கொரோனா தொற்று அதிகரிப்பு.. 3வது சீன நகரம் முழு லாக்டவுன்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக நாடுகளில் 2வது கொரோனா தொற்று அலை குறைந்து மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் நிலையில், சீனாவில் தற்போது கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 3 நகரங்களில் கொரோனா தொற்றுக் காரணமாக மொத்த நகரமும் முழு லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

இதன் மூலம் 3 நகரங்களில் இருக்கும் 60 லட்சம் மக்கள் வீட்டில் முடங்கியுள்ளனர். இதோடு இப்பகுதியில் இருக்கும் தொழிற்சாலைகள், அலுவலகங்கள் முழுமையாக மூடப்பட்டு உள்ளது. மேலும் இந்த 3 நகரங்களில் மக்கள் மிகவும் அவசியம் இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

3வது சீன நகரம்

3வது சீன நகரம்

சீனாவின் வடக்கு மற்றும் தெற்கு வர்த்தகப் பகுதிகளை இணைக்கும் Lanzhou நகரம், தொடர்ந்து மங்கோலியா பகுதியில் இருக்கும் Ejin ஆகியவற்றைத் தொடர்ந்து புதிதாகக் கொரோனா தொற்று பரவியுள்ள Heilongjiang மாகாணத்தில் இருக்கும் Heihe பகுதியில் வியாழக்கிழமை முழு லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ரஷ்ய எல்லை

ரஷ்ய எல்லை

இதேபோல் இந்த 3 நகரங்களுக்கு மக்கள் உள்ளே நுழையவும், வெளியேறவும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் Heihe பகுதி ரஷ்ய எல்லை பக்கத்தில் இருக்கும் காரணத்தால் சீனா அரசு இப்பகுதியில் இருக்கும் 16 லட்சம் மக்களைக் கொரோனா பரிசோதனை துவங்கப்பட்டு உள்ளது.

கொரோனா பரிசோதனை
 

கொரோனா பரிசோதனை

மேலும் இந்த 3 பகுதியில் புதிகாக கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து கொரோனா பரிசோதனை செய்யச் சீன அரசு துவங்கியுள்ளது. மேலும் இந்தப் பகுதியில் பஸ் மற்றும் டாக்சி சேவைகள் முடக்கப்பட்டு உள்ளது.

கடுமையான விதிமுறைகள்

கடுமையான விதிமுறைகள்

2019 இறுதியில் கொரோனா தொற்று அதிகரித்த நாளில் இருந்து சீனா கடுமையான விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் உடன் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தி வருகிறது. இதனால் பிற நாடுகளைக் காட்டிலும் சீனா அதிகத் தொற்று எண்ணிக்கை கொண்டு இருந்த வேளையிலும் வேகமாக மீண்டு உள்ளது.

25 பேர்

25 பேர்

வியாழக்கிழமை காலையில் மட்டும் சீனாவில் 25 பேர் புதிதாகக் கொரோனா தொற்று உடன் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் Lanzhou, Ejin, Heihe ஆகிய 3 பகுதிகளும் முக்கிய வர்த்தகப் பகுதியாக இல்லாத காரணத்தால் எவ்விதமான பாதிப்பும் இந்தியாவிற்கும், வர்த்தகச் சந்தைக்கும் இல்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

COVID-19: Heihe 3rd Chinese city under complete lockdown

COVID-19: Heihe 3rd Chinese city under complete lockdown
Story first published: Thursday, October 28, 2021, 16:33 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X