1 பில்லியன் டாலர் கொடுத்துட்டு நகரு.. எவர்கிவன் கப்பலை சிறை பிடித்த சூயஸ் கால்வாய் நிர்வாகம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச கடல் வழி போக்குவரத்தின் மிக முக்கியக் கால்வாயாக விளங்கும் சூயஸ் கால்வாயில் எவர்கிவன் ராட்சத கப்பல் சிக்கிக்கொண்ட நிலையில், இக்கால்வாய் போக்குவரத்தை மொத்தமாக ஸ்தம்பித்தது.

 

இந்நிலையில் தரைதட்டிய எவர்கிவன் கப்பலை பல நாட்கள் போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்ட நிலையில், இந்தக் கப்பலை எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாய் அத்தாரிட்டி அமைப்பு கைப்பற்றித் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

இந்நிலையில் சூயஸ் கால்வாய் நிர்வாகம் செய்த வேலைக்குக் கிட்டதட்ட 1 பில்லியன் டாலர் கொடுத்துட்டு நகர உத்தரவிட்டுள்ளது.

 எவர்கிவன் கப்பல் நஷ்டஈடு

எவர்கிவன் கப்பல் நஷ்டஈடு

எவர்கிவன் கப்பலின் உரிமையாளரான Shoei Kisen Kaisha Ltd நிறுவனத்திடம், சூயஸ் கால்வாய் அத்தாரிட்டி கப்பல் கால்வாயில் ஏற்படுத்திய சேதம் மற்றும் தரைதட்டி நின்ற காலத்தில் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்புகளுக்கு நஷ்ட ஈடாக 900 மில்லியன் டாலர் தொகையைக் கோரியுள்ளது.

 900 மில்லியன் டாலர் நஷ்டஈடு

900 மில்லியன் டாலர் நஷ்டஈடு

இதுகுறித்து சூயஸ் கால்வாய் அத்தாரிட்டி அமைப்பின் செய்தி தொடர்பாளரான Ryu Murakoshi வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு அளித்த பேட்டியில் 900 மில்லியன் டாலர் நஷ்டஈடு-ஐ Shoei Kisen Kaisha Ltd கோரியுள்ளோம். இதற்கு இந்நிறுவனம் குறிப்பிட்டத் தொகையைக் குறைக்கக் கோரி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது எனத் தெரிவித்தார்.

 ஜென்ரல் ஆவரேஜ் கிளைம் முறை
 

ஜென்ரல் ஆவரேஜ் கிளைம் முறை

இந்நிலையில் எவர்கிவன் கப்பலின் உரிமையாளரான Shoei Kisen Kaisha Ltd ஏப்ரல் மாத துவக்கத்திலேயே ஜென்ரல் ஆவரேஜ் கிளைம் முறையைப் பயன்படுத்த முடிவு செய்து விண்ணப்பித்துள்ளது. இது என்ன ஜென்ரல் ஆவரேஜ் கிளைம் (general average claim).

 சரக்கு உரிமையாளர்களுக்கு ஆபத்து

சரக்கு உரிமையாளர்களுக்கு ஆபத்து

கடல் வழி போக்குவரத்தில் இதுபோன்ற ஏதேனும் அசம்பாவிதம் அல்லது பழுது ஏற்பட்டால் அதற்கான தொகையைக் கப்பல் உரிமையாளர் மட்டும் அல்லாமல் கப்பலில் சரக்கு வைத்துள்ளவர்களும் சரிசமமாகப் பங்கீடு செய்ய வேண்டும் என்பது தான்.

 நஷ்டஈடு தொகை

நஷ்டஈடு தொகை

இதன் மூலம் தற்போது கோரப்பட்டு உள்ள 900 மில்லியன் டாலர் தொகையில் 450 மில்லியன் டாலர் நஷ்டஈடு தொகையை Shoei Kisen Kaisha நிறுவனமும், மீதமுள்ள 450 மில்லியன் டாலரை எவர்கிவன் கப்பலில் சரக்கு வைத்துள்ளவர்கள் செலுத்த வேண்டும்.

 எவர்கிவன் கப்பல் ஊழியர்கள்

எவர்கிவன் கப்பல் ஊழியர்கள்

மேலும் எவர்கிவன் கப்பல் சுமார் 6 நாள் தரைதட்டி நிற்கும் இந்த நிலையிலும் சூயஸ் கால்வாய் நிர்வாகம் எவர்கிவன் ஊழியர்களைப் பாதுகாப்பாகவும், அனைத்து வசதிகளையும் செய்துக்கொடுத்து வருகிறது. இதேபோல் எவர்கிவன் கப்பல் ஊழியர்கள் அனைவருக்கும் சம்பளம் முழுமையாக அளிக்கப்பட்டும் வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Egypt Suez Canal Authority seized and Sued EverGiven Ship and demanding nearly $1 billion

Egypt Suez Canal Authority seized and Sued EverGiven Ship and demanding nearly $1 billion
Story first published: Wednesday, April 14, 2021, 17:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X