சீனாவிலிருந்து 13% நிறுவனங்கள் ஓட்டம்பிடிக்கும்.. டிரம்ப் எச்சரிக்கை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செப்டம்பர் 1 முதல் சீன பொருட்கள் மீது அறிவிக்கப்பட்ட புதிய வரி விதிப்புகள் அமலுக்கு வரும் காரணத்தால் இனி வரும் நாட்களில் சீனா-அமெரிக்கா இடையிலான வர்த்தகப் போர் தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு சீனாவை மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகையே அதிரவைத்துள்ளார்.

500 பில்லியன் டாலர்

500 பில்லியன் டாலர்

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்க அரசு ஏற்கனவே அதிகளவிலான வரியை விதித்துள்ள நிலையில், சில நாட்களுக்கு முன்பு அறிவித்த 500 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களின் மீது விதிக்கப்பட்ட 5 சதவீத கூடுதல் வரி செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.

உலக நாடுகளிலும் எதிரொலி

உலக நாடுகளிலும் எதிரொலி

இதன் எதிரொலி அமெரிக்கா, சீனா மட்டுமல்லாமல் உலக நாடுகளிலும் எதிரொலிக்கும். அனைத்தையும் விடச் சர்வதேச வர்த்தகச் சந்தையில் முதலீட்டு அளவுகள் பெரிய அளவில் மாறுபடும். இது வளரும் நாடுகளான இந்தியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் பெரிய அளவில் பாதிக்கப்படும்.

13 சதவீத நிறுவனங்கள்
 

13 சதவீத நிறுவனங்கள்

இந்நிலையில் செப்டம்பர் 1 முதல் அமெரிக்கா விதித்துள்ள வரி விதிப்புகளின் மூலம் சீனாவில் இருந்து சுமார் 13 சதவீத நிறுவனங்கள் அந்நாட்டை விட்டு வெளியேறும், அதுவும் மிகவும் குறைந்த நாட்களில் இது நிகழும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகை

வெள்ளை மாளிகை

சீன மோசான நிலைக்குள் தன்னைத் தள்ளிக்கொண்டு உள்ளது, எனக்குக் கிடைத்த தகவல்கள் படி, செப்டம்பர் 1ஆம் தேதிக்குப் பின் சீனாவில் இருந்து சுமார் 13 சதவீத நிறுவனங்கள் அந்நாட்டை விட்டு வெளியேறும் என டிரம்ப், அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு முக்கியமான கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

எதிர்கொள்ள முடியாது

எதிர்கொள்ள முடியாது

இது எனக்கு ஆச்சரியமாக இல்லை, எனக்குத் தெரிந்த வரையில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்குமே தவிரக் குறைவாக இருக்காது. மேலும் தற்போது அமெரிக்க விதித்துள்ள வரிவிதிப்புகள் சீனாவிலால் எந்த விதித்திலும் எதிர்கொள்ள முடியாது என்றும் டொனால்டு டிரம்ப்.

நாணய மதிப்பு

நாணய மதிப்பு

மேலும் அமெரிக்கா வரி விதிக்கப்பட்ட பின்பு, சீனா அதுநாள் வரையில் போலியாக உயர்த்தி வைத்திருந்த அந்நாட்டின் நாணய மதிப்புப் படிபடியாகக் குறைந்து வருகிறது. இதுவும் சீனாவை பெரிய அளவில் பாதிக்கும் என்றால் மிகையாகாது.

நஷ்டம் இல்லை

நஷ்டம் இல்லை

அமெரிக்கப் பொருட்கள் மீது சீனாவும் வரி விதித்திருந்தாலும், அமெரிக்கா விதித்துள்ள வரி மிகவும் அதிகம். இதனால் அமெரிக்காவிற்கு எவ்விதமான நஷ்டமும் இல்லை, பல பில்லியன் டாலர் லாபம் மட்டுமே கிடைக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: donald trump xi jinping
English summary

Donald Trump on fire: 13% companies will leave China

As a fresh set of US tariffs on Chinese goods kicks in on September 1, President Donald Trump Friday said 13 per cent of companies are going to leave China "in the fairly near future". After coming to power, Trump has imposed hefty tariffs on import of Chinese products, resulting in a trade war between the two biggest economies of the world.
Story first published: Sunday, September 1, 2019, 11:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X