறைப்படுத்தக் கட்டாயப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட சீர்திருத்தங்களை எதிர்த்துக் கிரீஸ் நாடாளுமன்றத்தில் 61% பேர் வாக்களிக்காததானால் ஏற்பட்ட சூழ்நிலையினால் தடுமாறி வந்தனர்.

 

கிரீஸ்-இன் இக்கட்டான நிலைமை ஐரோப்பிய சமூகத்தால் கேள்விக்குறியாகப் பார்க்கப்பட்டுவரும் வேளையில், வரலாறு நெடுக்கிலும் பல நாடுகள் இவ்வாறு திவாலாகியிருப்பதைக் கண்கூடாகக் காணலாம். இவ்விதமாக முதன்முதலில் ஒரு வளர்ச்சி பெற்ற நாடான ஸ்பெயின் 1557ல் திவாலானது.

இதனுடன் உலகில் திவாலான 4 நாடுகள் பற்றித் தான் இப்போது பார்க்க போகிறோம்.

ஐஸ்லாந்து

ஐஸ்லாந்து

2008 ஆம் ஆண்டு

கடன் : 85 பில்லியன் டாலர்

2001 ஆம் ஆண்டு ஐஸ்லாந்து நாட்டின் வங்கிகளை நெறிப்படுத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளால் அந்நாட்டின் மிகப்பெரிய வங்கிகள் எல்லாம் தங்களின் சுலபமான பணக் கொள்கைகளினால் பெறும் அளவிலான கடனில் தள்ளப்பட்டன.

அமெரிக்க நிதித் துறையின் கீழ் சர்வதேச நிதிச் சந்தை பாதிப்பிற்குள்ளானபோது, ஐஸ்லாந்து நாட்டின் வங்கிகள் அவர்களின் கடனை செலுத்தமுடியாத நிலை ஏற்பட்டது.

10 மடங்கு கடன் பெருகியது

10 மடங்கு கடன் பெருகியது

வங்கிகளின் நெருக்கடி 2008ல் பெரியதாக ஆனபோது ஐஸ்லாந்து நாட்டின் வளர்ச்சிக்கான குறியீட்டைப்போல் 10 மடங்கு அளவிற்கு வங்கிகளின் கடன் பெருகியது. மூன்று மிகப்பெரிய வங்கிகள் வீழ்ந்த நிலையில், நாடு மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்து அதன் பொருளாதாரம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10% அளவிற்குச் சுருங்கியது.

அதிஷ்டவசமாக ஐஸ்லாந்து இந்த நெருக்கடியிலிருந்து 2014ல் அதன் வேலை வாய்ப்பின்மை சதவீதம் 4% ஆகா இருந்தபோதிலும், மீண்டு வந்து 2008ல் இருந்ததை விட 1 % வளர்ச்சியும் ஏற்பட்டது.

அர்ஜென்டினா
 

அர்ஜென்டினா

2001ம் ஆண்டு

கடன் : 145 பில்லியன் டாலர்

1990 களில் பல்வேறு இலத்தீன் அமெரிக்க நாடுகளைப்போல் அல்லாமல் அர்ஜெண்டினாவின் பொருளாதாரம் ஐக்கிய அமெரிக்க டாலருக்கு எதிராக வீழ்ந்தபோது கடன்களுக்கான தனது கட்டுப்பாட்டினை இழந்து, கட்டுக்கடங்காத ஊழலால், பல பொருளாதார அதிர்ச்சிகளைத் தாங்க வேண்டி வந்தது.

2001ல் வேலைவாய்ப்பின்மை 20% மாக அதிகரித்தபோது, 100 பில்லியனுக்கு மேலான கடன் சுமையில் சிக்கித் தவித்தது.

ஸ்திரமற்ற தன்மை

ஸ்திரமற்ற தன்மை

அரசியல் ஸ்திரமற்ற தன்மை மற்றும் நடைபெற்ற கலவரங்களால், நாடே பற்றி எரிந்து இரண்டு வாரங்களில் ஐந்து அதிபர்களைக் கண்டது. அதிபர் பெர்னாண்டோ டே லா ரூவா ஹெலிகாப்ட்டர் மூலம் நாட்டை விட்டே ஓடினார்.

ரஷியா

ரஷியா

ஆண்டு : 1998

கடன் : 17 பில்லியன் டாலர்

1990களின் பிந்தைய காலகட்டங்களில், ஆசியாவின் நிதி நெருக்கடிகளினால் ஏற்பட்ட விளைவுகளைத் தொடர்ந்து, எண்ணெய்க்கான தேவை குறைந்து, ரஷிய பொருளாதாரத்தின் மீது அழுத்தம் ஏற்பட்டபோது, தேசிய உற்பத்தித் திறன் குறைவு ஏற்பட்டுக் கடனில் சிக்கித் தவித்தது.

1998ல் ரஷிய பங்கு சந்தை சந்தித்த ரூபிள் நெருக்கடியின் விளைவாகச் சந்தை மதிப்பில் 75% வீழ்ச்சி அடைந்து, தேசிய உற்பத்தி குறைவும் ஏற்பட்டது.

வேலைவாய்ப்பின்மை

வேலைவாய்ப்பின்மை

மொத்தமிருந்த 17 பில்லியன் டாலர் கடனில் 10 பில்லியன் டாலரை மட்டுமே சர்வதேச நிதிக் கழகத்திற்குச் செலுத்த முடிந்தது. 1998 ம் ஆண்டு வேலைவாய்ப்பின்மை 13 % ஆக அதிகரித்து ரஷிய பொருளாதாரம் 5.3% ஆகச் சுருங்கியது.

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ

ஆண்டு : 1982

கடன் : 80 பில்லியன் டாலர்

1970ம் ஆண்டுகளில், மெக்ஸிக்கோ பலம் வாய்ந்த பொருளாதாரத்தையும், வளர்ச்சியையும் கொண்டிருந்தது. இருப்பினும், லூயிஸ் எசெவேர்ரியா வின் கருவூலம் தொடர்பான விரிவான திட்டங்களின் காரணமாகப் பொதுக் கடன் சற்று வேகமெடுக்கத் துவங்கியிருந்தது.

1970களின் பிந்தைய காலக் கட்டத்தில் ஏற்பட்ட எண்ணெய் சந்தை நெருக்கடிகளின் காரணமாக மெக்சிக்கோவின் பொருளாதாரம் 50% மாகக் குறைவடைந்த போதும், அமெரிக்கா மற்றும் சர்வதேச நிதிக் கழகம் ஆகியவற்றுக்குச் செலுத்த வேண்டிய கடனிலிருந்து மீள முடியாமல் தவித்தது.

திவால்

திவால்

அடுத்த ஐந்து ஆண்டுகளில், மெக்சிக்கோவின் பொருளாதார வளர்ச்சிக் குறியீடு 11% மாக வீழ்ச்சி அடைந்தது. இலத்தீன் அமெரிக்கக் கடன் நெருக்கடியை உதறித் தள்ளி அந்நிய நாடுகளின் கடன்களைச் செலுத்த முடியாமல், மிகப்பெரிய நடைமுறை சாத்தியமற்ற பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்காகச் சர்வதேச நிதிக் கழகத்திடம் மேலும் கூடுதல் கடன் கேட்டு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தது.

வங்கிகளும், நாடுகளும், பெரும் தொழிலதிபர்களும் திவாலாகலாம். ஆனால் சாதாரண மனிதர்கள் திவாலாக முடியுமா? விட்டு விடுவார்களா?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Countries That Went Bankrupt

Countries That Went Bankrupt
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X