ஒரு பழத்தின் விலை 94,000 ரூபாயா? இப்படி எத்தனை பழங்களின் விலை உள்ளன?

By மு.சா.கெளதமன்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எதற்கெடுத்தாலும் பிராண்டெட் பொருட்களையே பயன்படுத்தும் நல்ல மனதுக்காரர்களே, உங்களுக்கான கட்டுரை தான் இது. ஆடைகள், அலங்காரப் பொருட்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள், வாகனங்கள் போன்றவைகளில் பிராண்டெட் பொருட்களைப் பயன்படுத்தி இருப்பீர்கள்... ஆனால் பழங்களில் பிராண்டெட் பழங்களைப் பார்த்திருக்கிறீர்களா...? பிராண்டெட் பழங்களின் விலைகள் என்னவாக இருக்கும் என்று யோசித்திருக்கிறீர்களா...? பாருங்கள்... விலையைக் கேளுங்கள்... முடிந்தால் வாங்கிச் சாப்பிட்டுவிட்டுக் கமெண்ட் செய்யுங்கள். முடிந்தால் எங்களுக்கும் ஒரு பீஸ் தாருங்கள்.

 

8. Buddha pear

இந்த ரக பழம் சீனாவில் கிடைக்கிறது. சிங் மங் ஹல்- என்கிற விவசாயி தான் புத்தர் பேரிக்காயை சாகுபடி செய்து வருகிறார். மொத்த சீனாவுக்கும் இவர் தான் சப்ளையராம். புத்தர் வடிவில் இருக்கும் பேரிக்கயைச் சாப்பிட்டால், நீண்ட நாட்களுக்கு வாழலாம் என்று யாரோ கிளப்பிவிட, புத்தர் மீது அதீத பக்தி கொண்ட சீனர்களும் ஒரு பழத்தை சுமாராக 55 சீன யுவான்களைக் கொடுத்து சாப்பிட்டு வருகின்றனர்.

ஒரு பழத்தின் விலை 94,000 ரூபாயா...?

எப்பா நாம எப்புடியா வாங்குறது என்று கேட்கிறீர்களா...? அலிபாபாவில் ஒரு செட்டுக்கு 5 - 10 டாலர் என்று எடை பொருத்து விலை மாறுபடுகிறது. என்ன ஒரு பிரச்னை என்றால் குறைந்தது 10 செட்டாவது அலிபாபாவில் ஆர்டர் செய்ய வேண்டும், என்றால் சுமாராக 50 - 100 டாலரைச் செலவழிக்கத் தயாரா.

7. Sembikiya queen strawberry

சொம்புல தண்ணி குடுக்கணுமா-ங்குற மாதிரியே பேர் இருக்கு. இந்த ஸ்ட்ராபெர்ரி பழம் தான், உலகின் அழகான மற்றும் சுவையான ஸ்ட்ராபெர்ரிகளாம். குறிப்பாக இதன் தோற்றப் பொலிவு மற்றும் வடிவத்துக்குத்தான் காசை இறைக்கிறார்கள். நம்மூரில் பழத்தில் ஒரு துண்டை நாமே எடுத்து சாப்பிட்டு பார்த்து வாங்குவது போல, இந்த ஸ்ட்ராபெர்ரியிலிருந்து ஒரே ஒரு பழத்தைச் சுவை பார்க்க 300 ரூபாய் கொடுக்க வேண்டும்.

 
ஒரு பழத்தின் விலை 94,000 ரூபாயா...?

இதையும் நம்ம அக்கியோ மொரிட்டோவின் ஜப்பான் தோழர்கள் தான் கண்டுபிடித்திருக்கிறார்கள் மக்களே. இந்த பழங்கள் இப்போது அமேஸானில் 8 பீஸ் 35 டாலருக்குக் கிடைக்கிறது. ஷிப்பிங் சார்ஜ் எக்ஸ்டரா சார். ஸ்ட்ராபெர்ரியும் வொயிட் க்ரீமும் நல்ல காம்பினேஷனால் ட்ரை பண்ணிப் பாருங்களேன்.

6. Shiranui Tangerine Mandarin Sumo Dekopon Hybrid

நம்மூர் கமலா ஆரஞ்சுக்குத் தாங்க இந்தப் பெயர். கொட்டைகளே இல்லாத இந்த ஆரஞ்சுப் பழம் தான் உலகின் இனிமையான ஆரஞ்சுப் பழங்களாம். Kiyomi மற்றும் ponkan என்கிற இரண்டு ரக ஜப்பானிய ஆரஞ்சு ரகங்களின் கலப்பு தான் இந்த Shiranui Tangerine Mandarin Sumo Dekopon Hybrid. இதைக் கண்டுபிடித்ததும் நம் நிலநடுக்க பூமிவாசிகளான ஜப்பானியர்கள் தான்.

ஒரு பழத்தின் விலை 94,000 ரூபாயா...?

இதுவும் அமேஸானில் ஒரு பழத்துக்கு வெறும் 40 டாலருக்கு கிடைக்கிறது. ஆக 6 + 5 = 11 சொலைக்கு 40*72= 2,880 ரூபாய் என்றால் ஒரு சுலைக்கு எவ்வளவு என்று வகுத்து பாருங்களேன்?

5. Ruby roman Grapes

இந்த திராட்சைக்கு பெயரே டேபிள் கிரேப் என்று தான் சொல்கிறார்கள். ஏனென்றால், ஒரு திராட்டை பழத்தின் சைஸ், பெரிய எலுமிச்சை சைஸுக்கு இருக்குமாம். டொயோட்டா-வின் தலைமையகமான ஜப்பானின், இசிகோவா மாவட்டத்தில் தான் இந்த ரக திராட்சைகள் கிடைக்கின்றன. 2008-ல் இருந்துதான் இந்த திராட்சை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஒரு கொத்தில் சராசரியாக 25 பழங்கள் இருக்கும். 25 பழங்கள் கொண்ட ஒரு கொத்தின் விலை இந்திய மதிப்பில் சுமார் 4500 ரூபாய்க்கு விற்கப்பட்டன. பெட்ரோல் விற்கின்ற விலைக்கு இவ்வளவு விலை எல்லாம் கொடுத்து நிறைய பேர் வாங்க இயலாது என்பதால், இசிகாவா விவசாயிகளே ஐந்து பழங்களை ஒரு கொத்தாக பிரித்து ஒரு கொத்துக்கு 13.25 டாலருக்கு (இந்திய ரூபாயில் ரூ 950-க்கு ) அமேஸானில், விற்கிறார்கள்.

ஒரு பழத்தின் விலை 94,000 ரூபாயா...?

அப்படி என்றால் இதில் தயாரிக்கப்படும் வொயினுக்கு என்ன விலை இருக்கும் என்று நீங்கள் ராதாரவி போன்று கூட்டிக் கழித்துப் பாருங்கள் கணக்கு கரெக்ட்டா வரும்.
அமேஸான் ப்ரைம் கஸ்டமர்களுக்கு ஏதாவது டிஸ்கவுண்ட் உண்டா சார்.

4. sekai ichi apple

சிகாய் ஈச்சி என்றால் "உலகின் சிறந்த" என்று பொருள். இந்த ஆப்பிளின் ஸ்பெஷாலிட்டியே இதன் சைஸ் தான். ஒரேயொரு ஆப்பிள் சுமார் 750 - 1000 கிராம் எடை இருக்கும். இது இன்றோ நேற்றோ பயிரிடப்பட்டு விலை உயர்ந்த பழம் அல்ல. 1974ல் இருந்து உலகம் இந்த ஆப்பிளைச் சுவைத்து வருகிறது. Red Delicious மற்றும் Golden Delicious-ன் கலப்பே இந்த சிகாய் ஈச்சி ஆப்பிள்.

ஒரு பழத்தின் விலை 94,000 ரூபாயா...?

Paytm, Flipkart, Snapdeal. Ola போன்ற நிறுவனங்களுக்கு ஃபண்டிங் செய்யும் பெரிய நிறுவனம் சாஃப்ட் பேங்க். இதன் தலைமையகமான ஜப்பான் தான் இந்த sekai ichi apple-ஐயும் பயிரிட்டுக் கொண்டிருந்தது. அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக உலகம் முழுவதும் பரவி இன்று உலகின் பல பகுதிகளிலும் பயிரிடப்பட்டு வருகின்றன. இந்த ஆப்பிள் அலிபாபாவில் ஒரு கார்டனுக்கு 45 - 50 டாலர் வரை

நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு கார்டனுக்கு எத்தனை பழங்கள் என்று சொல்லப்பட வில்லை. சுமாராக ஒரு ஆப்பிளின் விலை 20 - 30 டாலர் வரை இருக்கலாம். அப்படின்னா ஒரு ஆப்பிளோட விலை 1,400 ரூபாயா என்று வாயைப் பிளக்க வேண்டாம்.

3. Densuke Watermelon

ஹோண்டா, நிஸான் போன்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களின் தலைமையகமான ஜப்பான் தான் இந்த Densuke Watermelon-ஐயும் கண்டுபிடித்தது. உலகின் சுவையான தர்பூசணியில் இதற்குத் தான் முதலிடமாம். ஆண்டுக்கு சில ஆயிரம் பழங்கள் மட்டுமே அறுவடை செய்யப்படுகின்றனவாம். இந்த சில ஆயிரம் பழங்களைப் போட்டி போட்டுக் கொண்டு பல உலக நாடுகள் வாங்குவதால் தான் ஒரு பழத்தின் விலை சுமாராக 200 டாலரில் இருந்து ஏலம் தொடங்கப்பட்டு, அதிகபட்சமாக 6,000 டாலர் வரை விற்றிருக்கிறார்களாம்.

ஒரு பழத்தின் விலை 94,000 ரூபாயா...?

இதுவரை எந்த ஆன்லைன் தளத்திலும், இந்த பழத்தை வாங்குவதைக் குறித்த விவரங்கள் இல்லை. எனவே இந்தியாவில் கிடைத்தால் அரிதிலும் அரிது என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

2. Tayo No Tamago Mangoes

எக்ஸாட்லி... நீங்க சரியா தான் கணிச்சிருக்கீங்க... டயோ கொயா, சுயோன்னு பெயரை பாத்த உடனே இதுவும் நம்ம ஜப்பான்காரனுகளோடதுன்னு. "முட்டை சூரியனில் இருப்பது"- என்பது தான் இந்தப் பெயருக்கு அர்த்தமாம்.
மியாசாகி என்கிற மாவட்டத்தில் விளையும் இந்த ரக மாம்பழத்தின் எடை 350 கிராம் இருக்கும். சரிப்பா அதுக்கு என்ன என்று கேட்கிறீர்களா...? இந்த மாம்பழத்தை சர்க்கரை நோயாளிகள் கூட சாப்பிடலாமாம்... அதெப்படி என்று கேட்கிறீர்களா...? மற்ற மாம்பழங்களை விட இந்த மாம்பழத்தில் சர்க்கரையின் அளவு குறைவாகத் தான் இருக்குமாம். ஆனால் சுவையோ... அடிபொளி... சக்கரவள்ளியாக தித்திக்குமாம்.

ஒரு பழத்தின் விலை 94,000 ரூபாயா...?

இந்த ரக மாம்பழங்களை ஜப்பானியர்கள், ஒரு வலை போட்டு சூரிய ஒளி பழத்தின் மீது படும்படி பார்த்துக் கொள்வார்களாம். அதோடு இந்த பழங்கள் தானாகவே மரத்தில், கட்டி வைத்திருக்கும் வலையில் விழும் வரை காத்திருந்து தான் விற்பார்களாம். வியாபாரம் இருக்கு என்று விழுவதற்கு முன் பறிக்கவே மாட்டார்களாம். அதனால் தான் இந்த மாம்பழங்கள் உண்மையாகவே வாயில் கரையுமாம். சுவையோ.. சுகானந்தம் தான். இப்படி குழந்தையை வளர்ப்பது போல வளர்ப்பதால் தான் ஒரு மாம்பழத்தின் விலை 40 - 50 டாலராக இருக்கிறது. இந்திய மதிப்புக்கு நீங்களே *70 போட்டுக்குங்க.

1. Pineapples from the lost gardens of heligan

பொதுவாக வெப்ப நாடுகளில் தான் அன்னாசிப் பழங்கள் விளையும். ஐரோப்பிய கண்டம் முழுவதுமே குளிர்பிரதேசங்கள் தான். அதுவும் இங்கிலாந்தைக் குறிப்பிடவே வேண்டும். அப்படிப்பட்ட இங்கிலாந்தில் தான் இந்த Pineapples from the lost gardens of heligan விளைவிக்கப்படுகின்றன.

ஒரு பழத்தின் விலை 94,000 ரூபாயா...?

இதற்காகவே பிரத்யேகமா சில ஏற்பாடுகளை செய்து, குதிரைகளின் சாணம் மற்றும் சிறுநீரை பயன்படுத்தி இந்த ரக அன்னாசிப் பழங்களை விளைவிக்கிறார்கள். தோராயமாக இதில் ஒரு பழத்தின் சராசரி விலை 1000 பவுண்ட் ஸ்டெர்லிங். ஒரு பவுண்ட் ஸ்டெர்லிங் என்பது 94 ரூபாய்க்குச் சமம்.
இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால் இந்த அன்னாசி அத்தனை டேஸ்ட்டான ஒன்றெல்லாம் கிடையாது. ஐரோப்பாவில் விளைவிக்கப்படும் அன்னாசி என்பதைத் தாண்டி, எல்லாம் நம்மூர் தள்ளு வண்டியில் கிடைக்கும் அதே டேஸ்ட் தான்.

அதையும் மீறி உங்களுக்கு இந்த அன்னாசியைச் சாப்பிட வேண்டும் என்றால், ஒரு 94,000 ரூபாயைத் தயாராக வைத்துக் கொள்ளுங்கள் அவ்வளவு தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Does a Fruit Cost Rs 94,000? World Most Expensive Fruits

Does a fruit cost Rs 94,000...? world most expensive fruits.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X