டாலரை ஓரங்கட்டும் ரஷ்யா – சீனா! வர்த்தகத்தில் டாலரின் பயன்பாடு 50%-க்கு மேல் சரிவு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரஷ்யாவும் சீனாவும் தங்களது பொருளாதாரங்களை மதிப்பிடுவதற்கான உந்துதல் தீவிரமடைந்து வருகிறது. எப்படி என்று கேட்கிறீர்களா? வாருங்கள் அதனை பற்றித் தான் பார்க்கப் போகிறோம்.

 

இந்த மாதத்தில் ரஷ்யாவின் மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்கள் படி, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையில் மதிப்பிடப்பட்ட டாலரின் வர்த்தகத்தின் அளவு முதன் முறையாக 50 சதவீதத்திற்கும் கீழாக குறைந்துள்ளதாக தரவுகள் காட்டுகின்றன.

இன்னும் சொல்லப்போனால் இந்த இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தில் 46 சதவீதம் மட்டுமே, டாலரில் செட்டில்மென்ட் செய்துள்ளதாக தரவுகள் மூலம் அறிய முடிகிறது.

யூரோ பயன்பாடு அதிகரிப்பு

யூரோ பயன்பாடு அதிகரிப்பு

இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில், இதுவரை இல்லாத அளவுக்கு யூரோக்களில் வர்த்தகம் 30 சதவீதத்தினை எட்டியுள்ளது தான். இதே ரஷ்யாவின் ரூபிள் மற்றும் சீனாவின் யுவான் 24 சதவீதம் வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்பட்டன. இந்த மாற்றங்கள் டாலரிலிருந்து வியத்தகு மாற்றத்தினை கண்டுள்ளன. ஏனெனில் இது 2015 வாக்கில் ரஷ்யா சீன வர்த்தகத்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமாக பயன்படுத்தப்பட்டது.

டாலரின் ஆதிக்கம்

டாலரின் ஆதிக்கம்

கடந்த பல தசாப்தங்களாகவே டாலரின் வர்த்தகம் மேலோங்கிய நிலையில், கடந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டிலேயே டாலரின் ஆதிக்கம் சரிய தொடங்கியுள்ளது. ஆனால் இதே கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இருந்தே, யூரோவின் ஆதிக்கம் வலுப்பெற தொடங்கியுள்ளது.

பெட்ரோ டாலர்
 

பெட்ரோ டாலர்

டாலரின் ஆதிக்கம் இரண்டாவது உலகப்போர் தொடங்கியதில் இருந்தே, டாலரின் ஆதிக்கம், சர்வதேச சந்தையில் இருந்து வருகிறது. இதே 1973ம் ஆண்டில் இருந்தே ஒபெக் நாடுகள் ஆயில் விற்பனைக்கு டாலரின் விலையினையே நிர்ணயிக்கின்றன. இதற்கு பெட்ரோ டாலர் என்று பெயரையும் வைத்துள்ளன. இது அமெரிக்கா பொருளாதாரத்திம் ஒரு பெரும் தூணாக இருந்து வருகிறது.

டாலர் பரிமாற்றம்

டாலர் பரிமாற்றம்

இது அமெரிக்காவின் மிகப்பெரிய பற்றாக்குறை செலவினங்களுக்கு நிதியளிப்பதில் டாலர் பரிமாற்றம் முக்கிய பங்கு வகிக்கிறது. பல தசாப்தங்களாக ரஷ்யா, சீனா, ஈரான் வெனிசுலா மற்றும் பிற நாணயங்கள் டாலரை கடந்து செல்ல முயன்றன. ஆனால் அதெல்லாவற்றையும் டாலர் கடந்து சென்றுள்ளது. அமெரிக்கா பொருளாதாரத்தின் அளவு, அமெரிக்கா சந்தைகளின் ஆதிக்கம், நீண்டகால உலகளாவிய நிதி நடைமுறைகளின் வேகம் மற்றும் மாற்று நாணயத்தின் தோல்வி நம்பகமானதாக கருதப்படுதல் ஆகியவை வெளிவருவதே இதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Dollar – denominated trade between Russia and china dropped under 50%

Dollar – denominated trade between Russia and china dropped under 50%
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X