இந்தியாவைத் தொடர்ந்து வம்புக்கு இழுக்கும் டொனால்டு டிரம்ப்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன்: அமெரிக்கக் அதிபர் பதவிக்குப் போட்டியிட ஆர்வமாக இருக்கும் குடியரசு கட்சியின் முக்கிய உறுப்பினர் டொனால்டு டிரம்ப் (Donald Trump) தனது பிரச்சாரக் கூட்டத்தில் இந்திய கால் சென்டர் அதிகாரியைப் போல் பேசி கேலி செய்துள்ளார்.

 

இதனை மறைக்கும் விதமாக அதேமேடையில் இந்தியா மிகச்சிறந்த நாடு எனவும் டொனால்டு டிரம்ப் கூறினார்.

ஏற்கனவே இவர், குடியரசு ஆட்சியில் இந்தியா, சீனாவிடம் இழந்த வேலைவாய்ப்புகளை அமெரிக்கா கண்டிப்பாக மீட்கும் எனத் தனது பிரச்சாரத்தில் பேசினார். தற்போது இந்தியர்களைப் போல் பேசி கேலி செய்துள்ளார்.

பராக் ஒபாமா

பராக் ஒபாமா

தற்போதைய அமெரிக்க அதிபரான பராக் ஒபாமா-வின் பதவிக் காலம் முடிவடைய உள்ளதால், அந்தச் சீட்டை பிடிக்க அமெரிக்காவில் மிகப்பெரிய போட்டி நிலவி வருகிறது.

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் கட்டியாளும் அதிபர் நாற்காலியைப் பிடிக்கப் பல அரசியல் தலைவர்கள் மட்டும் அல்லாமல் தொழிலதிபர்களும் களத்தில் குதித்துள்ளனர்.

இதில் ஒருவர் தான் இந்த டொனால்டு டிரம்ப்.

டொனால்டு டிரம்ப்

டொனால்டு டிரம்ப்

கடந்த சனிக்கிழமை டெலாவேரில் நடத்த பிரச்சாரக் கூட்டத்தில் அமெரிக்கா நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளை இந்தியா தட்டிப்பறிப்பதை சுட்டிக்காட்டி இந்திய கால் சென்டர் அதிகாரியைப் போல் பேசி கேலி செய்து பிரச்சாரக் கூட்டத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் டொனால்டு டிரம்ப்.

கால் சென்டர்
 

கால் சென்டர்

நியூயார்க் நகரத்தில் இருந்து ஒரு பில்லியனர் தனது கிரேடிட் கார்டு நிறுவனத்தைத் தொடர்புகொள்கிறார் என வைத்துக்கொள்வோம். அவர் போன் செய்கிறார்...

மறுமுனையில் நீங்கள் பேசிக் கொண்டு இருப்பது ஒரு இந்தியர். இது எப்படி வேலை செய்கிறது என்று நீங்களே பாருங்கள்.

இந்தியர்கள்...

இந்தியர்கள்...

இந்திய உச்சரிப்பில் பேசிய டொனால்டு டிரம்ப், "நீங்கள் எங்கே இருந்து பேசகிறீர்கள்..?" எனக் கேட்டார்.

அந்தக் கால் சென்டர் அதிகாரியும் தான் இந்தியாவில் இருந்து பேசுவதாகவும் பதில் அளிக்கிறார் என்று அவரே பதில் அளித்துக்கொண்டு இணைப்பு துண்டிக்கிறார். இவை அனைத்தும் இந்திய உச்சரிப்பில் (Accent) டொனால்டு டிரம் பேசுகிறார்.

இப்படித் தான் அமெரிக்க நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் பிற நாடுகளுக்கு அளித்துவிட்டு நாம் இப்போது தவித்து வருகிறோம் என அவர் கூறினார்.

மிகச்சிறப்பான நாடு

மிகச்சிறப்பான நாடு

இந்திய மிகப்சிறப்பான நாடு. நான் பிற நாட்டுத் தலைவர்களையும் நாட்டையும் வெறுக்கவில்லை. நம் நாட்டின் முட்டாள் தனத்தையும், நம் தலைவர்களைக் கண்டு தான் கவலைப் படுகிறேன் எனக் கூறினார்.

அதேபோல் சீனா, ஜப்பான், வியட்நாம் போன்ற நாடுகளையும் நான் வெறுக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

டெலாவேர்

டெலாவேர்

அமெரிக்க வங்கியியல் மற்றும் கிரேடிட் கார்டு துறையின் தலைமையாக டெலாவேர் திகழ்கிறது. இப்பகுதியில், பாங்க் ஆஃப் அமெரிக்கா, சிட்டி பேங்க், எம் அண்ட் டி வங்கி மற்றும் பிஎன்சி பைனான்சியல் சர்வீசஸ் குரூ போன்ற பல வங்கி மற்றும் கிரேடிட் கார்டு நிறுவனங்கள் உள்ளது.

டொனால்டு டிரம்ப்

டொனால்டு டிரம்ப்

அமெரிக்கச் சட்டத்திட்டங்களில் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்து அமெரிக்க வங்கியியல் மற்றும் கிரேடிட் கார்டு நிறுவனங்கள் சீனா, மெக்சிகோ, ஜப்பான், வியட்நாம், இந்தியா போன்ற நாடுகளுக்கு அதிகளவிலான வேலைவாய்ப்புகளை அளித்துவிட்டு மிகப்பெரிய அளவில் பணத்தைச் சம்பாதிக்கிறது.

இத்தகைய சட்டத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும் என டொனால்டு டிரம்ப் கூறினார்.

வேலைவாய்ப்புகள்

வேலைவாய்ப்புகள்

டெக்லானஜி முதல் உற்பத்தி சார்ந்த வேலைவாய்ப்புகள் வரை அனைத்தையும் அமெரிக்க வெளிநாடுகளிடம் இழந்து வருகிறது. அமெரிக்காவில் பல நிறுவனங்கள் மூடப்பட்டு வருகிறது. இனியும் இந்த நிலை நீட்டிக்கக் கூடாது எனக் குடியரசு கட்சியை ஆதரித்து டொனால்டு பேசினார்.

ஒபாமா மற்றும் ஹிலாரி கிளிண்டன்

ஒபாமா மற்றும் ஹிலாரி கிளிண்டன்

இக்கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் ஜனநாயக கட்சியின் முக்கியத் தலைவரான ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் குறித்துக் கடுமையாக விமர்சனம் செய்தார் டொனால்டு டிரம்ப்.

டொனால்ட் டிரம்ப் அதிரடி..

டொனால்ட் டிரம்ப் அதிரடி..

சில மாதங்களுக்கு முன் ஒரு கூட்டத்தில் பேசிய டிரம்ப். சீனா, இந்தியா போன்ற நாடுகளிடம் இழந்த வேலைவாய்ப்புகளைக் குடியரசு கட்சியின் ஆட்சியில் அமெரிக்கா கண்டிப்பாக மீட்டு அமெரிக்கக் குடிமக்களுக்குத் திருப்பி அளிக்கப்படும் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

ஆதரவு

ஆதரவு

ஆப்பிரிக்க - அமெரிக்க மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவைப் பெறும் விதத்தில் டொனால்டு டிரம் பேசி வருகிறார்.

இதற்கு என்ன பொருள்..?

இதற்கு என்ன பொருள்..?

அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் அமெரிக்காவில் பணிபுரியும் பிற நாட்டவர்களை ( இந்தியர்களை) பணியில் துரத்திவிட்டு அமெரிக்கர்களையும், ஆப்ரிக்கா அமெரிக்கர்களைப் பணியில் அமர்த்த வேண்டும் என்பதே அவர் கருத்துக்குப் பின்னால் இருக்கும் முழுமையான விளக்கம்.

டொனால்டு டிரம்ப் கருத்து

டொனால்டு டிரம்ப் கருத்து

சீனா, மெக்சிகோ, ஜப்பான், வியட்நாம், இந்தியா போன்ற நாடுகளிடம் நாம் இழந்த மிகப்பெரிய அளவிலான வேலைவாய்ப்புகளைக் கண்டிப்பாக மீட்க வேண்டும் இதனாலேயே ஆப்பிரிக்க - அமெரிக்க மக்கள் தன்னை அதிகளவில் ஆதரிப்பதாகவும் டொனால்டு டிரம்ப் சிஎன்என் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

58 சதவீதம்

58 சதவீதம்

ஆப்பிரிக்க - அமெரிக்க மக்கள் தொகையில் சுமார் 58 சதவீதம் பேர் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். இது மிகவும் மோசமான நிலை.

இவர்களின் வாழ்வாதாரத்தைக் கண்டிப்பாக மாற்றியமைக்க வேண்டும் எனவும் டிரம்ப் தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய கருத்துக்கள்

சர்ச்சைக்குரிய கருத்துக்கள்

டொனால்டு டிரம்ப் ஏப்போதும் சீனா, மெக்சிக்கோ, ஜாப்பான் போன்ற நாடுகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசி வருகிறார்.

இந்தியா

இந்தியா

இந்திய சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, ஆனால் யாரும் அதைக் கண்டுகொள்வதுமில்லை, கவனிப்பதுமில்லை எனக் கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US Republican presidential front runner Donald Trump, keep on criticize india and other countries. his time Trump using fake Indian accent to mock a Indian call center employee.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X