எச்-1பி விசா விதிகளை நெருக்கும் அமெரிக்கா.. இந்தியர்களுக்குப் பாதிப்பு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூ யார்க்: அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற காலத்தில் இருந்து எச்-பி விசா விதிகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும் அமெரிக்கர்களுக்கு அதிக வேலை வேலைவாய்ப்பினை உறிதி செய்ய வேண்டும் என்று நோக்கத்தில் செயல்பட்டு வருகிறார்.

அதன் ஒரு கட்டமாக டொனால்டு டிரம்ப் நிர்வாகமானது நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் எச்-1பி விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது கடைப்பிடுக்கும் விதிகளைக் கடுமை படுத்தியது மட்டும் இல்லாமல் விசா அளிப்பதிலும் பல திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது.

 எச்-1பி விசா

எச்-1பி விசா

எச்-1பி விசாவிற்கு இதற்கு முன்பு விண்ணப்பிக்கும் போது அதிகபட்சமாக 3 வருடம் வரையிலும் சில நேரங்களில் அதனை விடக் கூடுதல் காலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. அதற்குப் பிறகு வேண்டும் என்றால் முடியும் முன்பே புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம். அல்லது க்ரீன் கார்டு போன்றவற்றைப் பெற்று நிரந்தரமாகக் குடியேறவும் முயற்சி செய்யலாம்.

க்ரீன் கார்டு

க்ரீன் கார்டு

அனால் தற்போது எச்-1பி விசா அனுமதி வழங்கும் போது முழுமையாக 3 வருடங்கள் வரை அல்லது அதற்கு அதிகக் காலங்களுக்கு அளிப்பதினை குறைத்துள்ளனர். இதனால் குறைந்த காலத்தில் எச்-1பி விசா வைத்துள்ளவர்களால் க்ரீன் கார்டும் வாங்க முடியாது.

கூடுதல் ஆவணங்கள்

கூடுதல் ஆவணங்கள்

அமெரிக்கக் குடியுரிமை & குடிவரவு சேவைகள் அலுவலகம் பிப்ரவரி 22-ம் தேதி வெளியிட்டுள்ள கொள்கை குறிப்பாணையில் எச்-1பி விசா கேட்டு நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் விண்ணப்பிக்கும் போது எவ்வளவு நாட்களுக்கு அனுமதி வேண்டும், எத்தனை நாட்களுக்கு அமெரிக்காவில் இவர்களுக்கான பணி அளிக்கப்படுகிறது, எதற்காக இவ்வளவு நாட்கள் தேவைப்படுகிறது என முழு நீல விளக்க ஆவணங்களை விண்ணப்பிக்கும் போதே சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

கால அளவு குறைப்பு

கால அளவு குறைப்பு

எச்-1பி விசாவிற்கு விண்ணப்பிப்பவர்களில் வேலைக் காலம் 3 வருடங்களுக்குக் குறைவு என்றால் அது வரை மட்டுமே அவர்களுக்கு விசா அளிக்கப்படும். பின்னர்ப் புதுப்பித்துக்கொள்ள விண்ணப்பிக்கும் விதிகளை ஏற்கனவே கடுமை படுத்தியது மட்டும் இல்லாமல் முன்பு இருந்தது போன்று அளிப்பதும் இல்லை.

உள்ளூர் ஆட்களுக்குப் பணி

உள்ளூர் ஆட்களுக்குப் பணி

உள்ளூர் ஆட்களைப் பணிக்கு எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அமெரிக்கப் பொருட்களை வாங்குங்கள் மற்றும் அமெரிக்கர்களைப் பணிக்கு எடுங்கள் என்று டிரம்ப் அறிவித்துள்ள நிலையில் எச்-1பி விசா விண்ணப்பங்களை முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு நிராகரித்தும் வருகின்றனர்.

இந்திய நிறுவனங்கள்

இந்திய நிறுவனங்கள்

இந்திய நிறுவனங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக எச்-1பி விசாவிற்கு விண்ணப்பிப்பதனை பெரும் அளவில் குறைத்துள்ளன. டிசிஎஸ் மற்றும் விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் 50 சதவீதம் வரை குறைத்துள்ள நிலையில் இன்ஃபோசிஸ் 2017-2019 ஆண்டுகளுக்குள் அமெரிக்காவில் இருந்து 10,000 ஊழியர்களைப் பணிக்கு எடுப்பதாக அறிவித்தும் இருந்தது.

நாஸ்காம்

நாஸ்காம்

இந்திய ஐடி துறை ஒழுங்குமுறை ஆணையமான நாஸ்காம் அமெரிக்கக் கொண்டு வந்துள்ள புதிய எச்-1பி விசா கொள்கையால் மென்பொருள் வல்லுனர்களுக்குப் பெரிதாகப் பாதிப்புகள் இருக்காது என்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Donald Trump administration tightens H1B visa rules, Indians to be hit

Donald Trump administration tightens H1B visa rules, Indians to be hit
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X