2,000 பணியாளர்களை துரத்தி அடிக்க இருக்கும் டெல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்கா: மென்பொருள், கணினி தயாரிக்கும் நிறுவனமான டெல் அன்மையில் ஈஎம்சி கார்ப் என்ற நிறுவனத்தை முழுமையாக புதன்கிழமை கைப்பற்றியுள்ளது.

டெல் நிறுவன கம்ப்யூட்டர்களுக்கான தேவை சந்தையில் பெருகி வரும் இந்த சூழலில், ஈஎம்சி போன்ற தகவல் சேகரிப்பு நிறுவனம் உடனிருப்பது வளர்ச்சிக்கு உதவும் என்பதால் இந்த வர்த்தகத்தில் டெல் ஆர்வம் காட்டியது.

பணி நீக்கம்

பணி நீக்கம்

ஈஎம்சி கார்ப் நிறுவனத்தை வாங்கியதைத் தொடர்ந்து 2,000 முதல் 3,000 நபர்கள் வரை டெல் நிறுவனம் பணி நீக்கம் செய்யலாம் என்று ப்ளூம்பெர்க் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப உலகில் அதிரடி டீல்: ஈஎம்சியை 67 பில்லியன் டாலருக்கு வாங்கும் டெல்!

 

அமெரிக்கா

அமெரிக்கா

இதில் பெரும்பான்மையான பணி நீக்கம் அமெரிக்காவில் நடக்கும் என்றும் மேற்கோள்காட்டிச் சென்ற வியாழக்கிழமை அறிக்கை ஒன்றை ப்ளூம்பெர்க் வெளியிட்டிருந்தது.

பணிநீக்கம் செய்யப்பட்டோருக்கு 'புதிய இன்சூரன்ஸ்' முறை.. டிசிஎஸ் அறிமுகம்..!பணிநீக்கம் செய்யப்பட்டோருக்கு 'புதிய இன்சூரன்ஸ்' முறை.. டிசிஎஸ் அறிமுகம்..!

 

பணி நீக்கம் அதிகம் இருக்கும் பிரிவுகள்

பணி நீக்கம் அதிகம் இருக்கும் பிரிவுகள்

இந்தப் பணி நீக்கம் பெரும்பாலும் சப்ளை செயின், மார்க்கெட்டிங் மற்றும் பொது நிர்வாகம் போன்ற பிரிவுகளில் ஏற்படும் என்றும் இந்நிறுவனத்தில் இப்போது 140,000 பணியாளர்கள் வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

செலவுகளைக் குறைக்க நிர்வாகம் முடிவு

செலவுகளைக் குறைக்க நிர்வாகம் முடிவு

இந்த இரு நிறுவனங்கள் இணைந்துள்ள நிலையில் ஏற்பட இருக்கும் செலவுகளை குறைக்க நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது இதனால் சில ஊழியர்கள் குறைப்பு இருக்கும் என டெல் செய்தி தொடர்பாளர் டேவ் ஃபார்மர் கூறினார். இதைப் பார்க்கையில் இவர் பணி நீக்கத்தை உறுதி செய்வது போலவே தெரிகிறது.

ஈஎம்சி நிறுவனம்

ஈஎம்சி நிறுவனம்

சென்ற வருடம் அக்டோபர் மாதம் ஈஎம்சி நிறுவனத்தை 67 பில்லியன் டாலருக்கு விலை கொடுத்த வாங்க டெல் நிறுவனம் முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

இதேப் போன்று இந்தியாவிலும் மைக்ரோசாஃப்ட், ஐபிஎம், பிளிகார்ட், ஓலா போன்ற நிறுவனங்கள் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Dell to cut 2,000 jobs post EMC acquisition

Dell, EMC acquisition, layoffs, டெல், ஈஎம்சி , பணி நீக்கம்
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X